கேள்விகளும் பதில்களும் QUESTIONS AND ANSWERS COD #4 54-05-15 வில்லியம் மரியன் பிரான்ஹாம் கேள்விகளும் பதில்களும் QUESTIONS AND ANSWERS COD #4 பிரன்ஹாம் கூடாரம்,ஜெபர்ஸன்வில், இந்தியானா 54-05-15 1. இப்பொழுது, ஒவ்வொருவரும் இந்த பட்டியலை எடுத்து அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு தெரிந்த வரையில் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு மாத்திரமே நான் பதிலளிக்கிறேன், பாருங்கள். உங்களுடையது சரியாக பதிலளிக் கப்படவில்லையெனில், இன்னுமொரு கேள்வியை நீங்கள் வைத்திருப்பீர்களானால், பின் ஏன் நீங்கள் ... அதை நீங்கள் மறுபடியுமாக மேடையின் மீது வைக்க, அல்லது வந்து அதைக் குறித்து எங்களிடம் பேச, அல்லது எங்களால் முடிந்த எதையும் செய்ய நான் விரும்புவேன். ஒருக்கால் இங்கே சிலவற்றின் பேரில் நாம் இணங்காதிருக்கும் காரியங்களை சகோதரன் நெவிலும் நானும் பார்ப்போம்: பிறகு- பிறகு திரு. பாக்ஸ்டர், என்னுடைய கூட்டங்களில் சில நெருங்கிய உடனுழைப்பாளர்களில் அவரும் ஒருவர். திரு. பாக்ஸ்டர், நாங்கள் வருடக்கணக்காக ஒன்றாக இருந்து வருகிறோம். அவர் ஒரு சிறந்த வேதாகம வியாக்கியானி, ஆகுல் ஆயிர வருட அரசாட்சியில் அவருக்கு விசுவாசம் இல்லை. ஆகவே நான் வந்து, நான் கூறினேன். ...(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... நீங்கள் வேதத்தை ஆராயும்போது உங்களுடைய சொந்த சிந்தையை உபயோகிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த அறிவை அல்லது உங்கள் சொந்த சிந்தையை உபயோகிக்க முயற்சிப்பீர்களானால், நீங்கள்.?..இப்பொழுது, இந்த வேதவாக்கியங்கள், நான் உணர்கிறேன்... இங்கேயுள்ள சில சிறு கருத்துக்கள் மற்றும் இன்னுமாக சில இருக்கின்றன, ஆகவே முதலில் இவைகளுக்கு நான் பதிலளிக்க முயற்சிப்பேன். நான் இவைகளை வேறு பிரிக்க முயற்சித்தேன். நான் ஆகவே நான் இதை செய்ய வேண்டிய தாயிருக்கும், இவற்றில் உள்ள சிலவற்றை வெளியில் கொண்டு வர ஒத்துவாக்கிய ஏட்டை சிறிது நேரம் உபயோகிப்பேன். ஆகவே பிறகு, நான் தவறாக மேற்கோள் காட்டியோ அல்லது எதையோ செய்தால், நீங்கள் நேரடியாக அதற்கு என்னுடைய கவனத்தைக் கோரலாம், ஒரு குறிப்பை எனக்கு எழுதலாம், அதை என்னிடம் கூறலாம். இப்பொழுது நாம் இதை திறக்க முயற்சிக்கும் முன்... இப்பொழுது, நண்பர்களே, இதைச் செய்கின்ற காரணம், அது ஒரு நோக்கத்திற்காகவே என்றே நான் கூறுகிறேன். நீங்கள் எல்லாரும் அதை அறிந்துள்ளீர்கள். இந்த கூட்டம் ஒரு நோக்கத்திற்காகவே இருக்கின்றது. தேவன் அங்கே, அந்த பனிப்புயலிலிருந்து என்னை திரும்பச் செய்து, நேராக இங்கே இந்த அதே நோக்கத்திற் காகவே என்னை திரும்ப அனுப்பினார். இங்கே நீண்ட காலமாக கூடாரத்தில் ஏதோ ஒரு சிறு தவறான ஒன்று இருந்து வந்துள்ளது. நான் அதை கண்டு பிடிக்க விரும்புகிறேன். நான் அதை கண்டு பிடிக்கையில் அப்பொழுது அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியுமா என்று நான் பார்க்கப்போகிறேன். பாருங்கள்? அது சரி. சபையானது இசைவுடன் செல்ல நான் விரும்புகிறேன். இங்கே ஏதோ ஒரு சிறு தவறு இருக்கிறது, அதிலே நீங்கள் முன்னேற வில்லை. நீங்கள் ஜனங்கள் இரட்சிக்கப்படச் செய்கிறீர்கள், அது உண்மை, அது அற்புதமானது, ஆனால் நீங்கள் முன்னேற வேண்டிய விதமாக முன்னேறவில்லை. நாம் பிரசங்கிகளையும் மற்றவற்றையும் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும். செய்தியானது சென்று கொண்டேயிருக்க வேண்டும். நம்முடைய சகோதரனும் மேய்ப்பருமான சகோதரன் நெவிலும் மற்றும் நானும் - வெளியே கூட்டிச் சென்றேன், ஆலையின் வழியாக நாங்கள் ஒன்றாகச் சென்றோம், ஆகவே நான் காண விரும்புவதென்னவெனில்.... உங்களுடைய மேய்ப்பர்களில் ஒருவராக, அது - அது என்னுடைய கடமையாக இருக்கிறது. நேற்று மாலை... இப்பொழுது சபையில் ஏதாவது இருப்பதை நான் காண்கையில், அதன் காரணமாகத்தான் இந்த கூட்டத்திற்கு நான் விளம்பரத்தை அளிக்கவில்லை. அதை அப்படியே நான் அறிவித்து விட்டேன்; ஏன், எல்லாரும் வரவேற்கப்படுகிறார்கள். நிச்சயமாக, நீங்கள் வர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். (ஒலி நாடாவில் காலியிடம்- ஆசி) ஆகவே, ஆனால், அது சபையில் ........ ஆகவே நான் சிந்தித்தேன், " முதல் நாள் இரவில் இன்று சபை... வேதாகமத்தில் அதன் காலத்தை, பூகோள ரீதியாக, நாம் ஸ்தானரீதியில் எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், என்று நான் போதிப்பேனானால், அப்பொழுது சபை அதன் பேரில் நிச்சயமாக விழித்துக் கொள்ளும். பிறகு 'மிருகத்தின் முத்திரையை' குறித்து பேசி அது என்ன என்பதை அவர்களைக் காணச் செய்து; பிறகு 'தேவனுடைய முத்திரை பேசுவது' என்பதைக் குறித்து. அதுதான் ஆதரவா அல்லது எதிரா, அதுதான் இருளா அல்லது ஒளியா, அது உள்ளேயா அல்லது வெள்யேயா அதுதான் இப்பொழுது போதிக்கப்படவேண்டிய மிக அத்தியா வசியமான ஒன்றாக உள்ளது. . 2. ஆகவே நண்பர்களே, தேவனுக்கு முன்பாக தாழ்மையுடன் இதை என் இருதயத்திலிருந்து நான் கூறுகிறேன், எனக்கு எப்பொழுதுமே இல்லாத. . . கடந்த மூன்று இரவுகளாக நான் இந்த வார்த்தைகளைப் பேசும்படியாக பரிசுத்த ஆவியானவர் என்னை அபிஷேகித்ததைப் போன்று நான் ஒருபோதும் இவ்விதம் உணர்ந்ததில்லை. அது சரி. அது என்னை அப்படியே அசைத்தது. நான் வீட்டிற்கு செல்வேன், நான் வீட்டிற்குச் சென்றபோது அது அப்படிப்பட்ட ஒரு அபிஷேகமாயிருந்ததால் என்னால் உறங்க கூட முடியவில்லை. 3. இப்பொழுது, ஏதோ ஒன்றை எங்கோ ஒரு இடத்தில் கண்டு பிடிப்பேன் என்ற நம்பிக்கையில் நான் இவைகளை இங்கே வெளியே போட்டேன். பாருங்கள்? ஜனங்களின் எண்ணத்தை எல்லாம் இங்கே ஒரு துண்டு காகிதத்தில் காண்பது. நான் இதை இந்த வழியாக கண்டு பிடிக்கவில்லையெனில், கர்த்தர் அதை எனக்கு வெளிபடுத்தவில்லையெனில், அதை கண்டுபிடிக்கும் வரை நான் அதை செய்து கொண்டேயிருப்பேன். தேவன் அதை எனக்கு அருளுவார். அது சரி. ஆகவே நாம் அதை கண்டு பிடிக்கையில், அது ஒரு சிறிய, எங்கோ புதைத்து வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு பழைய பொன்பாளமாக (Wedge) இருக்கும், ஆனால் ஆகானும் ஒன்றைக் கொண்டிருந்தான். இந்த காரியத்தை நாம் அகற்றியாக வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். அப்பொழுது நாம் சரியாக வந்து தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் செல்ல ஏதுவாக இருக்கும். 4. இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நாம் தேவனுடைய வார்த்தையை திறப்பதற்கு முன்பாக... ஆகவே இப்பொழுது - இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்கும் காலையில் ஞாயிறு பள்ளி இருக்குமானால், நீங்கள் ..... உங்கள் ஞாயிறு ஆராதனையை தவறவிட நான் - நான் உங்களை கேட்க மாட்டேன், அது - அது உங்களுடைய சபைக்கு கடமையின் ஸ்தானம் ஆகும். அது சரி. ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லையெனில் நீங்கள் வந்து, காலையில் எங்களை சந்திக்கலாம். ஆகவே நாளை இரவு, ஞாயிற்றுக்கிழமை, உங்களுக்கு ஆராதனையில்லையெனில், நீங்கள் வரவேற்கப் படுகிறீர்கள். உங்களை எந்த நேரத்திலும் நாங்கள் கொண்டிருக்க மகிழ்ச்சி கொள்வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லா கிறிஸ்தவர்களுக்கும் என் சார்பாக வாழ்த்து தெரிவியுங்கள். நான் அடிக்கடி இங்கே வருவதில்லை . 5. நான் காலை அந்த அறையில் பார்த்துக்கொண்டிருந்தேன், ஒரு சிறு காகிதத்தில் அங்கே நான் எழுதி வைத்திருப்பது இங்கே இந்த சபைக்கு இன்னுமாக ஒரு நினைவு சின்னமாக இருந்து கொண்டு வருகிறது. நான் கர்த்தர் என்னை அழைக்கின்றார்" என்ற போது, நாமெல்லாருமாக அழுது புலம்பினோம். நான் முதல் நாள் இரவு சென்றது எனக்கு நினைவில் இருக்கின்றது. என்னுடைய முதல் அழைப்பை நீங்கள் எல்லாரும் நினைவில் வைத்திருக்கிறீர்களா, இங்கே யாராவது இருக்கிறீர்களா? நான் செயின்ட் லூயிசுக்கு செல்ல நீங்கள் எல்லாரும் எனக்கு பணம் கொடுத்து அனுப்பினீர்கள். அங்கே சிறு பெட்டி டாஹெர்ட்டி (Betty Daughterty) சுகமாகுதல். நான் தங்கினேன்... 6. நினைவில் கொள்ளுங்கள், நான் அணிந்து கொள்ள யாரோ ஒருவருடைய மேல் சட்டையை, கோட்டை இரவல் வாங்கினேன். ஏனெனில் அணிந்து கொள்ள கோட் என்னிடத்தில் இல்லை. நான் சென்றேன்- நான் செயின்ட் லூயிசுக்கு செல்ல ஒரு பழைய காரில் அமர்ந்தேன். அந்த சமயம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆகவே நான் ஒரு சகோதரனுடைய கோட்டை இரவல் வாங்கினேன், அது எனக்கு மிகவும் பெரியதாக இருந்தது. அதை என் கரத்தில் தூக்கிக் கொண்டிருந்தேன்; ஏனெனில் அப்பொழுது குளுமையாக இருந்தது, எனக்கோ கோட் ஒன்றும் இல்லாதிருந்தது. 7. ஆகவே பிறகு நாங்கள் செய்ண்ட் லூயிசுக்கு சென்றோம், நான் சென்று அங்கே சகோதரன் டாஹெர்ட்டியை சந்தித்தேன். அவருடைய சிறு பெண் பிள்ளையை, அங்கே இருந்த எல்லா டாக்டர்களும், நிபுணர்களும் மற்றும் ஆஸ்பத்திரிகளும் அவளை கைவிட்டன. அவள் ஒரு மிகவுமாக கோபங்கொள்கிற பைத்தியம் பிடித்தவளாக இருந்தாள். நகரம் முழுவதுமாக இருந்த ஊழியக் காரர்கள் எல்லாரும் ... எல்லாவிடங்களிலும் அங்கே அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தனர். நான் சென்று அவளுக்காக ஜெபித்தேன், அந்த ஏழை ஜனங்கள் நரைத்து போய் காணப் பட்டனர். அந்த சிறு பெண் அங்கே கூக்குரலிட்டு, அழுது, சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். 8. அவளுக்கு இனிமேல் மனித குரலே எழுப்ப முடியாத ஒரு நிலைக்கு வந்துவிட்டாள், ஒரு மிருகத்தை போல் சத்தமிட்டாள், ஓ, சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்களாக அவள் தொண்டை மிகவுமாக கரகரத்துவிட்டது ... அது முதுகு தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி (special meningitis) அல்லது ... இல்லை, முதுகு தண்டில் நரம்பு நடுக்கு வலிப்பு நோய் ஆகும். அவளுடைய சிறு உதடுகள் எல்லாம் அரித்துப் போயிருந்தன, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவளுடைய சிறு விரல்கள் முழுவதும் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, அவள் தன்னுடைய சிறு விரல்களை கடித்துக் கொண்டிருந்தாள், கூக்குரலிட்டுக் கொண்டு அப்படியே இருத்தல், இன்னும் அதைப் போன்று காரியங்கள். 9. ஆகவே நான் ஜெபித்துவிட்டு சபைக்குச் சென்றேன். அநேக மணிக்கணக்காக காத்துக் கொண்டிருந்தேன். அங்கே அந்த பழைய காரில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தேன். பரலோகத்திலிருந்து நான் கேட்கும் வரை அந்த கேஸை, காரியத்தை விடுவதாக நான் இல்லை. அந்த காரில் நான் உட்கார்ந்து கொண்டிருந்த போது, ஒரு தரிசனம் எனக்கு முன்பாக வந்தது, அது "சென்று தகப்பனிடம், அந்த தகப்பனிடம் கூறு ...'' என்றது. அது, ''நீ சென்று அந்த ஸ்திரீயிடம், அன்றொரு நாள், நகரத்தில் ஒரு சிறிய வெள்ளை, கைப்பிடி வைத்த வெந்நீர்க் கொதிக்க வைக்கும் பாத்திரத்தை வாங்கினாள். அதில் அதற்கு முன்னர் தண்ணீரே இல்லை.'' இல்லை, ''மேசையின் மூன்றாவது அறையில் பார்க்கும்படி அவளிடம் சொல். அவள் ஒரு காகிதத்துண்டில் ஒரு கைக்குட்டையை காண்பாள், அது முன்னதாக ஒருபோதும் உபயோகப்படுத்த படவேயில்லை. அதை தண்ணீரால் நிரப்ப அவளிடம் கூறு. உன்னுடைய வலது கரத்தின் மேல் தகப்பனை நிறத்தி, பாட்டனாரை உன்னுடைய இடது கரத்தின் மேலும் நிறுத்தி, 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே...' என்று திரும்பத் திரும்ப கூறு. நீ அதை ஆரம்பிக்கையில் அவள் துண்டை அதன் முகத்தின் மேல் துடைக்கட்டும். பிறகு ஜெபத்தின் மத்தியில் அவள் அதனுடைய கைகளையும், பிறகு அதன் காலையும் தொடும்படி செய். பிறகு நின்று 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்று கூறு,'' என்று அது கூறினது. 10. என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா, உனக்குத் தெரியுமா? சரியாக அவள் அங்கேயே சுகமாக்கப்பட்டாள். நாங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஒன்றாக தெருவில் நடந்து சென்று, ஒன்றாக சோடா பாப் குடித்தோம். அது சரி. அது சரி. அது செயின்ட் லூயிஸை கலக்கினது; அங்கே என்னுடைய கூட்டத்தில் முதல் இரவில் பதினான்காயிரம் பேர்கள்... அது சரி. செயின்ட்... 11. அதிலிருந்து நான் வந்து விட்டது ஒரு மிக கவலைக் குரியதாகும்; சென்று அவர்களை ஒரு வரிசையில் வர ஆரம்பித்து, ஒருவருக்கு பின் ஒருவர், ஒருவருக்கு பின் ஒருவர் அது முடிவுறும் வரை ஒரு வீட்டிற்கு சென்று தங்குவது, பிறகு வீட்டிற்கு திரும்புவது, எல்லா ... கூட்டங்களில் அது சிறந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 12. சரி, இப்பொழுது நாம் இந்த வார்த்தையின் ஆக்கியோனிடம் பேசுகையில் நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோம். 13. எங்கள் பிதாவே, எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தில், உம்மை நாங்கள் அணுகுகிறோம். அவருடைய நாமத்தில் நாங்கள் தெய்வீக இரக்கத்திற்காகவும், உமக்கெதிரான எங்களுடைய மீறுதல்களையும் பாவங்களையும் நீர் மன்னிக்க வேண்டுமென்றும் நாங்கள் கேட்கிறோம். இந்த சிறு சபையில் இன்றிரவு ஏதாவது பாவம் இருக்குமாயின், கர்த்தாவே, இங்கே நின்று கொண்டிருக்கின்ற ஊழியக்காரன் என்ற முறையில், ஆடுகளுக்கு மேய்ப்பன் என்ற முறையில் நாங்கள் ஜெபிக்கிறோம், வேதாகமம், "... தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையும் குறித்தும், எச்சரிக்கை யாயிருங்கள்'' என்று கூறுகின்றது. ஆகவே இப்பொழுது பிதாவே, நீர் தாமே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னிக்க வேண்டுமென்று, அவர்களுக்காக நான் பரிந்து பேசுகிறேன். ஜனங்கள் மத்தியில் இருக்கும் வியாதியை சுகப்படுத்தும், பரலோகப் பிதாவே, உம்முடைய இரக்கங்கள் இப்பொழுது எங்கள் மீது இருக்க நான் ஜெபிக்கிறேன். 14. அநேக வீடுகளிலிருந்தும், அநேக ஜனங்களிடமிருந்தும் சாதாரண விண்ணப்பங்கள், சாதாரண கல்வியிலிருந்து மிகவும் அப்பாற்பட்ட மிக ஆழமான வேதாகம கேள்விகள், காகிதத்தில் எழுதப்பட்டு இங்கே எனக்கு முன்பாக இருக்கிறது. இவைகளை இப்பொழுது எடுத்து, அறைக்குள் நடந்து சென்று, ஜெபித்து, வெளியே நடந்து வந்து, இவைகளை இங்கே பிரித்து, பதிலளிக்கப் படவேண்டியவைகளை ஒரு பக்கத்தில் வைத்து, வேதாகமத் திற்குள் செல்ல வேண்டியவைகளை மறு பக்கத்தில் வைத்து கர்த்தராகிய இயேசுவே உம்முடைய உதவியை நாங்கள் கோருகிறோம். கர்த்தாவே, இந்த வேளையிலே அது எனக்குத் தெரிந்தவரையில் உள்ளது. 15. நீர் தாமே இங்கேயிருந்து பொறுப்பெடுத்து கொண்டு, இங்கே பேசுகிறவரின் உதடுகளை, கேட்கிறவரின் காதுகளை, உம் முடைய ஜனங்களை அபிஷேகியும். ஆகவே பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து வார்த்தையை இப்பொழுது கட்டுக்குள் எடுத்துக் கொண்டு அதை ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் கொண்டு சென்று, அதே இரக்கத்தின் ஆவியால் அது பெற்று கொள்ளப் படட்டும், அது அவ்விதமாகவே அளிக்கப் படுவதாக. இன்றிரவு ஆராதனையானது முடிவுற்ற பிறகு, நாங்கள் வீட்டிற்கு சென்று, 'அவருடைய ஆசீர்வாதங்களினாலும் பிரசன்னத்தினாலும் நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?'' என்று கூறட்டும். கர்த்தாவே, என்ன கூறுவ தென்று தெரியாதவனாக, இந்த கேள்விகளுடன் என்னையே உம்மிடத்தில் சமர்ப்பிக்கின்றேன், பதிலுக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.. ஆமென். 16. நண்பர்களே உங்களுடைய பயபக்திக்காக உங்களுக்கு நன்றி. இந்த கேள்விகளில் அநேகம், பெரும்பாலானவை என்ன வென்பதை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். சகோதரன் பில், தயவு கூர்ந்து அடுத்து வாரம் முழுவதும் தொடருங்கள். தயவு செய்து இன்னும் ஒரு வாரம் தங்குங்கள். தயவு செய்து சிறிது அதிகமாக தங்கியிருங்கள். சகோதரன் பில், தயவு கூர்ந்து அடுத்து வாரம், சற்று அதிகம் தங்கியிருங்கள், இந்த விதமான ஆகாரத்திற்காக எங்கள் ஆத்துமாக்கள் பசியாயுள்ளன. இந்த சமைதாமே போதிக்கிற... அது வெறும் ... அது தவறாக இருக்கிறது. அது தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனக்கு இரண்டு பையன்கள் உள்ளனர், இரண்டு வயது ... இது, நான் ஒன்றாக கலந்துவிட்டிருக்கிறேன், அதைக் குறித்து... என்று யூகிக்கிறேன். இப்பொழுது இங்கே, அதையும் கூட நான் இங்கே வைத்திருக்கட்டும், அது ஒரு தனிப்பட்ட ஒரு காரியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. சகோதரன் பில், நீர் தாமே- நீர் தாமே இன்னும் ஒரு வாரம் இருக்க விரம்புவீரா? இன்னும் ஒரு வாரம் இந்த விதமான சுவிசேஷ போதனையை நாங்கள் கொண்டிருக்க விரும்புகிறோம். என்னுடைய வேண்டுகோள் என்ன வென்றால் நீர் இன்னும் ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டும் என்பதே. நீர் இன்னும் சிறிது காலம் தங்கிருக்க நான் மிகவுமாக விரும்புகிறேன். உமக்கு தெரியும் நாங்கள் எப்பொழுதுமே... இன்னும் அதிகமாக நாங்கள் கற்றுக் கொள்வோம். இப்பொழுது, தயவு கூர்ந்து இன்னும் ஒரு வார காலம் தங்கியிருப்பீரா? சகோதரன் பில், தயவு செய்து எங்களுக்கு இன்னும் ஒரு வார காலம் பிரசங்கம் செய்யவும். இது எங்களுக்கு தேவையா யிருக்கிறது. சகோதரன் பில், என்னுடைய ஜெபம் என்னவென்றால் தேவன் உங்கள் மனதை மாற்றி இன்னுமொரு வாரம் உங்களை தங்கச் செய்வார் என்பதே. என்னுடைய கேள்வி: பறக்கும் தட்டுகள் என்றால் என்ன, இவைகள் ஒரு அடையாளத்திற்காக தேவனிடமிருந்து அனுப்பப்படுகிற ஏதோ ஒன்றா? நீங்கள் இன்னும் ஒரு வாரம் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இன்னும் ஒரு வாரம் தங்கியிருங்கள். 17. (சகோதரன் பிரன்ஹாம் சகோதரன் நெவிலுடன் பேசு கின்றார் - ஆசி) 18. இப்பொழுது, இங்கே இன்னும் ஒன்று இருக்கின்றது, அது ..... நான்--நான் இந்த கேள்வியை நான் மெச்சுகிறேன். இப்பொழுது இந்த பரிசுத்த இடத்தில், இப்பொழுது நின்று கொண்டிருக்கிற, என்னுடைய நியாதிபதியான சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே... நான் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன், கர்த்தருடைய ஆவியானவர் இந்த கேள்வி இன்றிரவு இங்கே இருக்கும் என்று என்னிடம் கூறினார். இதைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது, ஆனால் இது இங்கே இருக்கும் என்று எனக்கு தெரியும்: யெகோவா சாட்சிகள் ஒரு தவறான குழுவா? 19. பாருங்கள், யாரோ ஒருவர் ... பரிசுத்த ஆவியானவர், அந்த இடத்தில் அங்கே. ... இங்கே வருவதற்கு முன்னர், என்னுடைய குளியலறையில் நின்று கொண்டிருந்த போது, என்னுடைய பயபக்திக்குரிய நியாயாதிபதியான தேவன் தாமே என்னிடம், ''அது மேடையின் மேல் இருக்கும், அதைக் குறித்து ஒன்றும் கூறாதே; அப்படியே சென்று கொண்டிரு" என்று கூறினார். பாருங்கள்? ஆகவே நான் ... கடந்த இரவு நான் என்ன கூறினேன் என்று உங்களுக்கு தெரியும், அப்படிதானே? சரி, அது அதுவே தான். 20. சரி, இப்பொழுது இங்கேயுள்ள சிலவற்றின் பேரிலிருந்து நாம் துவக்குவோம். 21. நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் குறித்து எதுவும் எதிராக பேசவும், யாரோ ஒரு நபரைக் குறித்தோ அல்லது ஒரு தனிப்பட்ட நபரைக் குறித்து கூற எனக்கு விருப்பம் இல்லை. அதை நான் எப்படி போதிக்க விரும்புகிறேன் என்றால் ... முழு காரியத்தையும் ஒன்று சேர்த்து காண்பிப்பது. ஆகவே - ஆகவே உங்களுக்கு புரிகின்றதா, புரிகின்றதா? நான் இங்கே நின்று, "இப்பொழுது, சகோதரன் நெவில் இன்னார் - இன்னார், மற்றும் குறிப்பிட்ட - குறிப்பிட்ட ஒருவர்''.... என்று கூறுவேனானால், நான் அவரைக் குறித்து இவ்விதமாகக் கூற இருப்பேனானால், நான் அவருடைய வீட்டிற்கு சென்று அவரை வெளியே அழைத்துச் சென்று அதை குறித்து அவருடன் பேசுவேன். பாருங்கள், நான்-- நான் சகோதரன் நெவிலிடம் கூறுவேன். 22. ஆனால் இப்பொழுது, இங்கே சில கேள்விகள் உள்ளன. இப்பொழுது, எங்கிருந்து ஆரம்பிப்பதென்று எனக்குத் தெரிய வில்லை, இங்கே ஒன்றாக கிடக்கின்றது. அது கூறுகிறது; 25. கத்தோலிக்க சபையுடன் பிராட்டெஸ்டென்ட் சபை கொண்டிருக்கின்ற தொடர்பு எந்த விதமானது என்ற கூற விழைகிறீர்? 26. "மிருகத்தின் சொரூபம்'' என்றால் என்ன அர்த்தம்? 23. இப்பொழுது, இந்த கேள்விகளில் ஒன்று கடைசியிலிருந்து ... ஒருக்கால் ஜனங்களிடத்திலிருந்து ... இப்பொழுது, என்னால் இயன்றவரை, தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு, எனக்குத் தெரிந்த வரை அவைகளுக்கு பதிலளிப்பேன். இப்பொழுது அவர் தாமே ஞானத்தை அளிப்பாரானால், ஏனெனில் நான்- -நான் இங்கே மேடையிலிருந்து அவைகளை எடுத்தேன் என்பதை தேவன் அறிவார். இப்பொழுது, கத்தோலிக்க சபையுடன் பிராட்டெஸ்டென்ட் சபை கொண்டிருக்கின்ற தொடர்பு எந்த விதமானது என்று கூற விழைகிறீர்? 24. இப்பொழுது, தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு முதலாவதிற்கு நான் பதிலளிப்பேன். நான் கூறினேன், கத்தோலிக்க சபை... கடந்த இரவு நாம் பார்த்தோம், மிருகத்தின் முத்திரையானது ரோமிலிருந்து வரவேண்டுமென்று நாம் பார்த்தோம். அது சரியா? அது ரோமாபுரியைத் தவிர வேறு எந்த தேசத்திலிருந்தும் வராது. அங்கேதான் அது சிங்காசன மிட்டிருக்கிறது, அங்கே தான் அது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க ஜனங்களுக்கெதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ என்னிடம் ஒன்றுமில்லை என்று நான் கூறியுள்ளேன். நாமெல்லாரும் பரலோகத்திற்கு செல்ல முயன்று கொண்டிருக் கின்ற மானிடர்கள். 25. போதிக்கிறதில் போப் ஒரு ஆள், காண்டர்பரியின் ஆர்ச் பிஷப் மற்றொருவர் ஆவார், மற்றொருவர், மற்றொருவர், மற்றொருவர்; நானும் போதகர்களில் ஒருவன், அவ்வளவுதான். நான் ஒருக்கால் ஒரு அதிதீவிர மூடபக்தியுள்ளவன் என்றும், நான் தவறாயிருக்கிறேன் என்றும் அவர்கள் போதித்து கூறுவர். எனக்கு ஒரு உரிமை. . . வேத வசனத்தினால் அதை நான் நிரூபிக்கக் கூடுமானால் அல்லது நான் ஒரு அதிதீவிர மூடபக்தியுள்ளவன் என்று வேத வசனத்தைக் கொண்டு அவர்களால் நிரூபிக்கக் கூடுமானால் நான் ஒரு மூடபக்தியுள்ளவன் தான். ஆனால் அவர்கள் தங்களுடைய ஸ்தாபிதத்தில் தவறாயிருக்கின்றனர் என்று வேத வசனத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியுமானால், அப்படியானால் அது தவறு தான்; வேத வசனம் சரியானது. இப்பொழுது ஒரேயொரு இடம் மாத்திரம் உங்களுக்கில்லை, அது வேதாகமம் முழுவதுமாக எல்லா இடத்திலும் வரவேண்டும். 26. இப்பொழுது, நான் 'கத்தோலிக்க சபைதான் தாய் சபை'' என்று கூறினேன், அது முற்றிலும் சரியானதே. சபை ஸ்தாபனங்களை எடுத்து கொள்வோமானால், கத்தோலிக்க சபை தான் தாய் சபை. முதலாவதாக உருவாக்கப்பட்ட முதல் சபை கத்தோலிக்க சபை தான், சுமார் .... சிறந்த வரலாற்றில், சுமார் கி.பி.606ல் இருக்க காண்போம், அது ஆதி பிதாக்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்று அப்போஸ்தலர்களின் காலத்தில் இருந்திருக்கும். அவர்கள் மரித்து போய் சிறு கொள்கைகளுடன் சிதறிப் போகத் துவங்கினர். ஆகவே மனந்திரும்பச் செய்யப்பட்ட ரோமர்கள், ரோம சாம்ராஜ்ஜியம், நாட்டை கட்டுக்குள் கொண்டு வந்தது, பிறகு சபையும் நாடும் ஒன்று சேர்ந்து "உலகளாவிய மதம்'' என்ற ஒரு மதத்தை ஆரம்பித்தனர். "கத்தோலிக்கம்" என்னும் வார்த்தைக்கு "உலகளாவிய'' என்று அர்த்தம் ஆகும். அவர்கள் சபையை ஸ்தாபித்தனர், அது தான் முதலாவதான மதம், கிறிஸ்தவ மதம், உலக சரித்திரத்திலே ஸ்தாபிக்கப்பட்ட ஒன்று. 27. யூத மதம் ஒரு ஸ்தாபனமாக இருந்ததில்லை, அது ஒரு சுதந்திர ஜனமாகும். அவர்கள் சபைகளைக் கொண்டிருந்தனர், ஆனால் ஸ்தாபனம் அல்ல. தேவன் ஒரு ஸ்தாபனத்துடன் அல்ல ஒரு தேசத்தினுடனே மட்டும் இடைபடுகிறார். அது ஒரு தேசம் ஆகும். 28. ஆகவே இப்பொழுது. கத்தோலிக்க சபைதான் முதலாவது ஸ்தாபனமாகும். அந்த ஸ்தாபனம் என்ன என்பதை கண்டு பிடிக்கத்தக்கதாக வேதாகமத்திலிருந்து அதை நாம் எடுத்தோம். ஆகவே தேவனுடைய வார்த்தையின்படி, அது தனியொரு மனிதனால், ஒரே மனிதனால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வேதத்தின்படி அந்த மனிதன் ரோமாபுரியின் ஏழு மலைகளின் மேல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற ஒரு சபையில் இருக்க வேண்டும். அங்கே ...... அவன் உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தேசத்திலும் அரசாளுகிற வல்லமையை, மத சம்பந்தமான அரசாளுகிற வல்லமையை கொண்டிருக்க வேண்டியவனாக இருக்கிறான். மற்றொருவன் உலகத்தில் கிடையாது. 29. ஆகவே-ஆகவே கம்யூனிசம், இயேசு பேசின அந்திகிறிஸ்து அல்ல- அல்ல என்று நாம் பார்த்தோம். ரஷ்யாவைபோல, கம்யூனிசம் ஒரு தேசம் அல்ல, கம்யூனிசம் ஒரு ஆவி ஆகும். அமெரிக்கா - அதனுடன் அது சபைகளில் இருக்கிறது, அது ஜனங்களுக்குள் இருக்கிறது, அது வியாபாரத்தில் இருக்கிறது, அது எல்லா இடத்திலும் இருக்கிறது. கம்யூனிசம், அதனுடைய ஆவி, பள்ளிகளில் இருக்கிறது, வீடுகளில் அது இருக்கிறது, எல்லா இடத்திலும் இருக்கிறது. 30. பிறகு - பிறகு அவர்கள் இந்த சபையை ஸ்தாபித்தவுடன் அது முரணாக ...... நாம் இப்பொழுது ஏழு சபை காலங்களையும், தீர்க்கதரிசனத்தையும், இங்கே சரியாக நமக்கு வேதத்தின் மூலமாக தேவன் கொண்டு வந்த வழியை பார்த்தோம். ஒவ்வொரு காலமும் வேதத்தின்படியேயும், வரலாற்றின் வாயிலாகவும் வேதாகமத்தின்படியேயும் நாம் பார்த்தோம்; ஒவ்வொன்றும் அந்த நேரத்தில் இருண்ட காலங்களினூடாக வந்தது. பிறகு இருண்ட காலத்தில் கத்தோலிக்க சபை உருவாக்கப்பட்டது. 31. பிறகு சீர்திருத்தம் வந்தது, அது மார்டின் லூத்தர் ஆகும். மார்டின் லூத்தர் ஒரு வெளிச்சத்தைக் கொண்டிருந்தார். அந்த சீர்திருத்தத்தில் அந்த வெளிச்சமானது, ''விசுவாசத்திகுலே நீதிமான் பிழைப்பான்; விசுவாசத்தினாலே நீதிமானாக்கப் படுதல்" என்பதைக் கொண்டிருந்தது. அவர்கள் அதை (இராப் போஜனத்தை), ''இது கிறிஸ்துவின் சரீரம்'' என்று கூற வேண்டிய வர்களாக இருந்தனர். அவர் ஒரு ஜெர்மானிய மதகுருவாயிருந்தார். அவர் அதை மறுத்து, அதை அவர் தரையில் எறிந்து ''இது கிறிஸ்துவின் சரீரம் அல்ல; இது வெறும் அப்பம்!'' என்றார். அப்படி செய்ததின் மூலம், அவர் கத்தோலிக்க சபையை துறந்தார், ஆதி சீர்திருத்தத்தில் அவர் வெளியே வந்தார். மார்டின் லூத்தர் அதைச் செய்தார், அது ஒரு அருமையான அசைவாகும். 32. இப்பொழுது, லூத்தர் தன்னுடைய தவறைப் புரிந்தார், கத்தோலிக்க சபை செய்தது போல லூத்தர் இன்னுமொரு குழுவை ஸ்தாபித்தார், ஜனங்களை ஸ்தாபித்தார். 33. பிறகு, நேரடியாக ஒரு புது வெளிச்சம் வந்தது. அந்த புது வெளிச்சம் வந்த போது, தேவன் தம்முடைய ஜனங்களோடு வெளியே வந்தார். லூத்தரன் சபையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அந்த ஜனங்கள், அவர்கள் சபையில் தங்கியிருக்க வேண்டிய தாயிற்று. அதே விதமாகத்தான் கத்தோலிக்கரில் அநேகர் வெளியே வந்து லூத்தரன்களாயிருந்தனர். நல்லது, பிறகு வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் செய்தியுடன் வந்த போது, அப்பொழுது லூத்தரன்களில் அநேகர் தங்கள் சபையை விட முடியாதிருந்தனர்; ஆனால் அவர்களில் அநேகர் செய்தனர். வெஸ்லி சபையை உண்டாக்கினார். 34. நீதிமாகுக்கப்படுதல் பரிசுத்தமாக்கப்படுதலிற்கு பிறகு, பெந்தெகொஸ்தே வந்தது. அப்பொழுது பெந்தெகொஸ்தே, அநேகர் மெத்தோடிஸ்டு இன்னும் பலவற்றிலிருந்து வெளியே வந்து பெந்தெகோஸ்தேயினராக ஆயினர். ஏனெனில் அது ஒரு மேலான வெளிச்சமாக இருந்தது. இப்பொழுது மற்ற எல்லாரைப் போலவே சரியாக பெந்தெகோஸ்தே ஸ்தாபனமாகிவிட்டது. 35. இப்பொழுது, வேதாகமம் அதைக் கூறுகிறது. இவைகள் கண்டிப்பான வார்த்தைகளாயிருக்கிறது, ஆனால் அவைகளை வேதத்திலிருந்து நான் வாசிக்கிறேன். நீங்கள் உங்கள் டாக்டர் அல்லது வேறு சிலர் கூறுவதைக் கேட்கிறீர்கள், ஆனால் நானோ வேதவசனத்திலிருந்து போதிக்கிற உங்கள் சகோதரன் ஆகும். வேதாகமம் கத்தோலிக்க சபையை "ஒரு விபசாரி, ஒரு வேசி, வேசி.'' என்று அழைக்கிறது. அதை பின்பற்றின பிராடெஸ்டெண்டு சபைகளை அவர், தாய்கள் ..... அல்லது அவர்கள், ''இந்த தாயின் வேசிகள்.'' என்று அழைத்தார். இருந்த தொடர்பு என்னவென்றால், கத்தோலிக்க சபையானது காரியத்தை ஸ்தாபித்து அப்பொழுது அவர்கள் கொண்டிருந்த வெளிச்சத்தை அல்லது அப்பொழுது அவர்கள் என்ன வைத்திருந்தனரோ அதை எல்லா ஜனங்களும் விசுவாசிக்கும்படி செய்தனர். லூத்தரன்கள் அதே காரியத்தைச் செய்தனர். ஆகவே அவள் அந்த விதமான ஒரு மகத்தான ஸ்திரீயாயிருந்தாள் என்று வேதாகமம் கூறுகிறது. 36. இப்பொழுது அந்த விதமான ஸ்திரீ என்றால் என்ன? ஒரு ஸ்திரீ விபசாரம் செய்து கொண்டிருப்பது என்பதாகும். ஆகவே சபைகள் ஜனங்களுடன் ஆவிக்குரிய வேசித்தனம் புரிந்து கொண்டிருக்கின்றன. பாருங்கள்? அவர்கள் அப்படித்தான், அவர் கள் அப்படித்தான். அதை போதிக்கின்ற வேதாகமம் இதோ இருக்கிறது, வேதத்தோடு எந்தவித சம்பந்தமும் இல்லாத பிரமாணங்கள் மற்றும் இன்னும் சில காரியங்களை அவர்கள் உண்டாக்கினர். ஆகவே, இது ஏறக்குறைய கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நான் இங்கே நின்று, எந்த ஊழியக்காரனாகிலும், எந்த நேரத்திலும், இங்கே வந்து எடுத்து. . . உங்களுடைய பாடப்புத்தகத்தை, உங்கள் பிரமாணத்தை அல்ல, ஆனால் வந்து வேத்தை எடுத்து, வேதத்தின் வெளிச்சத்தில், இது தவறு என்று நிரூபிக்க கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். 37. ஆகவே முரண்பாடுகளைக் குறித்து, அவர்கள் "எதிர் முரண் பாடுகள்!'' என்று கூறுகின்றனர். எவராவது வந்து வேதாகமத்தில் ஒரு முரண்பாட்டை எனக்கு காண்பிப்பார்களானால் இரண்டு மாதச் சம்பளத்தை தருவதாக நான் அறிவித்திருக்கிறேன். அது அங்கேயில்லை. அது அங்கிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அது அங்கேயில்லை. வேதாகமம் அதற்குத்தானே முரண் பாடு கொண்டதாக இருக்குமானால், அது உபயோக மற்றதாக இருக்கும், உங்களால் அதை விசுவாசிக்க முடியாது. ஒவ்வொரு வார்த்தையும் தெய்வீக உள்ளுக்கம் பெற்றதாயிருக்கிறது. வேதாகமத்தில் எந்த ஒரு முரண்பாடும் கிடையாது. 38. இப்பொழுது பிராடெஸ்டென்ட் சபை, அதினுடைய ஸ்தாபனத்தில், (தேவனுடைய வார்த்தையின்படி) அதே காரியத்தை கத்தோலிக்க சபையுடன் இணைத்து இருக்கின்றது. 39. இப்பொழுது, கத்தோலிக்க மக்களுக்கு விரோதமாக என்னிடம் ஒன்றும் கிடையாது. இங்கே இப்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கிற என்னுடைய அருமையான நண்பர்களில், சிலர், கத்தோலிக்க ஜனங்களின் வளர்ச்சியில் வந்தவர்கள். இங்கே, கடந்த இரவிற்கு முன்பு, பரிசுத்த ஆவியின் மூலமாக பிராட்டெஸ்டெண்ட் மற்றும் கத்தோலிக்கத்தைக் குறித்து ஒரு கடுமையான செய்தியை நான் அளித்த போது, அந்த கத்தோலிக்கர் நேராக இங்கே பீடத்திற்கு நடந்து வந்து என்னுடைய கையை குலுக்கினர். அவர்களும் நம்மை போன்று அதே விதமான மானிடர்கள் ஆவர். 40. கத்தோலிக்க மதகுருக்களுடன் உங்களால், விவாதிக்க முடியாது, ஏனெனில் இந்த வேதாகமம் தான் எல்லா வார்த்தையாயிருக்கின்றது என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள், "அது சபை தான்" என்று கூறுவார்கள். நாம், "அது வேதாகமம்தான்'' என்று கூறுகிறோம். 41. கத்தோலிக்கர், ''கத்தோலிக்கர்களாகிய நாங்கள் சபைக்கு சென்று ஆராதிக்கிறோம். பிராடெஸ்டென்டுகளாகிய நீங்கள் வீட்டிலே இருந்து வேதாகமத்தை படிக்கிறீர்கள்'' என்று கூறுகின்றனர். 42. நான், "ஆமாம், நீங்கள் சபைக்கு சென்று வழிபடுகிறீர்கள், ஆனால் எதை?'' என்றேன். அது தான் அடுத்த காரியமாகும், பாருங்கள். 43. இப்பொழுது, ஆனால் தேவன் தாம் தம்முடைய வார்த்தையில் இருப்பதாகக் கூறினார். இது தேவனுடைய வார்த்தை. நான் அதை விசுவாசிக்கிறேன். நான் ஒரு வேதாகம வழிபாடு செய்பவன். அதன் காரணமாகத்தான் பிராஸ்டெண்ட் கொள்கையுடனும், அதனுடைய - அதனுடைய சபை ஸ்தாபனத் துடன் நான் இணங்காமல் இருக்கிறேன், ஏனெனில் தேவனுடைய வார்த்தையாக இல்லாத காரியங்களை அவர்கள் போதிக்கின்றனர். ஆகவே என்னால் அதனுடன் இணங்காதிருக்கத்தான் முடியும். நான் அவர்களுக்கு எதிராக சர்ச்சை உண்டு பண்ணுவதில்லை, இல்லை, ஐயா, அவர்கள் என்னுடைய சகோதரர் ஆவர். நான் அவர்களுடன் சச்சரவு கொள்வதில்லை, ஆனால் நான் அவர்கள் கருத்துக்கு விரோதமாயிருப்பேன். ஏனெனில் தேவன் என்ன கூறுகின்றாரோ அதை மாத்திரமே எடுத்து கொண்டு, மற்ற எல்லாவற்றையும் பொய்யாக விட்டு விட வேண்டியவனா யிருக்கிறேன். பாருங்கள்? 44. ஆகவே இப்பொழுது அந்த தொடர்பானது..... இப்பொழுது வேதாகமம் அந்த ஸ்திரீ, கத்தோலிக்க சபை, வேதாகமத்தில் வெளிப்படுத்தல் 17வது அதிகாரத்தில், இவ்விதமாக அழைக்கப் பட வேண்டியளாக இருக்கிறாள், "ஒரு வேசி', அவள் ''வேசிகளுக்கெல்லாம் தாய்'' ஆவாள். ஆகவே ஸ்திரீ ''ஒரு சபையை பிரதிநிதித்துவப் படுத்துகிறாள்,'' என்று வேதாகமம் கூறுவதை நாம் பார்க்கிறோம். ஆகவே அப்படியானால் அவளுக்கு குமாரத்திகள் இருக்குமானால் அவர்களும் வேசிகள்தான், அது பையன்களாக இருக்க முடியாது, அது குமாரத்திகளாகத்தான் இருக்க வேண்டும், ஆகவே அது சபைகளாகத் தான் இருக்க வேண்டும். ஆகவே பிராடெஸ்டென்ட் கொள்கையானது கத்தோலிக்கத்திலிருந்து பிறந்து வெளி வந்தது ஆகும். 45. ஆகவே இப்பொழுது அடுத்ததாக, மிருகம் ..... அல்லது, இது கூறுகின்ற அடுத்த காரியம்: '' மிருகத்தின் சொரூபம்'' என்றால் என்ன அர்த்தம்? 46. இது - இது அதனுடன் சேர்ந்த ஒரு கேள்வியாகும், இதைக் கேட்ட நபர் ஒரு நல்ல கேள்வியைக் கொண்டிருக்கிறார். இப்பொழுது ..... கத்தோலிக்க சபை தான் அந்த - அந்த மிருகம் என்று வேதாகமம் தெளிவாக போதிக்கிறது. மிருகம் என்றால் ''வல்லமை'' என்று அர்த்தம் என்று வேதாகமம் கூறுகின்றது. அது சரியா? மிருகம், மிருகம் என்றால் வல்லமை என்பதுதான் அதன் அர்த்தமாகும் என்றே வேதம் கூறுகின்றது. ஆகவே மிருகம் ''வாடிகன் நகரம்'', "கத்தோலிக்க குருக்களாட்சி'' ஆகும். அது சரி. ஆகவே இப்பொழுது, அது தான் மிருகம் என்பதாயிருந்த சபையின் வல்லமையாகும். 47. பிறகு பிராடெஸ்டென்ட் சபை கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்து தங்களைத் தாங்களே ஸ்தாபித்துக் கொண்டனர், அது ஒரு சிறிய வல்லமை. அது தான் சொரூபமாகும். 48. ஏதாவது ... ஏதோ ஒன்று என்னுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்டிருக்குமானால், அது என்னைப் போலத்தான் காட்சியளிக்க வேண்டும். இந்த சபையின் சாயலின்படி ஏதோ ஒன்று உண்டாக்கப் பட்டிருக்குமானால், அது சபையைப் போன்று தான் காணப்படவேண்டும். 49. ஏதோ ஒன்று செய்யப்பட்டது, ஒரு மிருகம் ..... மிருகத்திற் கென்று ஒரு சொரூபம் உண்டாக்கப்பட்டது, அது லூத்தர் - கொள்கை, மெத்தொடிஸ்டு - கொள்கை, பாப்டிஸ்டு - கொள்கை, பெந்தெகொஸ்தே - கொள்கை, பரிசுத்தர்- கொள்கை, இந்த எல்லா கொள்கை , (ism) இசம்களும், ஒரு ஸ்தாபனமாக உருவாகிக் கொண்டு, மிருகத்தைப் போலவே ஒரு சொரூபத்தை உண்டாக்கினது. இதோ அது இங்கேயுள்ளது. 50. 'அப்படியானால் சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் கூற முனைவதென்னவென்றால், எல்லா கத்தோலிக்கர்களும் எல்லா மெத்தோடிஸ்டுகளும், எல்லா பாப்டிஸ்டுகளும் எல்லாம்...? '' நான் அதைக் கூறவில்லை. 51. ஆயிரம், ஆயிரம், பத்தாயிரங்கள் கணக்கான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் அந்த சபைகளில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஸ்தாபனங்களில், அவர்கள் அவர்களை ஒரு போதனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர், அவர்கள் அதற்கு நிற்கமாட்டார்கள். ஒரு-ஒரு சபை, அது ஸ்தாபித்து கொள்ளும் போது, அது ஒரு போதகத்தின் கீழ் வந்து விடுகின்றது. 52. வேதாகமத்தை தவிர வேறு எந்த ஒரு போதகமும் என்னிடம் கிடையாது. இதுதான் தேவனுடைய போதகமாகும், பரிசுத்த ஆவியானவர் அதனுடைய வியாக்கியானி ஆவார், அவர் ஒரு வெளிச்சத்திலிருந்து மற்றொரு வெளிச்சத்தை அவர் கொண்டு வருகிறார். இன்று நான் பிரசங்கிக்கும் சுவிசேஷம், நான் இன்னும் நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேனானால், அப்படியிருக்கு மானால், இன்னும் அதிகமான வெளிச்சம் இருக்கும். அது மாற்றமில்லாமல் எப்பொழுதுமே அதே விதமாக வந்திருக்கிறது. 53. உன்னுடைய பெரிய - முப்பாட்டனார் பாட்டியை பார்க்கச் சென்ற போது, மாட்டு வண்டியில் பயணம் செய்தார், அப்பா, அம்மாவை பார்க்க டி - மாடல் காரில் சென்றார். இப்பொழுது நாம் ஏறக்குறைய ஜெட் விமானத்தில் செல்கிறோம். பாருங்கள், நாம் முன் சென்று கொண்டேயிருக்கிறோம்; விஞ்ஞானம், முன் சென்று கொண்டேயிருக்கிறது. கல்வி முன் சென்றுக் கொண்டிருக்கிறது. சுவிசேஷமும் அவ்விதமே முன் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே வேதாகமும் அவ்விதமாக இருக்கும் என்று கூறுகிறது, ''அவர்கள் இங்கும் அங்கும் ஓடுவார்கள், அறிவும் பெருகிப்போம்.'' ஆகவே அதுதான் அந்த இணைப்பு. அதன் காரணமாகத்தான் ..... 54. பிராடெஸ்டென்ட் ஸ்தாபன சபைகளும் கூட மிருகத்தின் சொரூபம் தான், ஏனெனில் அது கத்தோலிக்க கொள்கை போல முற்றிலும் சரியாக ஸ்தாபித்து கொண்டது. தம்முடைய சபையானது எந்த காலத்திலும் ஸ்தாபித்து கொள்ள வேண்டுமென்று தேவன் கட்டளையிடவேயில்லை, ஆனால் அவர் அதை எப்பொழுதுமே கடுமையாக கடிந்து கொண்டார்! இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா? (சபையார் "ஆமென்'' என்கின்றனர். -ஆசி] ஜனங்கள் அல்ல; சபை! 55. அவர்கள் ஜனங்களை ஒரு-ஒரு வெளிச்சத்தின் கீழ் கொண்டு வர முயன்ற போது... இங்கே, ஜனங்கள் உங்களை மாட்டு வண்டியில் சுற்றி வரச் செய்ய முயன்றால் எப்படி யிருக்கும்? உங்களால் அதை வரவேற்க முடியாது; நாம் இன்னும் மேலான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்கே அப்பொழுது இருந்து வழியும் இதுவே ஆகும். எவராவது என்னிடம் "ஓ, நீர் செய்ய வேண்டிய ஒரேயொரு காரியம் இது, அது" என்று கூற முயன்றால். நானோ வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறேன்! நான்... ஊழியக்காரர்களுடன் அது தான் ஒரு தொந்தரவாக இருக்கின்றது, அவர்கள் எப்பொழுதுமே பின்நோக்கிப் பார்க்கின்றனர். 56. இங்கே, ஒரு பிரஞ்சு விஞ்ஞானி, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், "ஒரு மனிதன் மணிக்கு முப்பது மைல் வேகத்திற்கு மிக வேகமாக சென்றால், புவியீர்ப்பானது அவனை பூமியிலிருந்து எடுத்துச்சென்று விடும். மணிக்கு முப்பது மைல்!'' என்று கூறினார். நல்லது, விஞ்ஞானமானது இன்றைக்கு அதை பின்னால் சென்று குறிப்பிடுமா? அது அப்படி அல்ல! இல்லை, ஐயா. அவனை மணிக்கு ஒன்பது அல்லது பத்தாயிரம் மைல் வேகம் செல்லும் அளவிற்கு செய்துள்ளனர். ஆம், சிலசமயங்களில் ஒரு ராக்கெட்டில், இன்னுமாக மணிக்கு ஆயிரத்து அறுநூறு மைல்கள் வேகமாக இருக்கின்றது. அது இன்னுமாக அவனை முன்னே கொண்டு சென்று கொண்டிருக்கிறது! 57. விஞ்ஞானம் மனிதனை, முன்னே, இன்னும் முன்னே கொண்டு சென்றிருக்கிறது, அவனுடைய மனதிலுள்ளதைக் காட்டிலும் மகத்தான காரியங்கள்..... ஆகவே அவன் ஒரேயொரு காரியத்தை, அறிவின் விருட்சத்தைக் கொண்டிருக்கிறான். ஊழியக்காரர் அளவில்லாதிருக்கின்ற அவருடைய ஆவியால் அவனை கொண்டு சென்றதைப் பார்க்கிலும் இன்னுமாக மேலே கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அது என்னவென்பது இதோ இருக்கிறது. விஞ்ஞானம் சில வருடங்களுக்கு முன்னால் என்ன கூறினது என்பதை விஞ்ஞானமே திரும்பி பார்ப்பதில்லை; விஞ்ஞானமானது இப்பொழுது எதை அவர்கள் கொண்டிருக் கிறார்களோ அதை எடுத்து, வேறு ஒன்றிற்காக அது முன்னே சென்று கொண்டிருக்கிறது. 58. ''நல்லது, அதைக் குறித்து மூடி என்ன கூறினார் என்று பார்ப்போம், அதை குறித்து வெஸ்லி என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போம்'' என்று நீ ஒரு பிரசங்கியை கேட்கிறாய், அவர்கள் அதைக் குறித்து என்ன கூறியிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. அதைக் குறித்து இப்பொழுது தேவன் என்ன கூறியிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அது தான். இன்னும் மகத்தானவற்றிற்காக நான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக் கிறேன்! அது தான் அதன் காரணமாக ... 59. வேதாகமம், "மிருகத்தின் வாயிலிருந்து மூன்று அசுத்த ஆவி புறப்பட்டு வந்தது'' என்று கூறுகிறது. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? "அசுத்த ஆவிகள்'', ''தவளைகளுக்கு ஒப்பானவை" என்றது. தவளை எப்படி பார்க்கிறது என்று எவரா வது கவனித்திருக்கிறீர்களா? தவளை எப்பொழுதுமே பின் நோக்கித்தான் பார்க்கும், அது முன்நோக்கி பார்க்காது: பின்நோக்கி பார்க்கும், எப்பொழுதுமே பின்புறமாக, பின்நோக்கி பார்க்கும். 60. ஆனால் எசேக்கியேலில், நான்கு வித்தியாசமான தலைகளைக் கொண்டிருந்த நான்கு ஜீவன்கள், அவைகள் நேர் முகமாக பார்த்துக் கொண்டிருந்தன, அவைகளால் பின்னால் செல்ல முடியாதிருந்தது. அவைகள் எப்போழுதுமே நேர்முகமாகச் சென்று கொண்ட்டிருந்தன. அவைகள் எங்கு சென்றாலும் இவைகள் நேர்முகமாகச் சென்று கொண்டிருந்தன. வித்தியாசத்தை பாருங்கள்? 61. இப்பொழுது, அதுதான் பிராடெஸ்டென்ட் கொள்கை கத்தோலிக்க கொள்கையுடன் கொண்டிருக்கின்ற தொடர்பாகும். 62. ஆகவே நீங்கள் எல்லோரும் கத்தோலிக்கரையே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் "பானை கைப்பிடி வைத்த வெந்நீர் கொதிக்க வைக்கும் பாத்திரத்தை 'கறுப்பு' என்று அழைக்க முடியாது''. அது சரி. 63. ''நீ ஒரு கிறிஸ்தவகு?'' என்றால், 64. ''நான் உங்களுக்கு விளக்கி கூறவேண்டுமானால் நான் பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்தவன்.'' ஆமாம். அவ்விதமாக நீ கூறுவது அதனுடன் ஒரு சம்பந்தமுமில்லை. நீ அங்கே இருக்கின்ற ... எங்கோ ஒரு பண்ணையைச் சேர்ந்தவன் என்று கூட கூறிவிடலாம். 65. "ஏன், நான் கத்தோலிக்க சபையை சேர்ந்தவன்.'' அது இன்னுமாக உன்னை ஒரு கிறிஸ்தவனாகச் செய்வதில்லை. பாப்டிஸ்டு அல்லது மெத்தோடிஸ்ட் சபையைச் சேர்ந்திருந் தாலும் உன்னை ஒரு கிறிஸ்தவனாக ஆக்குவதில்லை. 66. ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. கிறிஸ்தவன் என்கிற வார்த்தைக்கு ''கிறிஸ்துவைப் போல்" என்று அர்த்தம். அதை உன்னால் செய்ய முடியவில்லை என்றால், உனக்குள்ளாகவே அதை உன்னால் கிரியை செய்ய முடியவில்லையென்றால், அதைச் செய்ய உனக்கு ஒரு வழியும் கிடையாது. நீ உன்னைத் தானே மறக்க வேண்டும், உனக்குத்தானே நீ மரிக்க வேண்டும், கிறிஸ்து உனக்குள் வந்து உனக்குள் கிறிஸ்துவின் ஜீவியத்தை செய்ய விட வேண்டும். 67. "ஒருவன் ...'' இங்கே இயேசு, "ஒருவன் ஆவியிகுலும் ஜலத்தினாலும் பிறவாவிட்டால் இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க மாட்டான்" என்று கூறினார். அவன் ஒரு கத்தோலிக்கன், மெத் தோடிஸ்ட், பாப்டிஸ்ட் அல்லது என்னவாயிருந்தாலும் உங்கள் பாவம் மன்னிக்கப்படுவதற்கு தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள். அது இயேசுவின் சொந்த வார்த்தையாகும். ஆகவே இப்பொழுது நீங்கள் மெத்தோடிஸ்டாக இருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று, தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், நீங்கள் பரலோகத்தில் பிரவேசிப்பீர்கள் என்று இயேசு கூறியுள்ளார். நீங்கள் ஒரு கத்தோலிக்கராக இருந்து அதே காரியத்தை செய்துள்ளீர்களானால், நீங்கள் பரலோகத்தில் பிரவேசிப்பீர்கள். 68. ஆனால் நீங்கள் அந்த கத்தோலிக்க சபை அல்லது மெத் தோடிஸ்ட், அல்லது பாப்டிஸ்ட் சபையின் போதகத்தை விடாமல் பிடித்து கொண்டிருப்பீர்களானால், நீங்கள் இன்னுமாக இழந்து போகப்பட்ட நிலையில் உள்ளீர்கள். அதன் காரணமாகத் தான் இன்றைக்கு உலகத்தின் நிலையை இப்படியாக நாம் கொண்டிருக்கிறோம், ஏனெனில் ஜனங்கள் சரியாக .... அவர்கள், ''அது என்னுடைய மத உணர்ச்சிக்கு எதிரானது" என்கின்றனர். 69. ''தெய்வீக சுகமளித்தலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'' 70. ''அது எங்களுடைய மத உணர்ச்சிக்கு எதிரானது.'' அது உங்கள் சபைக்கு எதிரானது; உங்கள் சபை போதகம் அவ்விதமாக அதை உருவாக்கியுள்ளது, பாருங்கள், சபை என்ன கூறுகிறதோ அதை நீங்கள் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். பிறகு நீங்கள் கத்தோலிக்கரை நோக்கி கூச்சலிடுகிறீர்கள்; அதே காரியத்தை தான் அவர்களும் செய்கின்றனர். ஆகவே அதுதான் மிருகம் மற்றும் மிருகத்தின் சொரூபம் ஆகும்! வேதாகமம் கூறுகிறது, ''அதை எடுத்துக் கொள்கிறவன் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது, ஆனால் நாய்களும், சூனியக்காரரும், இன்னும் பலர் இருக்கிற இடத்தில் தள்ளப்பட்டு அக்கனியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவார்கள். பரிசுத்த தூதர்கள் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் பிரசன்னத்தில் என்றென்றுமாக வாதிக்கப்படுவார்கள்''. நண்பனே! அதை விட்டு வெளியே வா, தேவனோடு சரியாக இருந்துகொள்! ஆம், ஐயா. 71. இப்பொழுது இதை நான் பார்க்கட்டும். நல்லது, அவைகளை நாம் முடித்துவிடுவோம். இப்பொழுது, யாரோ ஒருவர் இன்று என்னிடம் கேட்டார்; இரண்டு அல்லது மூன்று முறைகள் என்னிடம் கேட்கப்பட்டது. 27. சகோதரன் பிரன்ஹாம், "மிருகத்தின் முத்திரையை'' குறித்து பேசுகையில், அவர்கள் உங்கள் தலையில் ஒரு இலக்கத்தை பச்சை குத்துவார்களா அல்லது உங்கள் கையில் ஏதோ ஒன்று பச்சை குத்துவார்கள் என்ற நீங்கள் நம்புகிறீர்களா? இல்லை ஐயா! அதை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். 72. அது ஒரு புறக்கணிப்பாக இருக்கும்! நிச்சயமாக! ''எந்த ஒரு மனிதனும் சபைகளின் சங்கத்தை சேர்ந்தவனாக இருந்தாலொழிய அவனால் வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது. '' அது உண்மை. இப்பொழுது அது ஒரு ஐக்கியம் போல வந்து, காரியத்தை ஐக்கியப்படுத்தி, அதை ஒரு ஐக்கியப் படுத்தப்பட்ட மார்க்கமாக கொண்டு வரும். என்னுடைய வார்த்தையை குறித்துக் கொள்ளுங்கள், அது நீண்ட தொலைவில் இல்லை! அவள் அங்கே சற்று அருகாமையில் இருக்கின்றாள் என்பதை நீங்கள் காண்பீர்கள். 73. இந்த காரியங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாதிருக்கிற காரணம் என்னவெனில், எல்லா நேரத்திலும் நீங்கள் இங்கேயே இருக்கின்றீர்கள். கத்தோலிக்கம் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாடுகளுக்கு, ஒரு தடவை என்னை பின் தொடர்ந்து வாருங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள். சகோதரனே, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்ற எல்லாவற்றையுமே அவர்களுக்கு அவர்கள் கூறுகின்றனர். 74. இங்கே தீர்க்கதரிசனத்தில் நாம் கண்டெடுத்தோம், இங்கே வேதாகமம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஒரு ஆட்டுக்குட்டியைப் போல "மதச் சுதந்திரம்' வந்தது, அவர்கள் நேரடியாக அந்த காரியங்களை ஒன்றாக அணைத்தனர், அவன் வலுசர்ப்பத்தைப் போல பேசினான், அவனுக்கு முன்னிருந்த வலுசர்ப்பம் கொண்டிருந்த அதே வல்லமையை அவன் உபயோகித்தான் என்று கூறுகின்றது. அது தான் அமெரிக்க ஐக்கிய நாடுகள்! அது சரி. 75. சிறிது காலத்திற்கு முன்னர் என்னுடைய நண்பராகிய, ஒரு ஊழியக்காரர் என்னிடம் ''சகோதரன் பிரன்ஹாம், தேவன் அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் கீழே விழ விடமாட்டார். ஏனெனில் அதனுடைய அடிப்படையானது அதனுடைய முற்பிதாக்கள் மேலே இருக்கிறது, மதத்தின் மேல் உருவாக்கப்பட்டது'', என்றார். 76. நான், "அவர் யூதர்களையே விட்டு விட்டார்; அவர்கள் கொண்டு போகப்பட்டனர், நாம் கொண்டிருந்ததை விட இன்னும் மேலான ஒரு நிலையை அவர்கள் கொண்டிருந்தனர்'' என்றேன். அது சரி. கடந்து சென்ற ஏதோ சந்ததிக்கு தேவன் மரியாதை கொடுப்பவர் அல்ல; ஒன்று வரிசையில் நட அல்லது நீ இராஜ்ஜியத்திலிருந்து வெட்டப்படுவாய், அவ்வளவுதான். உண்மையாக! அது சற்று கடினமான ஒன்றாகும், ஆனால் அது உனக்கு நல்லதாகும். அது சரி. அது வேதவசனம். நாம் கொண்டிருக்கிறோம், நாம் ..... 77. இன்று சிக்கல் என்னவெனில், ... உங்களில் வயது சென்றவர்களுக்கு இது தெரியும். நாம் மிக அதிகமான ஹாலிவுட் சுவிசேஷத்தை கொண்டிருக்கிறோம். அது சரி. அதில் அநேக காரியம் அதிகமாக முழு களியாட்ட ஆர்ப்பாட்ட கூச்சலுடன் இருக்கின்றது, அதிகமான கவர்ச்சியுடனும் அதைப் போன்ற ஒவ்வொரு காரியத்துடனும், ஊது கருவிகளின் கீச்சொலி மற்றும் இன்னுமாக இருக்கின்றன. "யார் எழுந்து கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரனே, சரியாக இப்பொழுதே நீ பரலோகம் போவாய்''. அது ஒரு பொய்! அது ஒரு பொய்யாகும்!. 78. "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்!'' ஆகவே அவன் மறுபடியும் பிறந்திருந்தால், அங்கே வந்த அந்த அதே ஆசீர்வாதம் இங்கேயும் அவனிடத்திற்கு வரும். நாம் கடந்த வாரம் அதைக் குறித்து திரும்பத் திரும்ப வேதவசனங்களின் மூலமாக பார்த்தோம். ஆகவே கிழக்கத்திய மக்களிடத்தில், பரிசுத்த ஆவி யூதர்களின் மேல் விழுந்த போது அவர்கள் கீழை நாகரீகத் தொடர்புடைய, கிழக்கத்திய ஜனங்கள், பரிசுத்த ஆவி மகத்தான அடையாளங்களுடனும் வெளிப்படுத்தல்களுடனும் விழுந்தது என்பதை நாம் பார்த்தோம் . இருளோ அல்லது பகலோ என்று சொல்ல முடியாத அளவிற்கு ஏறக்குறைய ஒரு- ஒரு நேரமானது இருக்கும் என்று வேதாகமம் கூறுகின்றது. அது ஒரு விதமான மப்பான நாளாக, சாயங்காலத்தின் கடைசி பாகமான ஒன்றாக அது இருந்தது. ஆகவே அப்பொழுது கடைசியாக மாலையில் சில நிமிடங்களுக்கு சூரியன் வெளியே வரும். ''சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும். அது சரியா? நல்லது, அது மேற்கத்திய ஜனங்களாகும், புறஜாதிகள் அங்கே முன்னர் யூதர்கள் பெற்ற அதே பரிசுத்த ஆவியை, அதே அடையாளங்களுடனும் வெளிப் படுத்தல்களுடனும் பெற்றுக் கொள்கின்றனர். அது தான். 79. ஆகவே மக்களே, உலகம் உங்களை ஒரு ''தலையில் பித்து பிடித்துள்ள அதிதீவிர மதவைராக்கியம் கொண்ட ஒருவன்" என்று அழைக்கப்போகிறது. அதை அவர்கள் செய்வார்கள் என்று இயேசு கூறினார். வேதாகமம் அதையே கூறுகின்றது. நீங்கள் ஒரு விநோதமான ஜனங்கள், நீங்கள் விநோதமானவர்கள். ஏனென்றால் அது மிகவும் வித்தியாசப்பட்ட ஒன்று ஆகும். 80. என்னுடைய வீட்டண்டை என் சுற்று வட்டாரத்திலும் நான் அதை கவனித்திருக்கிறேன், அங்கேயிருக்கின்ற ஜனங்கள்; என்னுடைய சிறு பிள்ளைகளை; நாங்கள் சுத்தமாக வைத்து கூடுமானவரை பண்பார்ந்தவர்களாக வாழ நாங்கள் முயற்சிக் கிறோம், ஆனால் அக்கம் பக்கத்தார் பிள்ளைகளுக்குள் ஒரு வித்தியாசத்தை உண்டாக்குவதை உங்களால் காணமுடியும். பாருங்கள்? அவர்கள் ஒரு வித்தியாசத்தை உண்டாக்குகின்றனர். 81. ஆகவே எனக்குத், காரியங்களை அறிந்து கொள்ளும் ஒரு வழியை உடையவனாக நான் இருக்கிறேன் (அதை நீங்கள் அறிவீர்கள், கூட்டத்தில் அதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்), நகரத்தில் உள்ள மேய்ப்பார்கள் "நல்லது, இப்பொழுது, பில்லி ஒரு நல்ல பையன், அவனுக்கு எதிராக எங்களிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், நம்மைக் காட்டிலும் சிறிது வித்தியாசமான ஜனக்குழுவாக அவர்கள் இருக்கின்றனர்'' என்று கூறுவதை நான் அறிந்துள்ளேன். தேவனுக்கு நன்றி! அது சரி. தேவனுக்கு நன்றி! அதுதான் அந்த முத்திரை. நாம் பேசிக்கொண்டிருக்கிற முத்திரை அது தான். 82. கவனியுங்கள், பரிசுத்த ஆவியை யூதர்கள் பெறுவதற்கு தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரிசுத்த ஆவி முன்னுரைத்து அது என்னவாயிருக்கும் என்று கூறினதை கடந்த இரவு பார்த்தோம். மைக்கூட்டு... "கணக்கனுடைய மைக்கூட்டு எழுத்தாளன் எருசலேமிற்குள் சென்று அவர்களுடைய நெற்றியில் ஒரு அடையாளத்தைப் போட்டான் அது சரியா? சபையை தேவன் கடிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதைக் குறித்து பேசிகுர். கி.பி.96ல் தீத்து எருசலேமின் மதில்களை முற்றுகை யிட்டு, நகரத்தை எரித்து போட்டான். தீர்க்கதரிசனத்தின் படி ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி ஆனது. இன்றைக்கு ஆலயத்தின் ஒரே ஒரு காரியம் மாத்திரமே விடப்பட்டிருக்கிறது, அது ஒரே ஒரு பழைய சுவர். அங்கே அவர்கள் கற்களைக் குவித்துள்ளனர், அது மழமழப்பாக யூதர்கள் அழுது கதறுகின்ற, அழுகின்ற சுவராக அங்கே இருந்து கொண்டிருக்கின்றது, ஆலயத்தில் விடப்பட்டிருக் கின்ற ஒரேயொரு காரியம் அதுவே. அதே இடத்தில் ஒமரின் மசூதி இருந்து கொண்டிருக்கின்றது. 83. இயேசு "தானியேல் தீர்க்கதரிசியினால் சொல்லியிருக்கிற படி; பாழாக்குதலை செய்கின்ற அந்த அருவருப்பு நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, "பிறகு அவர் வளை அடைப்பு குறியில் குறிப்பிடுகிறார் (ஆங்கில வேதாகமத்தில் தமிழாக்கியோன்) (இதை வாசிக்கிறவன் புரிந்து கொள்ளக் கடவன்)" என்று கூறினார். பாருங்கள்? அது சரி. அதோ அது. அவர் எத்தனை நாள்.... முறைகள் அது புறஜாதிகள் காலம் நிறைவேறும் வரையிலும் அதன் மதில்கள் மிதிக்கப்படும், அதன்பின் யூதரிடத்திற்குத் திரும்ப வருவார். ஆகவே நாம் சரியாக அந்த நேரத்தில் தான் இருக்கிறோம்! இங்கே கடந்த சில ஆண்டுகளாக யூதர்கள் ஆயிரக்கணக்காக திரும்ப வந்து கொண்டிருக் கின்றனர். கடந்த இரவு நாம் அதை எவ்விதமாக பார்த்தோம் என்பது உங்களுக்கு தெரியும், எப்படி வேத வசனம் பரிபூரணமாக ..... ஒரு செய்தித்தாளை வாசிப்பது போல இன்னும் தெளிவாக அது இருக்கிறது. ஏனெனில் அதிலிருந்து இன்னும் அதிகமான புரிந்து கொள்ளுதலை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். 84. ஆனால், மேலுமாக அவர்கள் தலையில் போடப்பட்ட அடையாளம் பச்சை குத்தப்பட்ட ஒன்றல்ல. அப்படித்தானே? அது என்ன? பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இந்த கடைசி நாளின் அடையாளமாக இருக்கப் போகிறது? எது? வேதாகமம் ''கடைசி நாளில் உள்ள ஜனங்களுக்கு தேவனுடைய பரிசுத்த ஆவியே முத்திரையாக இருக்கிறது'' என்று வேதம் கூறுகின்றது. இப்பொழுது அங்கே ... எபேசியர் 4:30, "அன்றியும் நீங்கள் உங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்,'' என்று வேதம் கூறுகிறது. எபேசியர் 1:13 மற்றும் இன்னும் அநேக இடங்களில், அதே காரியத்தைத்தான் கூறுகின்றது, ''பரிசுத்த ஆவிதான் தேவனுடைய முத்திரை." 85. முத்திரை என்றால் என்ன? அது எந்த ஒன்றானதும் நிறைவுபெறும் வரை ஒரு முத்திரையானது போடப்பட முடியாது. லூத்தரன்கள் முத்திரையிடப்படவில்லை, கிருபையின் யுகத்தின் நாளானது இன்னுமாக நிறைவேறவில்லை; அவர்கள் நீதிமானாக் கப்படுதலை பிரசங்கித்தனர். மெத்தோடிஸ்டுகள் முத்திரையிடப் படவில்லை. இங்கே ஒரு கேள்விக்கு நான் வருகிறேன்; இன்னும் சிறிது - இன்னும் சிறிது நேரம் கழித்து அதை நாம் பார்ப்போம். அவர்கள் முத்திரையிடப்படவில்லை, ஏனெனில் அது நிறைவு பெறவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகமோ தேவனுடைய கிரியைகளின் நிறைவு பெறுதலாக இருக்கிறது! 86. அவர் கூறினார், "பரலோகத்திலே சாட்சியிருகிறவர்கள் மூவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, என்பவைகளே. இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்'' நீங்கள் பிதா இல்லாமல் குமாரனைக் கொண்டிருக்க முடியாது, குமாரன் இல்லாமல் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க முடியாது, அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். 87. "பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. ஜலம், இரத்தம், ஆவி என்பவைகளே. இவைகள் ஒள்றாயில்லை, ஆனால் ஒருமைப்பட்டிருக்கிறது'' என்று அவர் கூறினார். புரிகின்றதா, ''ஒரு முழுமையான முத்தரித்தல்" லூத்தரின் கீழே நீதிமாகுக்கப்படுதல், ஜலம்; இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்படுதல். 88. நீதிமாகுக்கப்படுதல் ரோமர் 5:1 ஆகும், "இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.'' விசுவாசத் தினாலே நீதிமாகுக்கப்படுதல். 89. இரத்தத்தின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுதல், எபிரேயர் 13:12, மற்றும் 13 "இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தின் மூலமாக ஜனத்தை பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.'' 90. லூக்கா 24:49, "என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்தி லிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்.'' அப்போஸ்தலர் 1:8, "இந்த பரிசுத்த - ஆவி உங்களிடத்தில் வரும்போது, அப்பொழுது நீங்கள் எருசலே மிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசிபரியந் தங்களும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள். ''இயேசு மறுபடியுமாக திரும்பி வரும் வரையில் நிலைத்திருக்கின்ற ஒரு பரிசுத்த ஆவி! "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உங்களோடு, உங்களுக்குள், உலகத்தின் முடிவு பரியந்தம்; நான் செய்கிற அந்த- அந்த காரியங்களை நீங்களும் செய்வீர்கள். ''தம்முடைய ஆவியின் மூலம் சபையின் மூலமாக கிரியை செய்தல்! அவர் ''நீங்கள் இகழப்பட்டு ஏளனஞ் செய்யப்படுவீர்கள். '' என்றார். அவர் ''வீட்டெஜமானாகிய என்னையே பெயல்செபூல் என்று, குறிசொல்லுகிறவர்களின் தலைவன்' என்று சொன்னார் களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?'' என்றார். "என்னிமித்தம் பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு களி கூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே''. 91. அது தான் வேதவசனம், பாருங்கள். அதோ அது. ஆகவே, நண்பனே நீ பார், நீ அதை கொண்டிருக்கத்தான் வேண்டும், இப்பொழுது நீ உன்னுடைய தேர்ந்தெடுப்பை செய்தாக வேண்டயவனாயிருக்கிறாய்; நீ ஒரு சுயாதீனன். 92. ஆனால் அதுதான் பிராடெஸ்டென்ட் சபைக்கும் கத்தோலிக்க சபைக்கும் இருக்கின்ற தொடர்பாகும். வேதத்தின் படி .... அவர்களிருவரும் ஒன்றாக, சபையை மாத்திரம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்; இயேசுவை அல்ல, இப்பொழுது, சபையை மட்டுமே பற்றிக் கொண்டிருக்கின்றனர். சபையில் உள்ள மக்கள், இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொண்டு தேவன் தாமே தங்களுக்கு வழியைத்திறந்து தங்களை ... தங்களுக்கு வெளிச்சத்தை அளியும் என்று ஜெபிக்கின்ற அவர்கள் இரட்சிக்கப்படுகின்றனர், அவன் எந்த சபையில் இருந்தாலும் பரவாயில்லை. அது சரி. ஆனால் அவன் தன்னுடைய ஸ்தாபனத்தை பிடித்துக் கொண்டிருப்பானானால் அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் இடத்தை எடுத்துக் கொள்கின்ற வார்த்தை மீறுதல் என்னும் அடையாளத்தை பெற்றுக் கொண்டவன் ஆவான். முரண்பாடான ஒன்று! ஆகவே கத்தோலிக்கமும் பிராடெஸ்டென்ட்டும், இரண்டும் ஒரே விதமாக, "அவள் ஒரு, வேசியாயிருந்தாள்; வேசிகள், அவளு டைய குமாரத்திகளும் வேசிகளே" என்று வேதம் கூறுகின்றது. இது தெளிவாக இருக்கிறதா? சரி. 28. ஆகவே பரிசுத்த... இன்னுமாக கைகள் வைக்கப் படுதலினால் பரிசுத்த ஆவி அருளப்படுகின்றதா? சீஷர்கள் பேதுரு, பவுல், இன்னும் மற்றவர் அதைச் செய்தனர், அது இன்னும் சாத்தியமான ஒன்றா? பவுல் அதை இந்த விதமாகத்தானே பெற்றான். 93. ஆம், அருமை சகோதரனே, சகோதரியே, இந்த - இந்த குறிப்பை எழுதின யாராயிருந்தாலும் சரி. கைகள் வைக்கப்படுதலினாலே முற்றிலுமாக பரிசுத்த ஆவியானது பெறப்பட வேண்டியதாக இருக்கிறது. 94. இப்பொழுது, அநேக மக்கள் என்னை... நான் ஒரு பெந்தெகொஸ்தேயினனாக குறிக்கப்பட்டுள்ளதால், நான் ஒரு பெந்தெகொஸ்தே என்று கூறுகின்றனர். நான் ஒரு பெந்தெ கொஸ்தே ஸ்தாபனத்தை சார்ந்தவனாக ஒரு போதும் இருந்ததில்லை. நான் எல்லா ஸ்தாபனங்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்றவனாக உள்ளேன், தேவனுடைய உதவியைக் கொண்டு அந்த வழியிலேயே நான் இருக்க முனைகிறேன். ஏனெனில் என்னால் சரியாக அந்த பிளவில் நின்று "நாமெல்லாரும் சகோதரர்! இங்கே வாருங்கள் நாம் ஒன்றாக வழக்காடுவோம்'' என்று கூறமுடியும். 95. தேவனுடைய கிருபையால் நான் முதன்முதலாக முன்பு ஆரம்பித்த போது... இங்கேயிருக்கின்ற ஜனங்களாகிய நீங்கள், என்னுடைய செயலாளர்கள் மற்றும் இங்கு அமர்ந்திருக்கக் கூடிய இவர்கள் இன்று உலகில் நான் பத்து இலட்சம் மற்றும் இன்னும் அதிகமான ஜனங்களுடன் நான் தொடர்பு கொண்டிருப்பேன் என்று அறிவார்கள். ஒரு ஸ்தாபனம் துவக்கப்பட்டிருந்தால் அது எப்படியிருந்திருக்கும்! பாருங்கள்? அது சரி. ஆனால் எனக்கு ஒரு ஸ்தாபனம் தேவையில்லை, அது வேதாகமத்திற்கு எதிரானது. ஸ்தாபனத்தில் உள்ள ஜனங்கள் இரட்சிக்கப்படவேண்டுமென்று என்னால் கூடுமானவரை நான் முயற்சித்துக் கொண்டிருக் கிறேன். அதுதான் காரியம். கர்த்தர் ஜனங்களிடத்தில் எனக்கு கொடுத்திருக்கிற செல்வாக்கை ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் மேல் வைப்பதற்கு பதிலாக, நிச்சயமாக அதை அவருடைய மகிமைக் கென்றே உபயோகிப்பேன். அதற்கு உரியவராயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் மேல் அதை நான் வைப்பேன். எந்த ஸ்தாபனமும் உங்களை இரட்சிக்க முடியாது; அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே முடியும். இப்பொழுது, கைகளை வைப்பதின் பேரில், இப்பொழுது, சிறிது வித்தியாசமான ... 96. இப்பொழுது, அருமையான பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நீங்கள், என்னுடன் சண்டைக்கு வராதீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் ஒரு நிலைக்கு வந்து, " நாம் சென்று பரிசுத்த ஆவிக்காக காத்திருப்போம்' என்று கூறினால், பெந்தெகொஸ்தேயில் என்ன ஒரு வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது! 97. ஆகவே நான் இதைக் கூறுகிறேன் ... உங்களுடைய உணர்வுகளை புண்படுத்துவதற்கல்ல. களத்தில் எனக்கு இருக்கும் மிகப்பெரிய உதவி பெந்தெகொஸ்தே ஜனங்கள் தான், ஏனெனில் அவர்கள் தெய்வீக சுகமளித்தல் மற்றும் தேவனுடைய வல்லமையின் செய்தியை விசுவாசிக்கின்றனர். மற்றவர்கள் தங்கள் மூக்கை அதற்கு நேராக திருப்புவார்கள். 98. ஆனால் சபைக்கு வெளியே இருக்கின்ற தனிப்பட்ட நபர்கள், நித்திய ஜீவனிற்கு முன்குறிக்கப்பட்டவர்கள், அவர்கள் வருவார்கள். அவ்வளவு தான். ஆனால் முன்குறிக்கப் படாதவர்கள் வரமுடியாது; தேவன் அவ்விதமாகக் கூறினார், "அவர்கள் ஆக்கினைக்காக முன்குறிக்கப்பட்டனர்'' ஆனால் எந்த ஒருவரும் அழிந்து போக வேண்டும் என்று அவருக்கு சித்தமல்ல, ஆனால், அவர் தேவனாய் இருப்பதால், அவர்கள் அதை கண்டனம் பண்ணு வார்கள் என்பதை அவர் கண்டார். ஆதலால் அது - அது அவ்வளவு தான், அவர் அதை முன்பாகவே கண்டார். அந்த காரியங்களை காண்பது தான் தேவனுடைய முன்னறிவு ஆகும். இந்த அதே நாளில் சபை எங்கே நின்று கொண்டிருக்கும் என்பதை அவர் முன்னறிவித்தார். தேவன் அதை துவக்கத்திலிருந்தே அறிவார். சபை இன்று எவ்விதமாக இருந்து கொண்டிருக் கின்றதோ அதை தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அறிந்திருந்தார். இன்றிரவு நான் இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருப்பேன் என்று உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்பே அவர் அறிந்திருந்தார். அவர் தேவன்; துவக்கத்திலிருந்து முடிவுவரை அவருக்குத் தெரியும். 99. இப்பொழுது, இப்பொழுது, பெந்தெகொஸ்தே ஜனங்கள் போதித்துள்ளனர் . . . இப்பொழுது, அநேகமாக இதன் பேரில் நிறைய காரியங்களை என்னால் எடுக்கமுடியும், ஆனால் வார்த்தைக்கு வரவேண்டுமானால் நான் உத்தமமாக இருக்க வேண்டும். ''காத்திருத்தல்'' ("tarrying"') என்கின்ற ஒரு காரியமானது ஒருக்காலும் கிடையாது! நீங்கள் தவறில் இருக்கின்றீர்கள். காத்திரு என்றால் "ஜெபி'' என்று அர்த்தமல்ல. ''எதிர்பார்த்திரு'' என்று அர்த்தம். மேலேறிச் சென்ற பிறகு, இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு ... சிலுவையிலறையப்படுதல், பிரகாரம் சுத்தமாக்கப்படுதல். பாவ நிவாரண பலியின் நாளுக்கு பிறகு, உயிர்த்தெழுதல் .... அவர் கொல்லப்பட்டபோது, அது பாவ நிவாரண பலியின் நாள், பிறகு மேலேறிச் செல்வதற்கு முன்பு நாற்பது நாட்கள், பிறகு பெந்தெகொஸ்தே. பெந்தெ கொஸ்தே என்ற வார்த்தைக்கு ''ஐம்பது'' என்று அர்த்தம், பாவநிவாரண பலி செலுத்துதலுக்குப் பிறகு ஐம்பது நாட்கள் என்பதாகும். 100. பாவநிவாரண பலி செலுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொன்றும், எழுத்துப்பூர்வமாக, பூகோளரீதியாக, தேவன் கூறியவிதமாகவே ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக வந்தாக வேண்டும். ஆகவே பெந்தெகொஸ்தே, அது ஒரு யூபிலி நேரமாக இருந்தது, அறுவடையின் முதற் பலன்களை அவர்கள் கொண்டு வந்த போது, ஒரு யூபிலியைக் கொண்டிருந்தனர். 101. இப்பொழுது, இயேசு வரும் வரைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்தாக வேண்டிய பரிசுத்த ஆவி சபை, அந்த சபையினுடைய முதற் பலன்கள், முதற் பலன் பெந்தெகொஸ் தேயன்று வந்தது. அது பெந்தெகொஸ்தே நேரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னதாக அது இருந்தது; அது சுத்தப்படுத்தப்பட்ட பிறகு, பலியானது கொல்லப்பட்ட பிறகு, இயேசு கிறிஸ்து மேலேறிச் செல்லுதல் வரைக்கும் நாற்பது நாட்களாக இருந்தது. அவர் "எருசலேம் வரை சென்று உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங்கள்.'' என்றார். அப்போஸ்தலர் 1... 102. அப்போஸ்தலர் 2, ''பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்கு தந்தருளின வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.'' 103. ஆகவே அப்பொழுது வெளியே இருந்த மத உலகம் அந்த மகத்தான வைதீக சபைகள், வந்து இந்த ஜனங்கள் தள்ளாடி குடித்து வெறித்த மக்களைப் போல இருந்ததைக் கண்டனர். ஆகவே அவர்கள் வந்து இவர்களைப் பார்த்து சிரித்து கேலி செய்து, "இந்த கலிலேயக் கூட்டத்தினரைப் பாருங்கள்! இவர்கள் எல்லாரும் குடித்து வெறித்துள்ளனர்!'' என்றனர். தவறான புரிந்து கெள்ளுதலைப் பார்த்தீர்களா? 104. என்னுடைய கத்தோலிக்க நண்பனுக்கு கூறுகிறேன், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாள் அங்கே இவர்களுடன் இருந்தாள். சகோதரியே, பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளாமல் அவள் பரலோகத்திற்கு வர தேவன் அனுமதிக்கமாட்டாரானால், அந்த விதமாக இருக்குமானால், அதை விட குறைவான ஒன்று உங்களை அங்கே கொண்டு செல்லும் என்று நீங்கள் நீனைக்கிறீர்களா? இல்லை. ஆகவே நம்முடைய வீண் பெருமையான வீம்பான காரியத்தை விட்டுவிடுவோமாக, அதை நாம் விட்டு விடுவோமாக. 105. சொல்வதற்கென உலகம் வைத்திருப்பவைகளுக்கு எந்தவித கவனத்தையும் செலுத்த வேண்டாம்! தேவன் சொல்வதற்கென வைத்திருப்பவைகளையே நாம் கவனிக்க வேண்டும். இது தான் தேவனுடைய வார்த்தையாகும். இந்த வரைபடத்தின் படியேதான் நாம் அதை கட்டவேண்டியவர்களாகவுள்ளோம், ஏனெனில் அவர் பேதுரு விடம் "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை,'' என்று கூறிகுர். எல்லா காரியமும் நடந்தேறும். பாதாளத்தின் வாசல்கள் அதற்கு எதிராக இருக்கும் என்று அது காண்பிக்கிறது, ஆனால் அதை மேற்கொள்ளமுடியாது. அதை நிறுத்திவிடலாம் என்று மக்கள் நினைக்கின்றார்களா? நீங்கள் சூரியனைக் கூட விரைவாக நிறுத்திவிடலாம். அது சரி. அதையோ உங்களால் நிறுத்த முடியாது. அது முன் செல்ல வேண்டுமென்று தேவன் நியமித்திருக்கின்றார். 106. இங்கே நான் முதன்முதலாக நான் மனம்திரும்பினேன், அங்கே பின்னால் இருக்கின்ற என்னுடைய ஏழை தாயும் கூட எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று எண்ணினார்கள். என்னுடைய மாமியாரும் ''அவன் மனநல காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டுடியவனாக இருக்கிறான்" என்று கூறினார்கள். அந்த நகரத்தின் பிரசங்கிகள், "இன்னும் சீக்கரத்தில் எரிந்து போய்விடுவான்,'' என்றனர். நான் நீண்ட காலமாக எரிந்து கொண்டிருக்கிறேன். அது இன்னுமாக - இன்னுமாக எரிந்து கொண்டிருக்கிறது, எந்நேரத்திலும் இன்னும் பிரகாசமாக. ஏன்? அது அணைந்து போக முடியாது, அது தேவன் ஆகும்! எரிந்து அணைந்து போவதற்கு பதிலாக, அது இப்பொழுது உலகம் முழுவதுமாக பரவிக் கொண்டிருக்கிறது. 107. இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஓஹையோ நதியண்டையில். இங்கே சரியாக ஓஹையோ நதியில் நான் ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருக்கும் போது அதே காரியத்தைதான் அவர் கூறினார், உங்களில் அநேகர் அங்கே நின்று கொண்டிருந்தீர்கள், அந்த ஒளி, தூதன், நாங்கள் எங்கேயிருந்தோமோ அந்த இடத்திற்கு நேராக கீழே வந்து, ''இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தியும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை கொண்டு வரும்,'' என்றார். ஆகவே அது அதைச் செய்தது. அது .... அவர் இன்னுமாக வரவில்லை, ஆனால் அது என்ன செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள், அது உலகம் முழுவதுமாக எங்கும் பரந்தகன்று சென்றிருக்கின்றது. பாருங்கள்? ஆகவே இன்று இப்பொழுது, சற்று சிந்தியுங்கள், சென்றுள்ள பிரயாசத்தினால், பல இலட்சக்கணக்கானவர் வந்துள்ளனர். 108. அந்த பிராயசத்தினால் தான் எத்தனை இலட்சக்கணக் கானவர்கள் வந்தனர் என்று கத்தோலிக்க பத்திரிக்கையான ஞாயிறு வருகையாளர் கூட அதைக் குறித்து கூறியுள்ளது. 109. மற்றவர்கள் அதை கேட்டு, ''அது தான் சத்தியம்! இந்த உலகக் காரியங்களினின்று சரியாக என்னை இப்பொழுது அகற்றிக் கொண்டு, சென்று உண்மையான சுவிசேஷத்தை பிரசங்கிக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்று கூறுகிறார்கள். 110. அதன் காரணமாக தான் அவர்கள் நம்மை ''முழு சுவிசேஷம்'' என்று அழைக்கின்றனர், அவர்கள் முழு சுவிசேஷத்தை கேலிக் கூத்தாக செய்கின்றனர். ஆனால், சகோதரனே, ஒன்றுமில்லாத பாதி எனக்குத் தேவையில்லை, நான் ...... அது எனக்கு முழு காரியமாக இருக்க வேண்டும். அதில் ஒரு பாகம் நன்றாக இருக்குமானால், அதின் மற்றைய பாகமும் நன்றாக இருக்கும். அந்த முழுமையான சுவிசேஷம்! 111. இப்பொழுது, கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் திரும்பவுமாக அங்கே வந்தார். பெந்தெகொஸ்தே ஜனங்கள் காத்திருந்தனர், ''அங்கே பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி நிரப்பிற்று''. 112. அதற்கு பிறகு ஒரு முறை கூட அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்க இருக்கவில்லை. பேதுரு இந்த வார்த்தைகளை புறஜாதிகளுக்கு பேசின போது, அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு முன்பே பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கினார், அது சரியா? சற்று, அப்போஸ்தலர் 10:49 ..... ஆனால் இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் வசனத்தை கேட்டவர்கள் . . . யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனை புகழுகிறதையும் கேட்ட போது பேதுருவோடே கூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள ..... விசுவாசிகள் கேட்ட போது பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள் மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்து... பிரமித்தார்கள் . அப்பொழுது பேதுரு: துவக்கத்தில் நமக்கு நடந்தது போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் . . . காண்கையில் எவருகிலும் தண்ணீரை விலக்கலாமா? ஆகவே அவன் இருந்து பிறகு ஞானஸ் - ... இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான்! . . . 113. அது சரி; காத்திருத்தல் இல்லை; காத்திருத்தல் இல்லை. அந்த அப்போஸ்தல வழி, தேவனுக்கு எந்தவித குறிப்பிட்ட வகுத்துரைக்கப் பட்ட ஒழுங்கு முறை கிடையாது; இருதயம் பசியாயிருக்கையில், நீ எதற்காக பசி கொண்டிருக்கிறாயோ அதை அவர் உனக்கு தருவார். உனக்கு பரிசுத்த ஆவி தேவையாயிருக்குமானால், சரியாக இப்பொழுதே உன் மேல் இறங்க அவரால் முடியும். 114. பேதுரு, அவன் பிரசங்கிக்க சென்ற போது, ராஜ்ஜியத்தின் திறவு கோல்களை பேதுரு வைத்திருந்தான். இன்னும் சில நிமிடங்களில் அதைக் குறித்து பார்க்கப்போகின்ற ஒரு கேள்வியை நான் வைத்திருக்கிறேன். அவன் ராஜ்ஜியத்திற்குரிய திறவு கோல்களை கொண்டிருந்தான். அவன் அதை கொர்நேலியுவின் வீட்டிற்குத் திறந்தான். அவன் சமாரியர்களுக்கு அதை திறந்தளித்தான், இங்கே அதை அவன் திறந்தளித்தான்; ஆனால் பிலிப்பு அங்கே சென்று அவர்களுக்கு பிரசங்கித்து அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணுவித்தான், பிறகு பேதுரு வந்து அவர்கள் மேல் கைகளை வைத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, இப்பொழுது, அவன் ஒன்றைச் செய்தான், ஏனெனில் அங்கே இருந்த அந்த மந்திரவாதி . . . அங்கே சிமியோன் என்ற மாயவித்தைக்காரனை அவர்கள் கொண்டிருந்தனர், அவன், "நான் சிறிது பணத்தை உங்களுக்கு தருகிறேன், அதாவது நான் எவன் மீது கைகளை வைக்கிறேகுே அவன் பரிசுத்த ஆவியை பெறத்தக்கதாக அந்த வரத்தை எனக்கு கொடுங்கள்" என்றான். அது சரியா? ஏதோ ஒரு காரியம் சம்பவித்தது! (தங்கள் கழுத்துப் பட்டைகளை பின்புறமாக திருப்பிக் கொண்டு, வந்து அவர்கள் மேல் கைகளை வைத்து ''நான் உனக்கு அப்போஸ்தல ஆசீர்வாதத்தை தருகிறேன்" என்று கூறிகின்ற இந்த பேராய பிஷப்புகள் அல்ல) பேதுரு தன் கைகளை அவர்கள் மீது வைத்தபோது ஏதோ ஒன்று சம்பவித்தது; அது இன்னுமாக சம்பவிக்கின்றது. 115. கைககள் வைக்கப்படுகையில், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழும்போது, அவர்கள் ஈக்களைப் போல கீழே விழுவதை நான் கண்டிருக்கிறேன். ஆம். அதுதான் கைகளை வைப்பது என்பதற்குரிய அப்போஸ்தல உபதேசம் ஆகும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதிலிருந்து சிறிது வித்தியாசப்பட்டவராக நீங்கள் இருந்தால், நாளை இரவு ஒரு சிறு குறிப்பை மாத்திரம் எனக்கு எழுதுங்கள். சரி. 29. உலகத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் இன்னுமாக கேட்க . . . இன்னுமாக சுவிசேஷத்தை கேட்கவில்லை, சுவிசேஷத்தின் வார்த்தை, எவ்வளாக ..... என்னை மன்னியுங்கள். இது மையினால் எழுதப்பட்டுள்ளது, இங்கு எனக்கு வியர்வை வந்து கொண்டிருக்கிறது, அது இதன் மேல் ஊறிப்போய்விட்டிருக்கிறது. நாம் பார்ப்போம். உலகத்திலுள்ள மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் இன்னுமாக சுவிசேஷத்தை கேட்கவில்லை, இவர்கள் இன்னுமாக சுவிசேஷத்தை கேட்டிராமல் இருக்கும் பட்சத்தில், எப்படி நம்முடைய கர்த்தரால் இப்பொழுது வரமுடியும், அவர்களில் மூன்றில் இரண்டு பாகம்? நல்லது, அது முற்றிலுமாக சரி. நான் என்ன நினைக்கிறேன் என்பதை உங்களுக்கு கூறுகிறேன். 116. இங்கே சில காலத்திற்கு முன்பு சூடான் மிஷனின் தலைவரான டாக்டர், ரிட்ஹெட், அநேக பட்டங்களுடன், அவர் எத்தனை பட்டங்களைப் பெற்றிருக்கின்றார் என்று அவருக்கே தெரியாத அளவிற்கு பட்டங்களைப் பெற்றிருந்த அவர், சுமார் ஒரு வருடம் ஆறு மாதங்கள் அதற்கும் முன்னர் அங்கே என்னுடைய வீட்டிற்கு வந்தார். இவரும் இப்பொழுது பரிசுத்த ஆவியை பெற்று மெக்சிக்கோவில் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்ற இந்த பாப்டிஸ்ட் ஊழியக்காரரானான ஹைமான் ஆப்பில் மான் என்பவரும் என்வீட்டில் வந்து நின்றனர். ஆகவே அவர் வீட்டிற்கு வந்து, அவர் "சகோதரன் பிரன்ஹாம்'' என்றார், ''நீர் பெந்தெகொஸ்தேயினருடன் தொடர்பு கொண்டுள்ளீரா?'' நான், "ஆம் ஐயா'' என்றேன். அவர், ''நான் டாக்டர். ரீட்ஹெட்'' என்று கூறினார். நான், "உம்மை தெரிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உள்ளே வருவீரா?'' என்றேன். அவர், "சரி, ஐயா,'' என்றார். 117. அவர் உட்கார்ந்து, "நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் பாப்டிஸ்ட் சபையில் நியமிக்கப்பட்டீர் என்று நான் கேள்விப்பட்டேன்'' என்றார் 118. நான், "அது சரியே'' என்றேன். நான், ''அதை விட்டு நான் வெளியே வந்து விட்டேன், ஏனெனில் என்னால் அதை பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாப்டிஸ்ட் சபை என்ன கூறுகிறதோ அதை அல்ல. வேதாகமம் என்ன கூறுகின்றதோ அதை நான்நான் பிரசங்கிக்கவே விசுவாசிக்கிறேன், பாப்டிஸ்ட் சபைக்கு ஏதிராக என்னிடத்தில் ஒன்றுமில்லை, அவர்கள் மற்ற சபையைப் போல நல்லவர்களாக இருக்கிறார்கள்" என்றேன். நான் "நான் விடுதலையாக இருக்கும்படியாய், நான் அதனின்று வெளியே வந்தேன்'' என்று கூறினேன். அவர், ''நல்லது தான், நாங்களும் பாப்டிஸ்டுகள் என்று உங்களுக்குத் தெரியுமா'' என்று கூறினார். நான், "ஆம், ஐயா" என்றேன். 119. ஆகவே அவர் "நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து என்ன? நான் இருந்திருக்கிறேன், அவர்கள் நாற்காலிகளை உதைத்து குதித்து, சத்தமிட்டு, இன்னுமாக தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன்'' என்றார். 120. நான், "நானும் கூட அவை எல்லாவற்றையுமே கண்டிருக் கிறேன்'' என்று கூறினேன். ஆனால் நான் "சகோதரனே அதற்கு பின்னால், அங்கே ஒரு தூய்மையான உண்மையான ஒழுங்காகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருக்கின்றது" என்று கூறினேன். 121. அவர் ''சகோதரர் பிரன்ஹாமே, நான் அதை பெற்றுக் கொள்ள முடியுமா? எனக்கு அநேக பட்டங்கள் உண்டு! நான் ஒரு டாக்டர் பட்டம் பெற்றவன், நான் இது, நான் பி.எச்.டி (Ph.D) பட்டம் பெற்றிருக்கிறேன், எனக்கு இளங்கலையியல் பட்டம் உண்டு, எல்லா விதமான பட்டமும், எல்லா தேசங்களிலிருந்து கெளரவ பட்டங்களுடன் அதைப் போன்ற காரியங்களும் என்னிடம் உண்டு,'' என்றார். மேலும் "ஆகவே இயேசு கிறிஸ்து எங்கேயிருக்கிறார்?'' என்று கேட்டார். 122. நான், ''நல்லது சகோதரனே, அவர் சரியாக இங்கே அறையில் இருக்கின்றார்,'' என்றேன். 123. அவர் "நான் நின்று ஒரு வைராக்கியமான முகமதியனிடம் பேசினேன், அவர் அமெரிக்காவில் படித்திருந்தார், நான் அவரிடம், 'உன்னுடைய பழைய மரித்து போன தீர்க்கதரிசியை துறந்து விட்டு உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்' என்று கூறினேன். அவர் 'அன்புள்ள ஐயா, என்னுடைய முகமது செய்வதை விட உங்களுடைய உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு எனக்கு அதிகமாக என்ன செய்யமுடியும், அவர்கள் இருவரும் வேதாகமங்களை எழுதினர், அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்கள் இருவரும் மரித்தனர். மரணத்திற்கு பிறகு நமக்கு ஒரு ஜீவன் உண்டு என்று அவர்கள் இருவரும் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றனர், நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்.'' என்று கூறினார். 124. அவர் "ஓ! ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் சந்தோஷத்தை கொண்டிருக்கிறோம்'' என்றார். 125. அவர், 'நாங்களும் கூடத்தான். என்னால் கூட உங்களைப் போலவே உளவியல் தத்துவத்தை உற்பத்தி செய்ய முடியும்'' என்றார். அது சரிதானே. "அவர் கூறினார், 'நல்லது பாருங்கள், எங்கள் முகமது ... உங்கள் கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்களே.' என்றார். 126. டாக்டர் ரீட்ஹெட், "என்ன, அவர் உயிரோடு எழுந்து விட்டார்!" என்றார். 127. அவர், 'அதை நிரூபியுங்கள்' என்றார், 'அதை நிரூபியுங்கள்!'' என்றார், 'அதை நிரூபிக்க இரண்டாயிரம் வருடங்கள் உங்களுக்கு இருந்தது, ஆனால் அதைக் குறித்து உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தான் கேள்விப்பட்டிருக்கின்றனர்' என்றார், 'எங்கள் முகமது மரித்தோரிலிருந்து எழுந்திருக்கட்டும், முழு உலகமே இரண்டே நாட்களில் அதைக் குறித்து தெரிந்து கொள்ளும்' என்றார்'' அவர் கூறுவது சரியே. ''அவர் கூறினார், 'எங்கள் முகமது மரித்த பிறகு ஜீவனைத் தவிர வேறெதையும் எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்யவில்லை. உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ உங்களுக்கும், போதகர்களாகிய உங்களுக்கும், அவர் செய்த அதே காரியங்களை நீங்களும் கூட செய்வீர்கள் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கின்றாரே. ஆகவே போதகர்களாகிய நீங்களும் அதை இப்பொழுது செயல்படுத்துங்கள். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து விட்டார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்'''. 128. அவர், ''சகோதரன் பிரன்ஹாம், தூசியில் அதைப் போன்று என் காலை சரேலென்று தேய்த்து பேச்சின் பொருளை மாற்றி விட்டேன்" என்று கூறினார். அந்த எல்லா பட்டங்களுடன்! ஏன்? அந்த பட்டங்களில் தேவன் எங்கேயிருக்கிறார்? ஒரு பி.எச்டி (Ph.d) பட்டங்கள் அல்லது டி.டி (D.D) பட்டங்கள் இன்னும் போன்றவற்றின் மூலமாக தேவன் அறியப்படமாட்டார். 129. சாதாரண விசுவாசத்தின் மூலமாயும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாயும் தேவன் அறியப்படுகின்றார். அது தான் ஒரே ஒரு வழியாகும். தேவன், உனக்குள் இருந்து அவர் உன்னை ''ஒரு தேவனுடைய குமாரனாக'' கொண்டு வருகிறார், உன்னுடைய சுபாவத்தை மாற்றுகிறார். ஆகவே அந்த அதே காரியம், இந்த எல்லா காரியங்களையும் உண்டாக்கி தம்முடைய வார்த்தையின் மூலமாக உலகத்தை பேசி சிருஷ்டித்த சிருஷ்டிகராகிய தேவன் - அந்த அதே ஆவி உனக்குள்ளாக இருத்தல், அப்பொழுது தேவன் கூறுகின்ற எல்லாவற்றையும் நீ விசுவாசிக்கின்றாய். கூடாதது ஒன்றுமில்லை; நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். 130. நீங்கள் ஒரு சிறிய போதகத்தை நம்பி நின்று "'நான் அதை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளமாட்டேன். தேவன் இதை செய்வார் என்று என்னால் விசுவாசிக்க முடியவில்லை. என்னால் விசுவாசிக்க முடியவில்லை'' என்று கூறாதீர்கள். நீங்கள் உங்கள் அவிசுவாசத் தினாலே தேவனை மட்டுப்படுத்தி விடுகிறீர்கள். அது தான். 131. ஆகவே டாக்டர். ரீட்ஹெட் அங்கே நின்று "சகோதரன் பிரன்ஹாமே, ஒரு மனிதனால் உண்மையாகவே பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள முடியுமா?'' என்றார். 132. நான், ''ஆம், ஐயா, டாக்டர். ரீட்-, உங்களால் முடியும்'' என்றேன். 133. அவர், "தேவன் என்னுடைய இருதயத்தை அறிவாரானால்; நான் விசுவாசிக்கிறேன், நீங்கள், சரியாக இப்பொழுது அபிஷே கத்தின் கீழாக அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் எனக்கு ...... நான் உண்மையயைக் கூறுகிறேன் என்று நம்புகிறீர்களா?" என்றார். நான், ''அப்படித்தான் என்று நான் நம்புகிறேன்!'' என்றேன். அவர், "எப்படி அதை நான் பெற்றுக் கொள்ள முடியும்?'' என்றார். - நான், ''முழங்காற்படியிடுங்கள்'' என்று கூறினேன். 134. அங்கே அவர் அந்த பழைய காபி மேஜையின் பக்கத்தில் முழங்கால்படியிட்டார். இங்கிருந்துதான் அதை நான் எடுத்தேன். இங்கே சற்று முன்னர் அதை சரி செய்த அந்த மனிதன் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவர், அங்கே கீழே முழங்கால்படியிடு கையில், மேலே இருந்த கண்ணாடியை உடைத்துவிட்டார். அவர் "தேவனே, என்னுடைய பாவமான ஆத்துமாவின் மேல் இரக்க மாயிரும்'' என்றார். நான் அவர் மீது கைகளை வைத்தேன், அங்கே அவர் மீது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் சரியாக வந்தது. அது சரி. 135. ஆகவே அவர் இப்பொழுது எல்லா இடத்திலும் அந்த பாப்டிஸ்ட் சபையை கொழுந்து விட்டெரியச் செய்திருக்கின்றார்! அது அங்கே முழுவதுமாகச் சென்றது. அது சரி. 136. சுவிசேஷமானது... இயேசுவால் அதுவரை ... வரமுடியாது. 137. கவனியுங்கள்! நாம் உலகம் முழுவதுமாக கைப்பிரதிகளை கொடுக்கிறோம். அந்த கைப்பிரதிகள் கொடுக்கப்படாமல் உங்களால் எந்த ஒரு மூலைக்கும் செல்ல முடியாது, வேத கல்லூரி படிப்பின் மூலம் எவராவது அங்கே வருகின்றனர். நீங்கள் இன்று அயல்நாடுகளுக்கு சென்று உங்களை ஒரு "மிஷனரி'' என்று அழைத்துக் கொள்ளும்போது, அவர்கள் உங்களைப் பார்த்து சிரிப்பதைப் பாருங்கள். நீங்கள் இந்தியாவுக்குள் நடந்து சென்று ''நான் ஒரு மிஷனரி ஊழியக்காரன்'' என்று கூறிப்பாருங்கள். 138. "நல்லது, நீங்கள் எங்களுக்கு என்ன போதிக்கப்போகிறீர் கள்?'' அவர்களுக்கு வேதாகமத்தை குறித்து அதிகமாக தெரியும். இதைக் காட்டிலும் ... அங்கே இருக்கின்ற அவர்களுடைய பிள்ளைகளில் சிலர், இங்கே அமெரிக்காவில் இருக்கின்ற அவர்களுடைய போதகர்களுக்கு அதைக் குறித்து தெரிந்துள்ளதைக் காட்டிலும், அதைக் குறித்து இன்னும் அதிகமாக அவர்களுக்கு தெரியும். அது ஒரு கிழக்கத்திய புஸ்தகம் தானே. ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அமெரிக்கா என்னும் தேசம் வருவதற்கு முன்னர் நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்கள் சுவிசேஷத்தை கொண்டிருந்தனர். பரிசுத்த தோமா, அவர் பிரசங்கித்த அந்த மகத்தான சபை, இன்னும் அது இந்தியாவில் நின்று கொண்டிருக் கின்றது. உங்களுடைய எந்த ஒரு உபதேசமும் அவர்களுக்கு தேவையில்லை, அவர்களுக்கு அதைக் குறித்து எல்லாம் தெரியும். அவர்கள் "எங்களுக்கு நீங்கள் என்ன உபதேசிக்கப் போகிறீர்கள்?'' என்று கூறுகின்றனர். "நல்லது நாங்கள் எல்லாரும் அமெரிக்க மிஷனரிமார்கள்.'' 139. ''நீங்கள் எங்களுக்கு என்ன உபதேசிக்கப் போகிறீர்கள், எப்படி விஸ்கி குடிப்பது என்றா? அங்கே உங்கள் சபைகளில் அதைத்தான் முழுவதுமாக நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்! எப்படி சிகரேட் புகைப்பது என்றா? எப்படி எங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்வது என்று இன்னும் மற்றவை களையுமா போதிக்கப் போகிறீர்கள். அதை நீங்கள் செய்யப் போகிறீர்கள் என்றால், அது எங்களுக்குத் தேவையில்லை'' என்றார்கள். ''நீங்கள் ஏதோ ஒரு புதிய வேதத்தத்துவத்தையோ அல்லது எதோ ஒன்றுடன் நீங்கள் இங்கே வருவீர்களானால், வார்த்தையில் சிலவற்றை நீங்கள் எங்களுக்கு போதிக்க முயற்சிப்பீர்களானால், அதைக் குறித்து உங்களைக் காட்டிலும் அதிகமாக எங்களுக்கு தெரியும்" என்றார்கள். அது சரி. அவர் ''வார்த்தை என்ன கூறுகிறதோ அதை நீங்கள் நிரூபித்துக்காட்ட நீங்கள் வருகிறீர்கள் என்றால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வோம்'' என்றார். ஆமென்! அதோ புரிகின்றதா. அவர்கள் அதற்கு தான் தாகம் கொண்டிருக்கின்றனர். 140. என்னுடைய வார்த்தையை குறித்து கொள்ளுங்கள், உங்களுடைய வேதத்தின் பக்கங்களில் இதை எழுதிக் கொள்ளுங்கள், ஏனெனில் இது கர்த்தர் உரைக்கிறதாவது என்ப தாகும், ''நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் இந்தியாவில் இறங்கும் போது, பத்தாயிரம் பத்தாயிரம்கணக்கானவர்கள் இரட்சிக்கப்படுவதைக் குறித்து நீங்கள் கேள்விப்படப் போகிறீர்கள்". பரிசுத்த ஆவியானவர் அதைக் கூறியிருக்கின்றார். நான் அதை என்னுடைய வேதாகமத்தில் எழுதி வைத்திருக்கின்றேன். சரியாக இங்கே பத்தாயிரக்கணக்கான வேதாகமங்களில் அது எழுதி வைக்கப் பட்டிருக்கின்றது, அந்த சிறு பையன் உயிரோடெழுப்பப்பட்டது போல், ஒரு தரிசனத்தினால் அவர் கூறினது போலவே. ''அங்கே அவர்களில் மூன்று இலட்சம் பேர்கள் இருக்கின்றனர். '' ஆகவே நீங்கள் அது சரியா என்று பாருங்கள்! அப்படித்தான் அங்கே சுவிசேஷமானது ஓரிரவுக்குள்ளாக பிரசங்கிக்கப்படப் போகின்றது. அது இடத்திற்கு இடம் அப்படியே எங்கும் விரிந்து பரந்தகன்று செல்லும். 141. ஆப்பிரிக்காவில், ஒரே ஒரு பீட அழைப்பில் தேவனை ஏற்றுக்கொண்ட அந்த முப்பதாயிரம் பேரிடம், "உங்கள் கரங்களை உயர்த்தி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு அமெரிக்க மிஷனரி இங்கே வந்து சபைகளில் மொழிகளை நீங்கள் கற்றுக் கொள்ளத்தக்கதாக உங்களுக்கு போதிக்க நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். ஒரு மிஷனரியை அங்கே அனுப்ப, தாய்மார்கள் சலவை வேலை செய்கின்றனர், அவர்கள் அங்கே சென்று ஒரு பெரிய அருமையான காரில் சவாரி செய்து, வசதியான இடத்தில் வாழ்ந்து கொண்டு சில கைப்பிரதிகளை கொடுத்து விட்டு திரும்ப வந்து விடுகின்றனர். அது அவர்களுக்கு தேவையில்லை; அவர்கள் அதைத்த என் நிரூபித்தனர். 142. சில இரவுகளுக்கு முன்னர் இங்கே இந்த யூத மருத்துவமனையில், ஊழியக்காரர்களுடனும் மருத்துவர் களுடனும் தெய்வீக சுகமளித்தல் என்ற பொருளின் பேரில், ஒரு கூட்டத்தில் நான், நான் பேசினேன், ''நீங்கள் என்னை ஒரு பரிசுத்த உருளையன் என்று அழைத்தீர்கள், அந்த கர்த்தருடைய தூதன் ...... நான் கூறினபோது எனக்கு ஒரு தீயக்கனவு உண்டானது என்று கூறினீர்கள்,'' என்று கூறினேன். நான், ''நம்முடைய சொந்த சபையும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான டாலர்களை செலவு செய்து மிஷனரிகளை ஆப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. நான் அங்கே சென்ற போது, அவர்கள் சிறு மண் விக்கிரகங்களை செய்து கொண்டிந்தனர், மண் விக்கிரகங்களிலிருந்து உதவி பெற முயற்சித்து கொண்டு, தங்களை 'கிறிஸ்தவர்கள்' என்று அழைத்துக் கொண்டிருந்தனர்'' என்றேன். மேலும் நான், ''ஆகவே நீங்கள் 'அதிதீவிர மூடபக்தி வைராக்கியம்' என்று எதை அழைத்தீர்களோ அது, நம்முடைய இலட்சக்கணக்கான டாலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மிஷனரிமார்கள் கடந்த நூற்று ஐம்பது வருடங்களாக செய்துள்ளதைக் காட்டிலும் ஐந்து நிமிடங்களில் கிறிஸ்துவுக்கு அதிகமான ஆத்துமாக்களை சம்பாதித்தது'' என்று கூறினேன். அவர்கள் தங்கள் வாய்களை மூடிக்கொண்டனர், அது தான்! அதோ அது இருக்கிறது. நான், அந்த மனிதரிடம், "அறிவு புகட்டிக் கொள்ள நீங்கள் ஒருக்காலும் - ஒருக்காலும் முயற்சிக்க வேண்டாம், இந்த சுவிசேஷத்தை எடுத்துக் கொண்டு ஒரு வெள்ளை மனிதனும் கூட செல்ல முடியாத, நோய்களுள்ள, நாகரீகத்திற்கு புறம்பான தேசத்திற்கு அங்கே செல்லுங்கள்.'' என்று கூறினேன் 143. டர்பன் நகர் செய்தித்தாளிலிருந்து ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன், அது "வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு வயதான மனிதன் கூட பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று கொண்டு சராசரியாக ஒரு வாரத்திற்கு ஆயிரம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருக்கிறார். ''அவ்விதமாகத்தான் சுவிசேஷமானது சென்று கொண்டிருக்கின்றது, சிறிது சிறிதாக, முழு உலகத்தை சுற்றிவர இன்னும் ஆறு மாதங்கள் மாத்திரமே தேவையாயுள்ளது. சரி. 30. கிறிஸ்தவ - கிறிஸ்தவ விஞ்ஞானத்தை குறித்து நீங்கள் விளக்குகிறீர்களா? 144. அது சரி. நான் .... இங்கே ... என் சகோதரனே அல்லது சகோதரியே, இந்த கேள்வியை வைத்த யாராயிருந்தாலும் சரி, நான் உங்கள் மதத்தைக் குறித்து பேசமாட்டான். கிறிஸ்தவ விஞ்ஞானம் என்பது உளவியல் ஆகும். (தெய்வீக சுகமளித்தல் தேவனுடைய வல்லமையாகும்!) கிறிஸ்தவ விஞ்ஞானம் காரியத்திற்மேலாக சிந்தையை வைக்கின்றதாகும். கிறிஸ்தவ விஞ்ஞானம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை மறுதலிக்கிறது. கிறிஸ்தவ விஞ்ஞானம் ... இல்லை, திருமதி எட்டி அவர்களின் புத்தகங்களை அங்கே வைத்திருக்கிறேன், நான் அவையெல்லாவற்றையும் படித்தேன். பாருங்கள்? அது சரி, கிறிஸ்தவ விஞ்ஞானம் இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை மறுதலித்து, அவரை ஒரு ''தீர்க்கதரிசி'' என்று கருதுகிறது. இயேசு கிறிஸ்து ஒரு மனிதன் அல்ல; அவர் தேவனாக இருந்தார்! அவர் தெய்வீகமானவராக இருந்தார்! ஆகவே அவர்கள் அதை காரியத்திற்கு மேலாக சிந்தைவைப்பது என்றே நினைக்கின்றனர். 145, என்னுடைய புயத்திலோ அல்லது என்னுடைய வயிற்றிலோ, சுளுக்கு இருக்குமானால் .... அல்லது என் தலையில் வலி இருக்குமானால், அது வலியுண்டாக்குகிறது என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு போதுமான உணர்வு இருக்கின்றது, அது எனக்கு வலியுண்டாக்குகிறது என்று நான் நினைக்கின்றேன் என்பதாக அல்ல, ஆனால் தேவனுடைய வல்லமை அதை எடுத்து போடும் என்று எனக்குத் தெரியும், என்னுடைய... நான் அதைக் குறித்து சிந்திப்பதல்ல. பாருங்கள்? ஆதலால், கிறிஸ்தவ விஞ்ஞானம், என்னிடம் கேட்கப்பட்ட மற்றொன்றுடன் நான் இதையும் கூறுவேன், அது நவீன நாட்களின் கொள்கைகளில் ஒன்றாகும், ஒரு ஆழமான, இருண்ட தவறாகும். அது சரி. நண்பனே, அல்லது இதை எழுதின யாராயிருந்தாலும் சரி, உன்னுடைய உணர்வுகளை புண்படுத்துவதற்காக அல்ல, ஆனால் நான் உத்தமமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதை எழுதின நீயும் நானும் ஒன்றாக, ஒரு நாளில் இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தில் கணக்கொப்புவிக்கும்படியாக நிற்போம், நான் என்ன கூறுகிறேனோ அதற்கு நான் பதில் கூற வேண்டியவனாக இருக்கிறேன். இப்பொழுது, எனக்குத் தெரியாதவரையில், நான் அதற்கு பதில் அளிக்க மாட்டேன். அது சரி. 31. இப்பொழுது, நாங்கள்... நாங்கள் இங்கிருந்து தொலை தூரத்தில் வசிப்பதால். . . அவர்கள் கூறுகின்றனர்: கூடாரத்திற்கு வர வேண்டுமானால் நாங்கள் வசிக்கின்ற மிக தொலை தூரத்திலிருந்து இங்கே வரவேண்டியதாக இருக்கிறது. நாங்கள் எங்கு செல்ல நீர் பரிந்துரைப்பீர், இந்த சபைகளெல்லாம் தாய் சபைக்கு அல்லது கத்தோலிக்கத்திற்கு செல்வதை காண்கையில், நாங்களாக ஒன்றாக கூடலாமா? 146. என்னுடைய அருமை சகோதரன் அல்லது சகோதரி, இதை எழுதின யாராயிருந்தாலும் சரி, எந்த சபைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று நான் கூறமாட்டேன். ஆனால் நான் என்ன செய்வேனென்றால், இதை, என் சகோதரனே, சகோதரியே, நான் .....நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமலிருந்தால், பாருங்கள், நல்லது நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்டு பிறகு நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுள்ள மக்கள் இருக்கின்ற ஒரு கூட்டத்திற்கு செல்லுங்கள் . நீங்கள் . . . அந்த விதமான ஜனங்களுடன் நீங்கள் ஒன்று கூட வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். 147. இங்கே சமீபமாக ஒரு மனிதனை நான் கண்டேன், அவர் பிறந்து பத்து வருடங்களாக ... அல்லது பிறக்கவில்லை, என்னை மன்னியுங்கள், அவர் கடந்த பத்து வருடங்களாக பார்வை யில்லாமல் இருந்தார். அவர் ஒரு பெரிய சபையை சார்ந்தவராக இருந்தார், அவர் மிசெளரியிலுள்ள கென்னட்டில் வாழ்ந்து வந்தார். அவருக்கு .... அவர் ஒரு - அவர் அநேக வருடங்களுக்கு முன்னர் ஒரு காலணி தைப்பவராக இருந்தார், அவர் கண் பார்வையிழந்தார். அந்த மனிதன் மேடையின் மீது வந்தார், அவர் யார் என்றும் அவரிடம் என்ன தவறு இருந்ததென்றும், அவர் எவ்வளவு காலமாக குருடாக இருந்தார் என்றும் பரிசுத்த ஆவியானவர் அவருக்கு கூறினார், அவர் செய்த ஏதோ ஒரு சிறிய அசுத்த மான கிரியையையும் கூறினார். அவர் " நான் அங்கே செல்ல தேவன் என்னை வாழ விடுவாரென்றால், நான் அதை சரி செய்வேன்,'' என்றார். ஆகவே, அவர் அதைச் சொன்ன மாத்திரத்தில், அவருடைய கண்கள் திறக்கப்பட்டது; இதே வேதாகமத்திலிருந்து, அதிகாரத்திற்கு பிறகு அதிகாரம் வாசித்து காண்பித்தார். 148. அவர் தன்னுடைய சபைக்கு சென்று துதி செலுத்திக் கொண்டிருந்தார். ஆகவே அந்த போதகர் அவரிடம், " இது எப்படியோ நடந்துவிட்டிருக்கும். என்ன, நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள், அவ்வளவு தான். இதில் ஒன்றுமே கிடையாது. இந்த காரியத்தில் ஒன்றும் கிடையாது, இது பிசாசினால் உண்டானது!'' என்று கூறினார். 149. பிசாசினால் சுகப்படுத்த முடியும் என்று கூறும் ஒரு வேதவசனத்தையாவது எனக்கு காண்பியுங்கள் என்று நான் அனைவருக்கும் சவாலிடுகிறேன். பிசாசினால் சுகமாக்க முடியும் என்று நீங்கள் எனக்கு காண்பிப்பீர்களானால், நீங்கள் அதைச் செய்வீர்களானால், பிசாசு உங்களுடைய பிதா என்று நான் நிரூபிக் கிறேன்; அது சரி, அது தேவனுடைய வார்த்தைகளில் இல்லை. அது நிரூபிக்கப்பட முடியாது. ஆகவே நீங்கள்..... வேண்டுமானால் . நீங்கள் அதை முயற்சித்துப் பார்க்கலாம், நீங்கள் வரவேற்கப் படுகிறீர்கள். அது சகோதரனே, பிஷப்புகளாலும் மற்ற எல்லாவற்றாலும் செய்யப்பட்டுவிட்டது, ஆதலால் அதைச் சொல்லாதே. 150. கவனியுங்கள்! அந்த அதே மனிதன் தன்னுடைய இருதயத்தில் அதை விசுவாசித்தான். மூன்று மாதங்கள் கழித்து முன்பு இருந்த விதமாகவே பார்வை இழந்தவராக, அவர் என்னுடைய ஆராதனைகளில் இருந்தார், அது தான் காரியம். 151. ஆகவே அந்த விதமான கொள்கைகளிலிருந்து விலகி யிருங்கள்! விசுவாசிக்கிறவர்களுடன் உங்களை ஒன்று கூட்டிக் கொண்டு, ஐக்கியப்படுங்கள். வேதாகமம் கூறுகிறது, " அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. '' ''வேறு பிரித்துக் கொள்ளுங்கள்,'' என்று தேவன் கூறுகிறார். வெளியே வாருங்கள்! "ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவி லிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய்... அசுத்தமானதைத் தொடா திருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன். சபையின் நடுவில் நிற்கின்ற கர்த்தர் நானே," அது சரி. வெளியே வாருங்கள்! அவர்களுடன் ஐக்கியப்படாதீர்கள். 152. ஆனால்... ஒரு சபை, அருமையான சபையின் மத்தியில் நீங்கள் உங்களை ஐக்கியப்படுத்துங்கள். மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், காம்ப்பெல்லைட், யாராயிருந்தாலும் சரி, அது... எங்கே உண்மையான விசுவாசிகள் இருக்கிறார்களோ, அங்கே சபை பிரமாணம் என்ன கூறுகிறதோ அதைக் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை, அவர்கள் தங்கள் சகோதரர் களை, சகோதரிகளை சந்திக்கவும் ஒன்றாக தேவனை ஆராதிக்கவும் அங்கே செல்கின்றனர். அது சரி. 32. கடந்த இரவு நீங்கள் ''ஒவ்வொரு கோத்திரத்திலும், தேசத்திலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக்கூடாதது மான திரளான கூட்டமான ஜனங்கள்,'' என்று வெளிப் படுத்தின விசேஷம் 7வது அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதைக் குறித்து பேசினீர்கள். ''அவர்கள் தான் கிறிஸ்துவின் மணவாட்டி' என்று கூறியதை, நான் நீங்கள் கூறியதை சரியாக புரிந்து கொண்டுள்ளேனா? ஆம், நீங்கள் என்னை புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள்தான் மணவாட்டி. 153. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், சரியாக வெளிப்படுத்தல் 7ல், அவன் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரைக் கண்டான். இப்பொழுது என் சகோதரனே, இதன் பேரில் உங்களை குற்றப்படுத்தவில்லை, ஆனால் அந்த நூற்று ... வழக்கமாக ஒரு யெகோவா சாட்சிகள் குழுவைச் சேர்ந்த ஒருவர் தான் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் தான் மணவாட்டியாக இருக்கும் என்று விசுவாசிப்பார். அது பிழையான ஒன்றாகும்! அவர்கள் ஒவ்வொருவரையும் யோவான் அறிந்திருந்து அவர்களை பெயர் சொல்லி அழைத்தான். அவர்கள் ஒவ்வொருவரும் யூதர்களாக இருந்தனர். அவர் ''காத்திலிருந்து பன்னீராயிரம், செபுலோனிலிருந்து பன்னீராயிரம், பென்யமீனிலிருந்து பன்னீராயிரம், யூதாவிலிருந்து பன்னீராயிரம்,'' என்றான், அது சரியா? இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரங்கள் இருக்கின்றது, பன்னி ரண்டும் பன்னிரண்டும் பெருக்கினால் ... இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் ஆகும். அது சரியா? அவர் "எல்லா இஸ்ரவேல் புத்திரரும்'' என்றார். யோவான் அவர்களை அடையாளம் கண்டு கொண்டான். 154. பிறகு அவன் இந்த பக்கமாக திரும்பிப் பார்த்து, "சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்ட மாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து அசைத்துக் கொண்டு, சத்தமிட்டுக் கொண்டு, ஓசன்னா... ராஜாவுக்கு என்று பாடிக் கொண்டு இங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறார்கள்" என்றான். அவன் " யார் இவர்கள்?'' என்று கேட்டான். 155. அவன் ''மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்து தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த் தவர்கள் இவர்கள்தான். இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் ஆட்டுக் குட்டியானவரை அவருடைய ஆலயத்தில் சேவிப்பார்கள், இவர்கள் அவரை விட்டு செல்ல மாட்டார்கள்'' என்றான். அது தான் மணவாட்டி, பாருங்கள் மனைவி, புறஜாதி மணவாட்டி. 156. நினைவில் கொள்ளுங்கள், மணவாட்டியானவள் புறஜாதி யாக இருக்கிறாள். அவர் "அவர் வந்து, புறஜாதிகளிலிருந்து தமது (எதற்காக?) நாமத்திற்காக ஒரு ஜனத்தை தெரிந்துகொள்ளுவார்," என்றார். 157. இப்பொழுது, உலகத்திலே அநேக வாலிபப் பெண்கள் உள்ளனர். ஆனால் நான் ஒரு பெண்னை எடுத்திருக்கிறேன், அது தான் மேடா பிராய், அவள் தான் இப்பொழுது திருமதி. வில்லியம் பிரன்ஹாம். அவள் ...... அவள் இன்னுமாக பிராய் அல்ல. அவள் இப்பொழுது பிரன்ஹாமாக இருக்கிறாள், பார்த்தீர்களா? 158. ஆகவே அவ்வாறே தான், நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு ஒரு மணவாட்டியாக, மணவாட்டியின் அங்கத்தினர்களாக ஆகிவிடுகின்றீர்கள். 33. வாடிகன் நகரத்தின் மேல் இருக்கின்ற லத்தீன் வார்த்தை கள் என்ன? அவைகள் அறுநூற்றறுபத்தாறு என்று எப்படி வருகின்றது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம், அவைகள் எதைக் கூற விழைகின்றன. 159. நல்லது, அது இன்னுமாக ... இந்த லத்தீன்-அந்த லத்தீன் வார்த்தைகள் வாடிகன் நகரத்தின் மேல் இல்லை; அது போப்பினுடைய சிங்காசனத்தின் மேல் இருக்கின்றது, அவர் உட்கார்ந்திருக்கின்ற அவருடைய சிங்காசனத்தின்மேல் அங்கே "VICARIVS FILII DEI." என்று எழுதப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், காலை, நான் எல்லாவற்றையும் ஒரு காகிதத்தில் எழுதி கொண்டு வருகிறேன். ரோம் எழுத்துக்களில் அதை நீங்கள் எழுத்து கூட்டலாம், VICARIVS FILI DEI, அந்த வார்த்தைக்கு ''தேவனுடைய குமாரனுக்கு பதிலாக; இவர் தேவனுடைய குமாரனுக்கு வாரிசு ஆவார்'' என்று அர்த்தம். 160. "பேதுரு முதலாவது போப்பாண்டவர் என்றும் அவன் இயேசு கிறிஸ்துவுக்கு வாரிசு'' என்றும் கத்தோலிக்க சபை விசுவாசிக்கின்றது. அது தவறான ஒன்றாகும்! சரி. பிறகு "அவனைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு போப்பாண்டவரும் ஒரு வாரிசு; இப்பொழுது இருக்கின்ற போப்பும் கூட, இப்பொழுது இருக்கிற வரும் இயேசு கிறிஸ்துவின் வாரிசு ஆவார்" என்று உரிமை கொண்டாடுகின்றது. அங்கே இவ்வாறு எழுதப்பட்டிருக் கின்றது, "இயேசு கிறிஸ்துவின் வாரிசு, 'VICARIVS FILI DEI' '' என்று அங்கே எழுதப்பட்டிருக்கின்றது. ரோம் எழுத்துக்களை எடுத்து எழுதிப்பாருங்கள் (X என்றால் பத்து, V என்றால் ஐந்து, இன்னும் அதைப் போன்று), நீங்கள் "VICARIVS FILI DEI" என்று கூட்டி ஒரு கோட்டை வரைந்தால், உங்களுக்கு அறுநூற்றறுபத்தாறு என்று வரும். அதை எழுதி கண்டுபிடியுங்கள். 161. இப்பொழுது, எங்கள் விசுவாச மார்க்கத்தின் உண்மைகள் என்னும் புத்தகம் என்னிடம் இருக்கின்றது. கத்தோலிக்க சபையில் அவ்வாறு அது அழைக்கப்படுகின்றது, என்னுடைய ஜனங்கள் ஐயர்லாந்து கத்தோலிக்கர் ஆவர். ஆகவே நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். பாருங்கள்? 162. அது முற்றிலுமாக உண்மையான ஒன்றாகும், அது சரி, அது அங்கே... வேதாகமம் "அவன் சபையில் அல்லது ஒரு- ஒரு இடத்தில், அல்லது ரோமாபுரியில் ஏழு மலைகளின் மேல் இருக்கின்ற ஒரு சபையில் உட்கார்ந்து கொண்டிருப்பான். ஆகவே அவனுடைய வல்லமை உலக முழுவதும் செல்லும். அவன் அந்திகிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான்" என்று கூறுகின்றது. 163. அதற்கு பிறந்த சிறு சபைகள் அந்த சபையிலிருந்து வெளியே வந்தன, "அவள் ஒரு வேசி என்றும், அவளை பின்பற்றினவர்கள் வேசிகள்" என்றும் வேதம் கூறுகின்றது. அது சரி. உங்களுக்கு புரிகின்றதா. ஏனெனில் அவர்கள் அதே காரியத்தை ஸ்தாபித்து, அவர்களுடைய பிரமாணங்களையும் உபதேசங்களையும் கொண்டிருந்தனர். சற்று அவளைப் போன்று மிக வல்லமை யுள்ளவளாக அல்ல, ஆனால் இன்னுமாக அவர்கள் சிறிய விதத்தில், வல்லமையைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே மிருகம் என்றால் "வல்லமை'' என்று அர்த்தம். உங்களுக்கு புரிகின்றதா. ஆகவே அவர்கள் கத்தோலிக்கர் தான், பெரிய வல்லமையை பெற் றுள்ளனர். மெத்தோடிஸ்டுகள், பிறகு பிரஸ்பிடேரியன்கள், பிறகு லூத்தரன்கள், பிறகு பாப்டிஸ்டுகள், பிறகு இன்னுமாக. இவர்களுடையது சிறிய ஸ்தாபிக்கப்பட்ட வல்லமைகள், ''என்னுடைய சபை! என்னுடைய சபை! என்னுடைய சபை!'' என்று கூறிக்கொள்கின்றனர். 164. ஆனால் உண்மையான விசுவாசியோ அதைக் குறித்து ஒன்றும் கூறமாட்டான். அது, "என்னுடைய கிறிஸ்து! என்னு டைய கிறிஸ்து! என்னுடைய கிறிஸ்து!'' என்றிருக்கும். அது தான் வித்தியாசம். எப்படி உங்களுக்குத் தெரியும்? அடையாளங் களுடனும் அற்புதங்களுடனும் பரிசுத்த ஆவியானவர் சாட்சி பகருகின்றார். 165. இதோ ஒரு சிறிய விதமான ஒரு சிறிய ஒழுங்குப் புறம்பான ஒன்று. இதை வாசிப்பதை நான் வெறுக்கிறேன். ஆனால் யாரோ இதை இங்கே வைத்திருக்கின்றனர்: 34. இந்த சபையானது ஏன் முன்னேறவில்லை என்பதற் கான காரணத்தை நீர் கேட்டீர். காரணம் என்ன, அது மூப்பர் களில் சிலர் அந்நிய பாஷைகள் மற்றும் சுகமாக்குதல் வரத்தை மறுதலிக்கின்றனர். அது உண்மை என்று நாங்கள் எல்லாரும் அறிவோம். 166. அவர் யாரென்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள், நான் இந்த கூட்டங்களில் இங்கே இருக்கையில், அது சீக்கிரமாக அகற்றப்படும். 35. ஒரு கிறிஸ்துவன் கால் கழுவுதலை கைகொள்ள வேண்டுமா, "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு பதிலாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் (நாமம்) ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா என்று தயவு கூர்ந்து விளக்குங்கள். தயவு செய்து. 167. சரி. இதே காரியத்தைக் குறித்து கேட்கப்பட்ட அவைகளில் மூன்று என்னிடம் இங்க இருந்தது. 168. கால் கழுவுதலைக் குறித்து, நல்லது, அதைக் குறித்து நான் துவங்குகிறேன். சரி, நீங்கள் ஒருக்கால் வித்தியாசப்பட்ட கருத்தை உடையவராக இருக்கலாம், அதனால் பரவாயில்லை. சற்று சிலவற்றை நான் வாசிப்பேனாக. அல்லது நீங்கள் அதை வாசிக்க விரும்பினால், பரிசுத்த யோவான், 13 வது அதிகாரத்தை சற்று எடுங்கள். இங்கே உங்களை நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். இயேசு கிறிஸ்து தாமே என்ன கூறியிருக்கிறார் என்பதை கவனியுங்கள், பிறகு நான் உங்களை ஏற்பாட்டிற்குள் (Testament) கொண்டு சென்று அது இன்னுமாக கை கொள்ளப்படுகின்றது என்று உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். 2வது வசனத்தி லிருந்து ஆரம்பிப்போம். ' அவர்கள் போஜனம் முடிவடைந்து கொண்டிருக்கையில் சீமோனின் குமாரனாகிய யூதாஸ் காரியோத்து அவரைக் காட்டிகொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டின பின்பு (ஆங்கில வேதத்தில் உள்ளபடி -தமிழ்யாக்கியோன்) தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்தாரென்பதையும் தாம் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறார் என்பதையும் தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து, (அவர் ஆவியிலிருந்து வெளியே வந்து, மாம்சத்திற்குள் சென்று ஆவிக்குள்ளாக மறுபடியும் திரும்ப வந்து விட்டார். பாருங்கள்?) ஆகவே போஜனத்தை விட்டெழுந்து வஸ்திரங்களை கழற்றி வைத்து ஒரு சிலையை எடுத்து அரையிலே கட்டிக் கொண்டு பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்த போது அவன் அவரை நோக்கி ஆண்டவரே நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்கு ..... நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (ஓ உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா! சரி) அதற்குச் சீமோன் பேதுரு ... என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும் கூட .... என்று கூறிகுன். ஆகவே இயேசு அவனை நோக்கி முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாயிருக்கும், மற்றபடி அவன் கத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மை காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்த படியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். அவர்களுடைய கால்களை அவர் கழுவின பின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு, திரும்ப உட்கார்ந்து அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு செய்ததை அறிந்திருக் கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவர் ரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்கு செய்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால் . . .செய்வீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். 169. இரண்டு தீமோத்தேயுவில் பவுல் சபைக்கு எழுதும் போது, "ஒரு விதவையானவள் பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவியிருந்தாலொழிய அவள் சபையில் விதவைகளின் கூட்டத்தில் கொண்டு வரப்படக்கூடாது.'' அது சரி. கால் கழுவுதல் வேதாகம நாட்கள் முழுவதுமாக அனுசரிக்கப்பட்டது. ஆகவே தேவனுடைய ஒத்தாசையினால் நான் என் சரியான மனதை வைத்திருப்பேனானால், தேவன் எனக்கு உதவி செய்வாரானால், நான் மரிக்கும் வரை அதைக் கைக்கொள்வேன். அது சரி, அது இயேசு கிறிஸ்துவினுடைய ஒரு முற்றிலுமான கட்டளையாகும். - இப்பொழுது, இங்கே ஒரு தாக்குமுனை கொண்ட கொட்டுகின்ற ஒரு கேள்வியாக இது இருக்கப் போகின்றது. (குறிப்பு: கேள்விகள் 36ம், 37ம்- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் சரியானதா அல்லது தவறானதா? என்ற தலைப்பில் கைப்பிரிதியாக அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப் படுகின்றது - WBGNS) 38. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள அந்நிய பாஷையில் பேசவேண்டும் என்று இந்த சபை போதிக்கின்றதா? 262. இல்லை, ஐயா. இல்லை, நாங்கள் அப்படி செய்வதில்லை. அந்நிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியின் வரமாகும், பாருங்கள், அது பரிசுத்த ஆவி அல்ல. அது ஒரு வரமாகும். இந்த மரம் ஒன்பது விதமான கனிகளைக் கொண்டிருக்கிறது. அது சரியா? 263. நீங்கள் ஒரு ஆப்பிள் மரத்தை பார்க்கையில், அது ஆப்பிள் பழங்களைக் கொண்டிருக்குமானால், அது ஆப்பிள் மரம் என்கிறீர்கள். ஒரு மரத்தை பார்க்கும் போது, அது பேரிக்காய்களைக் கொண்டிருக்குமானால், அது பேரிக்காய் மரம் என்று கூறுகிறீர்கள். அதன் மேல் காட்டத்தி மரப்பட்டை இருந்து, அதில் பேரிக்காய்கள் இருந்தாலும் சரி, அதனுடைய ஜீவன் என்ன? அதன் ஜீவன் பேரிக்காய் மர ஜீவன் தான். அது சரியா? 264. இப்பொழுது, இந்த தேவனுடைய மரமானது ஒன்பது ஆவிக்குரிய கனிகளையுடையதாக இருக்கிறது. அது சரியா? சரி? அங்கே வித்தியாசப்பட்ட... ''ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தை போதிக்கும்... வேறொருவனுக்கு அந்த ஆவியினா லேயே அறிவை உணர்த்தும் வசனமும் வேறொருவனுக்கு புரிந்து கொள்ளுதலும், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதலும் அளிக்கப்படுகின்றது,'' என்றார். ஒன்பது வித்தியாசமான ஆவிக்குரிய வரங்கள் இந்த தேவனுடைய மரத்தின் மீது வளர்கின்றது. அது சரியா? நல்லது, இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுவது மாத்திரம் ஒன்றே ஒன்றல்ல, இன்னும் மற்றவைகளும் கூட இருக்கின்றன. 265. இப்பொழுது நீங்கள் அந்நிய பாஷையில் பேசி இன்னுமாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இப்பொழுது அதை சற்று நினைவில் கொள்ளுங்கள். நான் சரியாக... சூன்யக்காரிகள் மந்திரவாதிகள் வந்து அந்நிய பாஷையில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன், அவர்கள் பரிசுத்த ஆவியை உடையவர்கள் அல்ல. உங்களுக்குத் தெரியும், அவர்கள் மேலே வந்து சத்தமிடுவதையும் குதிப்பதையும் நான் கண்டிருக்கிறேன், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் உள்ளனர். சமீபமாக நான் ஒரு கார்ன்-நடனத்தில் நின்று கொண்டிருந்தேன், வெளியே ... அங்கே டௌக்லாஸ், அரிசோனாவில் அங்கே ஒரு சிறிய துண்டு. அங்கே அவர்கள் நடத்தும் கார்ன்- நடனத்தை கண்டிருக்கிறேன், அந்த மந்திரவாதி வந்து பயங்கராமாகச் செய்து கொண்டிருந்தான், எல்லாக் காரியமும் செய்து கொண்டிருந்து அங்கே தன் மீது தூசியை போட்டுக்கொண்டான். அப்படியென்றால் அவன் இரட்சிக்கப் பட்டிருக்கிறான் என்றல்ல. அந்த மனிதன் ஒரு - ஒரு மந்திரவாதி ஆவான். 266. நான் இந்தியாவில் இந்தியாவிற்கு சென்றிருந்த போது ... ஆப்பிரிக்காவில் மந்திரவாதிகள் வந்து தங்கள் மந்திரங்களினாலே எனக்கு சவால் விட்டதையும், ஒரு மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தை குடித்ததையும் நான் கண்டிருக்கிறேன். அது சரி. நீ அதை நேரடியாக சந்திக்கையில் எதைக் குறித்து நீ பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருப்பது நல்லது. ஆனால் சர்வல்லமையுள்ள தேவன் அந்த மனிதன் அசையவும் கூடாத விதத்தில் அவனை கட்டிப்போட்டதையும் நான் கண்டிருக்கிறேன். ஆகவே அப்பொழுது, அதைப் போன்ற அவனுடைய கண்ணாடிக் கண்கள், அவர்கள் அவனை தூக்கிச் சென்றனர். ஆம், ஐயா. 267. சகோதரனே, தேவன் உண்மையாயிருக்கிறார்! அது உண்மை . ஆனால் தேவன் ஆவியாயிருக்கிறார், அந்நிய பாஷையில் பேசுவதிலும் அல்லது, இது, அது அல்லது மற்றதில் மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல. நான் கூறுவது என்னவென்றால் எந்த ஒரு மனிதனும் ... இங்கே சபையில் இருக்கின்ற பிரச்சனை அது தான். பாருங்கள், நீங்கள் ... பெந்தெகொஸ்தேயினர் அந்த ஒரு காரியத்தின் மீது கட்டுப்பாடற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டவர் களாயினர். அவர்கள் ஜனங்களிடம் சென்று .... அவர்கள் மீது கைகளை வைத்து, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக செய்வதற்கு பதிலாக, அவர்களை பீடத்தண்டை கொண்டு சென்று முதுகின் மீது அவர்களை அடிக்க ஆரம்பித்து ''அதைப் பேசு! அதைப் பேசு! அதைப் பேசு!'' என்று சத்தமிடுகின்றனர். மேலும் மேலும் குழப்பத்தை பெற்றுக் கொள்ளும் வரை ஒரு சொல்லைக் கூறுகின்றனர், அது அந்நிய பாஷை அல்ல. 268. ஒரு உண்மையான பரிசுத்த ஆவி நபரானவன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பானானால், அவன் தேவனுக்குரிய ஜீவியத்தைச் செய்வான். அந்த மனிதர்களில் சிலர் மோசமான ஜீவியங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள், அவர்கள் அப்படியாக இல்லை என்று அவர்களுடைய கனிகள் நிரூபிக்கிறது. இயேசு, "அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறிந்து கொள்வீர்கள்" என்றார். ஆகவே ஆவியின் கனியானது அந்நிய பாஷையில் பேசுவது அல்ல, அது ஆவியினுடைய வரம் ஆகும். 269. இந்த அந்நிய பாஷைகளையும் மக்கள் பேசுவதையும் அவர்கள் கேட்ட போது. பேதுரு, ''மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங் கள், அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள்" என்று ஒருபோதும் கூறவில்லை. அவன், "பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள்'' என்றான். அது அவர்கள் பெறுகின்ற பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்றாகும். ஆமென். சரி. நாம் சீக்கரமாக கடந்து செல்ல வேண்டும். 39. எனக்கு இரண்டு பையன்கள் உள்ளனர் (ஒருவனுக்கு இரண்டு வயது; மற்றொருவனுக்கு ஐந்து வயது), அவர்களுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டுமா? 270. நல்லது, இப்பொழுது சகோதரியே அல்லது சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும் சரி, அது உங்களைப் பொறுத்தது. எனக்கு ஒரு சிறிய பெண் பிள்ளை இருக்கின்றாள் .... என்னுடைய சிறிய பையன், பில்லி பால், பதினாறு வயதாயிருக்கையில், இங்கே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். என்னுடைய சிறு பெண் பிள்ளைக்கு எட்டு வயதாயிருந்தது. அவள் என்னிடம் வந்து என் மடியில் அமர்ந்து, "அப்பா, நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் விசுவாசம் வைக்க விரும்புகிறேன், ஆகவே நான் - நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்,'' என்று கூறினாள். நான் அந்த சிறு பெண் பிள்ளைக்கு எட்டு வயதில் ஞானஸ்நானம் கொடுத்தேன். சிறு பிள்ளைகள் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விரும்பினால், அவைகளுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள். அவைகளுக்கு, ஏன் அவைகள் ...... கர்த்தர் எதையெல்லாம் கூறினாரோ அதை தொடர்ந்து செய்யுங்கள், அது உங்களைப் பொறுத்தது. 40. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்கள் மாத்திரமே சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலில் இருப்பார் களா, அல்லது எல்லா விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்தப் படுமா? 271. நாம் .... அதை சரியாக விளக்கிக் காண்பிக்க நமக்கு நேரம் இல்லை. ஆனால், சகோதரனே பரிசுத்த ஆவி மணவாட்டி மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படுதலில் இருப்பாள். பாருங்கள்? வேதாகமம் ...?... மற்றவர்கள் கைவிடப்பட்டிருக்க மாட்டார்கள். 272. கவனியுங்கள்! பூமியை நியாயந்தீர்க்கப்போவது யார்? பரிசுத்தவான்கள். தானியேல், ''நான் பார்த்துக் கொண்டிருக் கையில் நீண்ட ஆயுசுள்ளவர் வந்தார்- அவர் ஆயிரம் பதினாயிரம் பதினாயிரம் பரிசுத்தவான்களுடன் வந்தார்,'' என்றான். அது சரியா? சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்று விட்டிருந்தது. பிறகு அவர்கள் கீழே வந்தனர், நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டது. 273. ஆகவே புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. அது சரியா? வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அது ஜீவ புஸ்தகம் பரிசுத்த ஆவியைப் பெற்றிராத பரிசுத்தமாக்கப்பட்ட விசுவாசியைக் குறித்தது ஆகும். 274. மணவாளனை சந்திக்க பத்து கன்னிகைகள் புறப்பட்டனர் என்று இயேசு போதிக்கவில்லையா? அவர்களில் ஐந்து பேர் .... அல்லது அவர்கள் எல்லாரும் கன்னிகைகளாக சுத்தமான வர்களாக, பரிசுத்த முள்ளவர்களாக இருந்தனர். ஆகவே அவர்கள், இவர்கள், உறங்கச் சென்று பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. இவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு தங்கள் விளக்குகளில் எண்ணெயை உடையவர்களாயிருந்தனர். மண வாளன் வந்த போது, சத்தம் வந்தது, சத்தமிட்டது, அவர்கள், "ஓ நாங்கள் உள்ளே செல்லட்டும். உங்கள் எண்ணையில் எங்களுக்கு கொஞ்சங்கொடுங்கள்'' என்றனர். 275. அவர், ''நீங்கள் வாங்குகிறவர்களிடத்திற்கு போங்கள், ஜெபியுங்கள், இப்பொழுது அதை பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றார். ஆனால் அவர்களால் முடியவில்லை. ஆகவே அவர்கள் சென்ற போது, அந்த - அந்த கன்னிகைகள் கலியாண விருந்துக்குள் பிரவேசித்தனர், அவர்களோ அழுகையும், கூக்குரலும் பற்கடிப்பும் இருந்த புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டனர். கடந்த இரவு, கடந்த இரவுக்கு முந்தின இரவு, வெளிப்படுத்தல் 12 ஆம் அதிகாரத்தில், வலுசர்ப்பம், தேவனில் விசுவாசம் கொண்டிருந்து இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்ட மீதியாயிருந்த அந்த ஸ்திரீயின் சந்ததியின் மீது யுத்தம் பண்ண தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது என்று போதித்தோம் அல்லவா? 276. ஸ்திரீகளாகிய உங்களுக்கு, நீங்கள் உங்கள் மாதிரியின் படியே ஒரு நல்ல அருமையான துணியை எடுத்து நீங்கள் அதில் இவ்விதமாக, உங்கள் மாதிரியின்படியே வெட்டியெடுக்க வேண்டிய பகுதியை அதிலிருந்து வெட்டியெடுகிறீர்கள். அது உங்களைப் பொருத்ததாகும்? நீங்கள் வெட்டியெடுத்த பகுதியி லிருந்து உங்கள் ஆடையை உருவாக்குகிறீர்கள். மீதமான பாகமும், வெட்டப்பட்ட துண்டைப் போலவே நல்ல துணியாய் இருந்த போதிலும், நீங்கள் உங்கள் தெரிந்து கொள்ளுதலின்படி அதை வெட்டியெடுத்தீர்கள். அது சரியா? நல்லது, விலையேற பெற்றதாயிருந்தாலும், அது உங்களுடைய தெரிந்து கொள்ளுதலாய் உள்ள து. 277. ஆகவே தெரிந்து கொள்ளப்படுதலினால் நாம் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்கிறோம் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரே! வேதாகமம் "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை'' என்று கூறுகின்றது. அது சரியல்லவா? ஆகவே ... நீங்கள் இழந்துபோகப் படமாட்டீர்கள், ஆனால் பரிசுத்த ஆவியால் நிறையப்பட்ட மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வாள். மற்றவர்கள் நியாத்தீர்ப்பினூடாக கடந்து வருவார்கள்; அவர்களோ அப்படியில்லை. 41. ஒருவன் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டியிருப்பதால், ஏன் இயேசு மத்தேயு 28ல் ''பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ் நானம் கொடுங்கள்" என்று கூறவேண்டும்? அதைத்தான் நான் உங்களுக்கு விவரித்துக் காண்பித்தேன். 278. சரி, நீங்கள் களைத்துப்போயிருக்கிறீர்களா? நீங்கள் களைத்து போயுள்ளீர்கள் என்று எனக்கு தெரியும். 42. ஆனால் "பிதா குமாரன் பரிசுத்த ஆவி" ஞானஸ் நானத்திற்கு தேவன் கனத்தை கொண்டிருக்கிறாரா? இந்த நாமத்தில், இந்த நாமங்களில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியை பெற்ற மக்கள் இருக்கிறார்களா? பிதாவை மகிமைப்படுத்த இயேசு வந்தாரா? இந்த ஞானஸ்நானம் அங்கீகரிக்கப்படுமா? 279. ஆம், பிதாவை மகிமைபடுத்த இயேசு வந்தார். பரிசுத்த யோவான் 14 ஆம் அதிகாரத்தை பாருங்கள். நான் சற்று ..... என்னிடம் ... சற்று காத்திருப்பீர்களானால் இன்னும் மூன்று தான் இருக்கிறது, நாம் அதைப் பார்ப்போம் என்று நான் விசுவாசிக்கி றேன். கவனியுங்கள், பிறகு நாம் புதியவைகளை பார்ப்போம், ஏனெனில் உண்மையாக இன்றிரவு சிலவற்றை நான் நிறுத்து வேன், என்று நான் நம்புகிறேன். கவனியுங்கள், இது சபையாகும், நாம் சென்று கொண்டேயிருக்கிறோம். 280. கவனியுங்கள், பிதாவை வெளிப்படுத்த இயேசு வந்தார். கவனியுங்கள், துவக்கத்தில் தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டாக்கினார். அது சரியா? நல்லது, தேவன் என்றால் என்ன? ஒரு ஆவி. பரிசுத்த யோவான் 4வது அதிகாரத்தில், இயேசு கிணற்றண்டை இருந்த ஸ்திரீயினிடத்தில் பேசிக் கொண்டிருந் தார், அவர், ''தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்" என்று கூறினார். அது சரியல்லவா? தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலிலே உண்டாக்கியிருப்பாரானால், அப்படியானால் எப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் உண்டாக்கியிருந்தார். ஒரு ஆவியான மனிதன். 281. ஆதியாகமம் 2ல், நிலத்தை பண்படுத்த எந்த ஒரு மனிதனும் இல்லை, ஆகவே தேவன் மனிதனை பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கினார். அவருடைய சாயலில் அல்ல, ஆனால் மிருக ஜீவனின் சாயலில் உண்டாக்கினார். பிறகு இங்கே இந்த மிருக மனிதனில் மனிதனின் ஆவியை வைத்தார், அவன் ஜீவாத்து மாவானான். இப்பொழுது அது தான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆகும். மிருகம் மோட்டார் வாகனங்களை செய்யாது, வாழ்க்கைக்கு உதவியாயிருக்கின்ற காரியங்களை இன்னும் அதைப் போன்ற மற்றவைகளை அது செய்யாது. அது ஒரு மிருகம் ஆகும், ஊமையான முரட்டுத்தனமான ஒன்று. அதற்கு ஆத்துமா கிடையாது. அதினால் எழுதவும் படிக்கவும் முடியாது. அதனால் பேச முடியாது, உரையாடமுடியாது. அது ஊமையான முரட்டுத்தனமான ஒன்று. ஆனால் முரட்டுத்தனமானதைப் போல மனிதனும் மாம்சத்தில் இருக்கிறான், ஆனால் அவனுக்குள் தேவனுடைய ஆத்து மாவைக் கொண்டவனாக இருக்கிறான். அது அவனை அழியாதவனாக்குகிறது. அவனால் கண்டு பிடிக்க முடியும் ...... அவனால் செய்ய முடிகின்றதை கவனியுங்கள்! ஆகவே ஏறக் குறைய தேவனுக்கு சமமான நிலையில் இருக்கின்றான், ஏனெனில் அவனுடைய விழுந்து போன நிலையிலும் அவன் தேவனுடைய குமாரனாக இருக்கிறான். அவன் அற்புதமானவன்! அவனைப் பாருங்கள்! பாருங்கள்? அது தான். 282. பிறகு மனிதன் மாம்சத்தில் விழுந்த போது .... தேவன் தமக்கு மேற்கொண்டு மற்றொரு தனிப்பட்ட நபரை கீழே அனுப்பிருந்தாரானால், அவர் அநீதி உள்ளவராவார். ஆகவே அதை நீதியாகச் செய்வதற்கு தேவனுக்கிருந்த ஒரே வழி மனிதனுடைய இடத்தை தாமாகவே எடுத்துக் கொள்வதாகும். 283. சகோதரன் நெவிலை இங்கே இந்த பெண்ணிற்காக நான் மரிக்கச் செய்தால் எப்படியிருக்கும்? நான் உங்கள் மீது ஆளுகையு டையவனாக இருந்து, இந்த பெண்ணை இங்கே இந்த பெண்ணிற் காக நான் மரிக்கச் செய்தால் எப்படியிருக்கும்? நான் நீதியாக இருந்து அதைச் செய்ய முடியாது. நான் மரணத்தை அறிவித்து, நீ வாழ வேண்டுமென்று நான் விரும்பினால், உன்னை நியாயப்படுத்த நான் உன்னுடைய இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். 284. ஆகவே பிறகு தேவன், ஆவியின் ரூபத்தில் இருந்தவர் ... இல்லை, ரூபமின்றி இருந்தார். வேதாகமம், ''தேவன் ரூபமில் லாதவர்'' என்று கூறுகிறது. அது சரி. பிறகு தேவன் ஒரு உருவம் எடுக்க வேண்டியதாயிருந்தது, ஆகவே அவர் ஒரு கன்னிகையை நிழலிட்டு அவளுக்குள் ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார், இனச்சேர்க்கை இல்லாமல் அல்லது அதனுடன் எதுவுமே இல்லாத விதத்தில், ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார். அது தேவனுடைய குமாரனாக வளர்ந்தது. பிறகு தேவன் கீழே வந்து தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து பூமியில் அவரை தேவனாகச் செய்தார். 285. பரிசுத்த யோவான் சுவிசேஷத்தில், தோமா, "ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்'' என்றான். 286. அவர், 'இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?' என்றார். அவர், ''பிதாவை எங்களுக்குக் காண்பியும்' என்று நீ ஏன் சொல்லுகிறாய்?'' என்றார். ஏன், அவர் ''நீ என்னைக் காண்கையில் நீ பிதாவைக் காண்கிறாய். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா எனக்குள் வாசம் செய்கிறார்'' என்றார். 287. சில காலத்துக்கு முன்னர் நான் அங்கே பேசிக் கொண்டிருந்தேன், இங்கே ஒரு பெண்மணி, குதிக்தெழுந்து, "ஓ சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் என்ன கூற வருகின்றீர்கள் என்பது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள், நிச்சயமாக அவர்கள் ஒன்றாயிருக் கிறார்கள். நீங்களும் உங்கள் மனைவியும் கூடத்தான் ஒன்றாயிருக்கிறீர்கள். அதே விதமாகத் தான் அவர்களும் ஒன்றாயிருக்கிறார்கள்'' என்றாள். 288. நான், "என்னை மன்னியுங்கள்.'' என்றேன். நான் "அவர்கள் அல்ல'' என்றேன். நான் "'உங்களால் என்னைக் காணமுடிகிறதா?'' என்றேன். ''நிச்சயமாக" என்றாள். அப்படியா, ''என் மனைவியை உங்களால் காணமுடிகிறதா?'' அவள், "இல்லை'' என்றாள். 289. நான், ''அதோ! நானும் என் மனைவியும் இருக்கிறதைக் காட்டிலும் வித்தியாசமான விதமாக அவர்கள் இருக்கின்றனர்.'' என்றேன். பாருங்கள்? நான், ''அது சரி'' என்றேன். 290. இயேசு, ''பிதாவை காணாமல் உங்களால் என்னைக் காணமுடியாது'' என்றார். நிச்சயமாக முடியாது! அதுமூவகைச் சட்டத்தில் இரண்டாவது சட்டம், அதே சட்டம் (rule) அது தேவனாகும். இயேசு கிறிஸ்து ஒன்று தேவனாக இருக்கவேண்டும் அல்லது உலகமானது எப்பொழுதும் கொண்டிராத ஒரு பெரிய வஞ்சகராக இருக்கவேண்டும். 291. கவனியுங்கள்! சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெண் ஒரு கிறிஸ்துவ விஞ்ஞான பெண், என்னிடம் வந்து, ''நான் உங்களுக்கு நிரூபிப்பேன்,'' என்றாள். இப்பொழுது, கிறிஸ்துவ விஞ்ஞானம் நண்பனே, ஒரு நிமிடத்திற்கு சற்று பயபக்தியாயிரு, பாருங்கள். அவர்கள், "அவர் ஒரு மனிதனேயன்றி வேறொன்றும் அல்ல என்று நான் உங்களுக்கு நிரூபிப்பேன்" என்றனர். ''நீர் மிகவும் அதிகமாக இயேசுவைக் குறித்து ஜம்பப்பேச்சு பேசுகிறீர்" என்றார்கள். 292. ''இரவும் பகலுமாக நான் ஜம்பப்பேச்சு பேசினாலும் அவருக்கு சேரவேண்டியதை என்னால் அவருக்கு கொடுக்க இயலாது" என்றேன். நான் கூறினேன், "கூறப்போனால் ...'' 293. "அவர் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், சமாதானப்பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா" என்று ஏசாயா அவருக்கு பெயரிட்டான். அவரே எல்லாமாய் இருக்கிறார். "அவர் ஆல்பா, ஓமேகா, முதலும் முடிவும், தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம், பிதா, குமாரன் பரிசுத்தாவி' எல்லாம் அவரே. "தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கின்றது''. என்று வேதம் கூறுகின்றது. தேவனுடைய பரிபூரணம் யாவும் அவருக்குள் இருந்தது. 294. அவள், ''நான் உங்களிடம் கூறுகிறேன், அவர் லாசருவை எழுப்பத்தக்கதாக, லாசருவிற்காக ஜெபிக்க அவர் சென்ற போது, அவர் ஒரு மனிதனாகத்தான் இருந்தார் என்று நான் உங்களுக்கு நிரூபிப்பேன்" என்றாள். 295. "நீ அதைச் செய் பார்க்கலாம்'' என்றேன். 296. "வேதாகமம் 'அவர் கண்ணீர் விட்டார்' என்று கூறுகிறதே. அது அவர் மனிதன் தான் என்று நிரூபிக்கிறது, அவரால் கண்ணீர் விட முடிந்தது" என்றாள். 297. நான், ''நிச்சயமாக, கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது குமாரன் ஆகும்" என்றேன். 298. அவர் ஒரு தேவன்- மனிதன் ஆவார். நானும், நீங்களும் போல அவர் ஒரு மூன்றொன்றான நபர் ஆவார்; நாம் ஆத்துமா, சரீரம் மற்றும் ஆவியாக இருக்கிறோம். அவர் தேவனுடைய தெய்வ நிலையில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக இருந்தார், அது தான் அவர். அவர் தாமே தெய்வ நிலையில் இருந்தார்! அவருடைய சொந்த பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கே அவரால் வேறொன்றை எவ்விதம் செய்ய முடியும்? அது வேறொன்றா யிருந்திருக்குமானால்... அவருடைய சொந்த பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டனர்; அவர்களுக்காக அவர் கதறினதில் வியப்பொன்றுமில்லை. ஒரு மனிதன் எவ்விதம்... அவருடைய சொந்த பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டபோது, அவர் அதை எவ்விதமாக உணர்ந்தார்? அவர் அவர்களை ஆக்கினைக்குட்படுத்தி நரகத்திற்கு அனுப்பவேண்டும் அல்லது தமது ஜீவனையே அளிக்க வேண்டும்; அவர் தம் பிள்ளைகளுக்காக ஜீவனைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குள் தெய்வத்துவம் வசித்தது! அதுதான் அவர். 299. அந்த ஸ்திரீ, "சங்கை. பிரன்ஹாம் அவர்களே, இங்கே கவனியுங்கள். நான் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன். அவர் கண்ணீர் விட்டபோது, அவர் மனிதன் என்பதை நிரூபித்தார்," என்றாள். 300. நான், ''ஸ்திரீயே, அவர் ஜெபி... மனிதனாயிருந்தார் அல்லது அவர் கண்ணீர்விட்டபோது மனிதன்தான் என்பது சரியே. அவர் கண்ணீர்விட்டபோது மனிதன்தான், அழிவு தன் எஜமானை அறியும் ஆத்துமா தன் சிருஷ்டிகரை அறியும். ஆனால் அவர் தம் மெலிந்த சரீரத்தில் நிமிர்ந்து நின்று அழுகி, தோல் புழுக்கள் அவனுடைய சரீரத்தில் ஊர்ந்திருக்க மரித்து நான்கு நாட்களான, மரித்து நான்கு நாட்களான மனிதனை, லாசருவே வெளியே வா, என்று அவர் கூறினபோது அவர் எழுந்து தன் கால்களில் நின்றானே, மறுபடியும் ஜீவித்தானே, அது மனிதனைக் காட்டிலும் மேலானது,'' என்றேன். 301. அவர், அன்றிரவு பசியுள்ளவராய் மலையிலிருந்து இறங்கி சாப்பிட ஏதாவது கிடைக்குமோ என்று அந்த மரத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் ஒரு மனிதனாக இருந்தார். அந்த அத்திமரத்தில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று அவர் பார்த்துக் கொண்டிருந்த போது அவர் ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் அவர் ஐந்து பிஸ்கட்டுகளையும் இரண்டு மீன் துண்டு களையும் எடுத்து ஐயாயிரம் பேர்களை போஷித்தபோது, அது மனிதனை விட மேலான ஒன்றாகும்! அது தேவன் அங்கே இருத்தல் ஆகும்! அந்த சிருஷ்டிகரால் சமைக்கப்பட்ட மீனைப்பிட முடிந்தது, அது இன்னுமாக சமைக்கப்பட்ட மீனாகவே இருந்தது, வேக வைக்கப்பட்ட அப்பத்தை எடுத்து பிட்டுக் கொடுத்தார்; அவர் எவ்விதமான அணுக்களைக் கட்டவிழ்த்திருப்பார்? அல்லேலூயா! அவர் தேவன், அணுக்கள் மற்ற எல்லா காரியங்களின் சிருஷ்டிகர்! அது மனிதனைக் காட்டிலும் அதிகமான ஒன்றாக இருந்தது! 302. அவர் நாள் முழுவதும் பிரசங்கங்கள் செய்து, வியாதியஸ் தரை சொஸ்தப்படுத்தி, மிகவும் களைப்புற்றவராக, அங்கே அந்த இரவு அந்த படகில் இருந்த போது கடலின் பத்தாயிரம் பிசாசுகள் அவரை மூழ்கடித்துவிட வேண்டும் என்று சபதம் செய்த போது அவர் ஒரு மனிதனாக இருந்தார். அங்கே இருந்த அந்த சிறிய பழைய படகு, ஒரு பாட்டில் மூடியைப் போன்று அங்குமிங்கம் தண்ணீரில் தத்தளித்தது, இங்குமங்கும் பெரிய அலைகள் அடித்துக் கொண்டிருந்தது, அவரோ படுத்துக்கொண்டிருந்தார், அலைகள் கூட அவரை எழுப்பமுடியாத விதத்தில் மிகவுமாக களைப்புற்றிருந்தார். பிசாசுகள் உறுமிக்கொண்டிருந்தன, "அவர் தூங்கிக்கொண்டிருக் கையில் இப்பொழுது அவரை பிடித்துவிடுவோம்'' என்றன. ஆனால் அவர் விழித்துக் கொண்டபோது, அங்கே விழித்துக் கொண்டார், அவர் ஒரு மனிதனாக இருந்தார், அவர் மிகவுமாக களைப்புற்றிருந்தார். ஆனால் அவர் படகுப்பாயின் நுனிக்கயிற்றில் தம்முடைய பாதத்தை வைத்து, கடலைப் பார்த்து, ''அமைதலாயிரு!'' என்றார், காற்றுகளும் அலைகளும் அவருக்கு கீழ்ப்படிந்தன. அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்றாகும்! அது வானங்களை உண்டாக்கின சிருஷ்டிகராகிய தேவன் ஆகும். 303. "இவர் எப்படிப்பட்ட மனிதனோ காற்றும் கடலலைகளும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே" என்று அந்த அப்போஸ்தலன் கூறியதில் ஆச்சரியமில்லை. 304. அது மனிதனைக் காட்டிலும் அதிகமான ஒன்று. அது தேவன் ஆகும். பாவத்தை எடுத்துக் போடத்தக்கதாக, ஒரு பலியாக சிலுவையில் அவர் ஆணியால் அறையப்பட்டிருந்த போது ஒரு மனிதனாக அவர் இருந்தார். தம்முடைய கையில் ஆணிகளால் அடித்திருக்கப்பட்டிருந்த ஒரு மனிதனாக அவர் இருந்தார். தம்முடைய தலையின் மேல் முள்ளுகளையுடைய ஒரு மனிதனாக அவர் இருந்தார். எள்ளி நகையாடின போர்ச்சேவகர்களின் எச்சிலை தம் மேல் கொண்டிருந்த ஒரு மனிதனாக அவர் இருந்தார். நொறுக்கப்பட்ட, சாட்டையடிகள் கொண்ட, காயப்பட்ட ஒரு மனிதனாக அவர் இருந்தார். அவர் ஒரு மனிதனாக இருந்தார்! அவர், ''என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்று கதறிய போது ஒரு மனிதனாக அவர் இருந்தார். உதவிக்காக கதறிக்கொண்டிருந்த போது ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் ஈஸ்டர் காலையன்று கல்லறையில் மரணத்தின் முத்திரைகள் உடைத்த போது, அது மனிதனைக் காட்டிலும் மேலான ஒன்று! தாம் தேவன் என்று அவர் நிரூபித்தார். ஜீவிக்கும்போது அவர் என்னை நேசித்தார்; மரித்தபோது என்னை இரட்சித்தார்; அடக்கம்பண்ணப்பட்டபோது அவர் என் பாவங்களை தூரமாகக் கொண்டு சென்றார்; உயிர்த்தெழுந்த போது அவர் இலவசமாய் என்னை என்றைக்குமாய் நீதிமானாக்கினார்; ஒரு நாளில் அவர் வருவார், ஓ மகிமையான நாள்! 305. எட்டி ப்ருட் இவ்விதமாகச் சத்தமிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை. இயேசுவின் வல்லமையை எல்லோரும் வாழ்த்தட்டும் தூதர்கள் தாழவிழுந்து பணியட்டும். அந்த ராஜரீகக் கிரீடத்தை கொண்டு வந்து அவரே எல்லாவற்றிற்கும் தேவன் என்று முடிசூட்டுவோம். 306. கர்த்தராகிய இயேசு அவர் தான் அந்த மகத்தான நபர். அவர் யேகோவா, மாமிசத்தில் திரைமறைக்கப்பட்டிருந்த தேவன். வேதாகமம் ''வார்த்தையினாலும் கிரியையினாலும் நீங்கள் எதைச் செய்தாலும், அதை அவருடைய நாமத்தில் செய்யுங்கள்,'' என்று கூறுகின்றது. வேதாகமம்,'' "பரலோகத்திலுள்ள முழுக்குடும் பத்திற்கும் 'இயேசு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியிலுள்ள முழு குடும்பத்திற்கும் 'இயேசு' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது'', என்று கூறுகின்றது. அவருடைய நாமத்தில் நாம் ஜெபிப்போம், அவருடைய நாமத்தில் ஜீவிப்போம், அவருடைய நாமத்தில் போதிப்போம், அவருடைய நாமத்தில் மரிப்போம், அவருடைய நாமத்தில் அடக்கம் பண்ணக்கடவோம், அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவோம், அவருடைய நாமத்தில் உயிர்த்தெழுவோம், அவருடைய நாமத்தில் பரலோகம் செல்வோம். அது தான் அவருடைய நாமம், அவருடைய மணவாட்டிக்கு "செல்வி இயேசு'' என்று பேரிடப்பட்டுள்ளது. அவருடைய நாமத்திற்காக புறஜாதிகளிலிருந்து ஒரு கூட்ட மக்களை அது வெளியே எடுக்கும். 307. நான் ஒரு ஒருத்துவக்காரன் அல்ல. இல்லை ஐயா. திரித்துவ ஜனமே அதை உன்னிடத்திலிருந்து எடுத்துப்போடு. நான் ஒரு ஒருத்துவக்காரன் இல்லை. இல்லை ஐயா. ஒரு நாள் ஒருத்துவத்தைச் சேர்ந்தவகுே அல்லது ஒரு திரித்துவக்காரனோ அல்ல. வேதாகமம் என்ன கூறுகிறதோ அதைத் தான் நான் விசுவாசிக்கிறேன். அது சரியானது, ஆமென். வியூ! நான் ஒன்றின் பேரில் அதிகமாக பேசுகி றேன். அது என்ன? அதை சரியாக விளக்கினேனா? அல்லது, அது என்னவென்று நாம் பார்ப்போமா? ஓ, அப்படியா, அது சரியானது, அந்த ... எப்படி பிதா கிறிஸ்துவுக்கள் இருந்தார் என்று. அவர் ஒரு மனிதனாக இருந்தார், அவர் தேவன் - மனிதன் ஆவார். 43. பெந்தெகொஸ்தே சபை பிதா குமாரன் பரிசுத்த ஆவி யின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்காமல் இருக்கின்றதா? அவர்களில் சிலர் அவ்விதம் செய்கின்றனர். 44. ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் மரித்து போவானானால் அவன் இழக்கப்பட்டுப்போவானா? 308. இல்லை, ஐயா. அவன் ஒரு விசுவாசியாக இருந்தால், அவன் உயிர்த்தெழுதலில் வருவான், இரண்டாம் உயிர்த்தெழுதலில். அவன் அபிஷேகம் பெற்றிருந்தால், முதலாம் உயிர்த்தெழுதலில் அவன் செல்வான். இப்பொழுது ஏறக்குறைய என் வார்த்தையை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அது திருப்திகரமாக இல்லையெனில், அப்படியானால் நீங்கள்- நீங்கள் என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு வேதவசனத்தை தருகி றேன். ஏனெனில், இன்னும் இந்த இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கி றேன், பிறகு நாம் முடிப்போம். 45. சகோதரன் பில், சூதாட்டத்தைக் குறித்து வேதாகமம் ஏதாவது கூறிகின்றதா? 309. ஆம், அது கூறுகின்றது, ஆனால் இப்பொழுது அதை என்னால் கூற முடியாது. போர்ச் சேவகர்கள் அவருடைய துணிகளுக்கும், அதைப் போன்ற சிலவற்றிற்கும் சூதாடினர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் என்னால் கூறமுடியாது. 46. ஒன்று கொரிந்தியர் 15:29யை நீங்கள் விளக்குவீர்களா? 310. சகோதரன் நெவில் உங்களால் கூடுமானால் அதை எனக்காக எடுங்கள், ஒன்று கொரிந்தியர் 15:29. நாம் அதை எடுப்போம். 311. இப்பொழுது ஒருக்கால் நாளை என்னால் உங்களுக்கு அதை எடுக்க முடியும். அந்த .... அந்த எழுத்துக்கள் எப்படி "VICARIVS FILII DEI" என்று எழுத்து கூட்டின. உங்களுக்கு விருப்பமானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். 47. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு எசேக்கியல் 38 மற்றும் 39ன் தீர்க்கதரிசனம் நிறைவேறுமா? 312. அப்படியல்ல என்று எண்ணுகிறேன். நாம் அடுத்ததாக எதிர்நோக்கியிருப்பது சபையின் எடுத்துக் கொள்ளப்படுதல் என்று எண்ணுகிறேன். ஆகவே அதற்கு பிறகு, "கோகும் மாகோகும் கீழே வந்த போது" அது ரஷ்ய சேனைகள் வருகின்ற அந்த ... 313. கவனியுங்கள், இங்கே பொதுப் பணி கம்பெனியில் மேலதிகாரியாக திரு. போஹன்னான் இருந்தார், ஒரு அருமையான கிறிஸ்துவ மனிதன். அவர் ஒரு நாள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார், அவர், ''பில்லி, நான் வாசிக்க முயற்சி செய்தேன், வெளிப்படுத்தின விசேஷத்தை விவரிக்க என்னுடைய மேய்ப்பரை கேட்க முயற்சித்தேன், நாங்கள் முயற்சித்து முழுவதுமாக குழப்பமடைந்து விட்டோம், யோவான் அந்த இரவு ஏதையாவது தின்றுவிட்டு ஒரு சொப்பனத்தைக் கண்டிருக்க வேண்டும்'' என்று கூறினார். நான் ''திரு.போஹன்னான், உமக்கு வெட்கமில்லையா'' என்றேன். நான் கூறினேன் ... அவர், ''நல்லது, அதை யாருமே புரிந்து கொள்ள முடியாது'' என்றார். 314. நான், 'இல்லை, எந்த இயற்கையான மனிதனாலும் முடியாது, ஆனால் பரிசுத்த ஆவியானவரால் அதை வெளிப்படுத்த முடியும்'' என்றேன். 315. அவர், "நல்லது, இங்கே பாருங்கள் பில்லி,'' என்றார். அவர், ''மணவாட்டி சீனாய் மலையின் மேல் நின்று கொண்டிருந்தாள். இங்கே வாயிலிருந்து ஊற்றப்பட்ட தண்ணீர் இருந்தது, வலுசர்ப்பம் ஊற்றிக்கொண்டிருந்தது, மணவாட்டியின் மீது யுத்தத்தைக் கொண்டு வந்தது. அதே நேரத்தில் மணவாட்டி பரலோகத்தில் இருந்தாள். அதை ஒன்று சேர்த்து விவரியுங்கள் பார்க்கலாம்!'' என்றார். 316. நான், 'திரு. போஹன்னான் உங்களுக்கு தெரிந்தது என்னவென்றால், மூன்று வித்தியாசமான காரியங்களை நீங்கள் குழப்பிக் கொண்டவர்களாய், அதை, மணவாட்டி என்று அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சீனாய் மலையின் மேல் ஆட்டுக் குட்டியானவருடன் நின்று கொண்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை 'மணவாட்டி' என்று அழைக்கின்றீர்கள். அது அவர்கள் அல்ல. வாயிலிருந்து தண்ணீரை ஊற்றி, ஸ்திரீயின் வித்தின் மீதியானவர்களுடன் யுத்தம்பண்ணச் சென்றது, என்று நீங்கள் அவர்களைக் குறிப்பிடுகிறீர்கள், அது மணவாட்டி அல்ல; அது விடப்பட்டவர்கள் ஆவார். மணவாட்டி பரலோகத்தில் இருந்தாள்; அங்கே இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இருந்தனர்; இங்கே உபத்திரவத்தினூடாக பெயர் கிறிஸ்தவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். ஆகவே அது சரி'. 317. சகோதரனே இப்பொழுது நீங்கள் அதை எடுத்திருந்தால் அதை வாசியுங்கள். (சகோதரன் நெவில் ஒன்று கொரிந்தியர் 15:29 வாசிக்கின்றார் - ஆசி) மேலும் மரித்ததோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர் களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்? 318. இப்பொழுது, இப்பொழுது, சகோதரரே, மரித்தவர் களுக்காக ஞானஸ்நானம் கொடுப்பது என்று விசுவாசிக்கின்ற ஒரு - ஒரு மக்கள் இருக்கின்றனர், அது மார்மோன் மக்கள் ஆகும். நான் அவர்கள் ஆலயத்திற்கு அநேக முறை சென்றிருக்கிறேன். அவர்கள் மிகவும் அருமையான ஜனங்கள் ஆவர். நீ ஒருவேளை ஒரு மார்மோனாக இருக்கலாம். நான் உன் உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் என் அன்பான நண்பனே, நீ உன் தகப்பனாருக்காக ஞானஸ்நானம் பண்ணப்பட முடியாது. அச்செயலை அவர்கள் செய்தாக வேண்டும். "மரமானது எப்பக்கம் சாய்கின்றதோ, அது அப்பக்கமாகவே விழுந்துவிடும்.'' பவுல் இங்கே "மரித்தோரைக்'' குறித்து பேசுகிறான். ''மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தோர் உயிர்த்தெழாவிடில் நீங்கள் ஏன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும்?'' நான் என்ன கருதுகிறேன் என்று உங்களால் காண முடிகின்றதா? அப்பபோழுது நீங்கள்... ''மரித்தோர் உயிர்த்தெழாவிடில் புசிப்போம், குடிப்போம், நாளைக்கு சாவோம் என்று சொல்லலாமே?'' ஆனால் அவனோ தொடர்ந்து மரித்தோர் உயிர்த்தெழுதலுக்காக தேவனை மகிமைப் படுத்துகிறான். நாம் இயேசு கிறிஸ்துவுக்கு அவருடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நாம் "மரித்தவருக்காக'' ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். சரி. இதன் பின் மேலும் இன்னொன்றுள்ளது என்று நான் நம்புகிறேன். சகோதரன் பில், பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு கூறுங்கள். அது ஜெபத்தினாலும், அற்பணிக்கப்பட்ட ஜீவியத்தாலும், சுகமளித்தலைப் போல அதைப் பெற்றுக்கொள்ளும் போதா? இங்கே நீர் எனக்கு ஜெபித்த போது சுகமளித்தலுக்காக விசுவாசம் கொண்டிருப் பது எப்படி என்று எனக்குத் தெரியும்? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக நீங்கள் கைகளை வைத்து ஜெபிப்ப துண்டா? நான், "பிதா கமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றள்ளேன். நீர் சமீபமாக பேசினது போல நான் மறுபடியுமாக இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமா என்று தயவு செய்து எனக்கு கூறுங்கள். இப்பொழுது, என் அருமை கிறிஸ்தவ நண்பனே, என்ன செய்யவேண்டும் என்று நான் உங்களுக்கு கூறிக் கொண்டிருக்கவில்லை. நான் வேத வசனத்தைத் தான் எடுத்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன். நாம் பேசிக் கொண்டிருக்கையில் எவ்விதமாக, எப்படி பரிசுத்த ஆவியானவரால் சரியாக இப்பொழுது வரமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். பரிசுத்த ஆவி தேவனுடைய ஒரு வரமாகும். பாருங்கள்? அது தேவனுடைய வரமாகும். நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே அது வரும். நான் உங்களிடம் கூறுவேன், அந்த... ஜனங்கள் சரியாக போதிக்கப்பட்டிருப்பார்களானால், ... இங்கே வயோதிபர்களாகிய உங்களில் கூடாரத்தில் இருந்து கொண்டிருக்கின்ற முற்காலத்தை சேர்ந்த உங்களிடம் ஒன்றை நான் கேட்கட்டும். நான் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது கவனியுங்கள். ஊழியர்களே, இதை நீங்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீரண்டை அந்த மக்கள் வரும் போது அதற்கு முன்னர் ஜீவியம் சுத்தமாகத்தக்கதாக அந்த மக்களுக்கு நான் போதித்திருந்தேன், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்ள கடமைபட்டுள்ளார் என்றும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றவுடன் அதை ஏற்றுக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் சரியாக அங்கு இருக்கின்றார் என்றும் அவர்கள் விசுவாசிக்கும்படிச் செய்தேன். அவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்த போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அது சரி. நீங்கள் மாத்திரம்... 319. மேய்ப்பர்களே, உங்கள் ஆடுகளுக்கு போதியுங்கள், இங்கே வேதாகமத்திற்குள் அவர்களை கொண்டு செல்லுங்கள். (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை தட்டிக்கொடுக்கின்றார்ஆசி) ஏதோ ஒரு சபையின் பழைய பாடப்புஸ்தகத்திலிருந்து அப்பாலே செல்லுங்கள், இங்கே தேவன் போதித்திருக்கின்ற வேதாகமத்திற்கு வாருங்கள், பிறகு இந்த விதமான சிக்கல்கள் உங்களுக்கு வராது. 320. அபிஷேகிக்கப்பட்ட நபரால் கைகள் வைக்கப்படுதல், ஆம், கைகளை வைப்பதின் பேரில் தான் நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும். 48. சகோதரன் பில், பிரசங்கி வார்த்தையை கொடுத்துக்கொண்டிருக்கும் போது யாராவது எழுந்து அந்நிய பாஷையில் செய்திகளைக் கூறினால் அது ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட ஒன்றா? இந்த நபர் இங்கே மூன்று - கேள்விகளை வைத்திருக்கிறார் 49. மற்றொரு கேள்வியானது: மேலும் பீட அழைப்பு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவ்விதமாகச் செய்வது ஒழுங்கிற்கு புறம்பான ஒன்றா? 50. மூன்று, மூன்றாவது: மேலும் அது ...... சபையில் யாராவது ஒருவர் எழுந்து நின்று, ஆராதனையின் போது ஏதோ ஒன்றைக் கூறினதற்காகவோ அல்லது செய்ததற்காகவோ ஒரு ஊழியக்காரனை, புனிதமான மேஜையின் பின்பாக இருப்பவரை கண்டிக்கலாமா? இந்த எல்லா காரியங்களும் கூடாரத்தில் அநேக முறைகள் செய்யப்பட்டுள்ளன. 321. இப்பொழுது, இதை நான் சீக்கிரமாக கூறட்டும், இப்பொழுது இது சபைக்கான ஒன்றாக இருக்கிறது. நான்.. . இப்பொழுது, எங்கள் வாசல்களில் இருக்கும் வெளிமக்களே, நான் சபைக்கு இப்பொழுது சிறிது அடி கொடுக்கப்போகிறேன், ஆகவே நீங்கள். உங்களால் கூடுமனால் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். 322. என் பிள்ளைகளே! கவனியுங்கள், அந்த வரங்கள் மகத்தானவைகள் அல்லவா. நான் உங்களை எவ்வாறு மெச்சுகி றேன் என்றும், நான் உங்களை தேவ அன்புடன் நேசிப்பதை யாருமே அறிந்திருக்க முடியாது. ஆனால் அந்த வரங்களை சரியான இடத்தில் நீங்கள் உபயோகிக்காவிட்டால் அவை உங்களுக்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகவும் இருக்கும். 323. இன்றைக்கு மக்களைப் பாருங்கள், களத்தில் இருக்கும் அருமையான மனிதர், வியாதியஸ்தருக்காக ஜெபித்து அதற்கு பணத்தை வசூல் செய்கின்றனர். அது தவறாகும். ஒரு மனிதன் சுகமாக்குதலுக்கும் வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கான விசுவாசம் கொண்டிருப்பானானால், அவன் பணம் வாங்காமல் மக்களுக்கு ஜெபம் செய்யும் ஒரு நற்பண்பு கொண்டுள்ள ஒருவனாக இருக்கவேண்டும். தேவனுக்கு நன்றி! சகோதரனே, நான் அதைக் கூற விரும்புகிறேன், எனக்குத்தானே அல்ல, ஆனால் தேவனுடைய மகிமைக்காக, எனக்காக மக்களிட மிருந்து பணம் ஒரே காணிக்கையில் பத்து லட்சம், ஐந்து லட்சம் டாலர்கள் வந்தபோதும் மற்றும் அதைப் போன்ற ஒன்றையும் ஒரு முறை கூட நான் வாங்கினது கிடையாது. அது உங்களுக்கு தெரியும்; அது சரியாக இங்கே இருந்தது, அந்த காகிதம். பாருங்கள்? அது சரி. அது... நீ அதைச் செய்யம் போது, தேவனிடம் உனக்கு இருக்கின்ற உன்னுடைய விசுவாசத்தை நீ இழக்கப்போகின்றாய். 324. இப்பொழுது அந்நிய பாஷையில் பேசுகின்ற, அந்நிய பாஷையின் வரங்களையுடைய மக்களாகிய நீங்கள், உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. இந்த சபையில் நீங்கள் தேவைப் படுகிறீர்கள். நீங்கள் இங்கிருக்க நான் விரும்புகிறேன். ஆனால், இப்பொழுது, இந்த - அந்த காரியம் ஒழுங்கில் இருக்கின்றது, பிரசங்கி பிரசங்கம் செய்யும் போது அதை ஒரு போதும் செய்யவேண்டாம். அவ்விதம் செய்வாயானால், நீ ஒழுங்கிற்கு வெளியே இருக்கின்றாய். பாருங்கள்? நீ அதைச் செய்யகூடாது. ஏனெனில் வேதாகமம், 'தீர்க்கதரிசியின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறதே,'' என்று கூறுகிறது. ஆகவே ஒரு மனிதன் பிரசங்கிக்கும் போது, அவன் மேடையைக் கொண்டிருக்கிறான், அவன் கூட்டத்தைக் கொண்டிருக்கிறான், பரிசுத்த ஆவியானவர் அவன் மூலமாக பேசப் போகின்றார். அவன் முடித்தவுடன் அப்பொழுது அது செய்திக்கான நேரமாக இருக்கிறது, நீங்கள் பாருங்கள். ஆகவே ஒழுங்கிலிருந்து வெளியே செல்லாதீர்கள்; அப்படி செய்வீர்களானால், அப்பொழுது நீங்கள் தடங்கலைக் கொண்டு வருகிறீர்கள். பிறகு நீங்கள் - சென்று கொண்டிருக்கிற செய்தியோடு பரிசுத்த ஆவியை நீங்கள் துக்கப்படுத்துவீர்கள்.. 325. இங்கே சில காலத்திற்கு முன்னர், நான் இங்கே வாஷிங்டனில் எங்கோயொரு இடத்தில் ஒரு கூட்டத்தில் நான் இருந்தேன், அநேகமாயிரம் மக்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆகவே என்னுடைய நிர்வாகி, ஒரு உண்மையான வேதாகம வியாக்கியானி, அவர் அங்கே நின்று கொண்டு, அபிஷேகிக்கப்பட்டவராக, தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார், பரிசுத்த ஆவியானவர் பேசிக் கொண்டிருந்தார். ஒரு பெண் எழுந்து அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தாள், அவர் சற்று நேரம் பொறுத்திருந்து பிறகு பேச்சைத் தொடர்ந்தார். பரிசுத்த ஆவியானவர் ஆர ... துக்கமடைந்தார், அதை ஜனங்கள் மத்தியில் உங்களால் காணமுடியும்;. அவர் மறுபடியுமாக பேச ஆரம்பித்தார், அவள் எழுந்து கொண்டாள்.' அவர் ''கர்த்தருடைய நாமத்தில், சகோதரியே உட்காருங்கள், நீங்கள் ஒழுங்கிற்கு வெளியே இருக்கிறீர்கள்'' என்றார். ஊழியக்காரர்கள் அவளை அங்கே கொண்டு சென்று அவளுக்கு தெரியப்படுத்தினர். 326, இப்பொழுது, அது என்ன, அந்த வரங்கள் உலகத்தி லிருக்கின்ற அவைகள், இப்பொழுது சபையில் இருக்கின்றன. வரங்கள் சபையில் இருக்கின்றன, ஆனால் அந்த ஏழை சிறிய பிள்ளைகள் அந்த வரங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். பிறகு அதை எப்படி கட்டுக்கள் வைப்பது என்கின்ற போதகம் இல்லாமலிருக் கின்றனர். நீங்கள் அதை கட்டுக்குள் வைக்காமற்போனால் நீங்கள் நன்மையைக் காட்டிலும் அதிக சேதத்தைத் தான் விளைவிப்பீர்கள், பாருங்கள்? 327. வெளியே சென்று வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்து யாரோ ஒருவரை சுகமடையச் செய்து ''இப்பொழுது, அதற்காக நீ எனக்கு ஆயிரம் டாலர்கள் கொடுத்தாக வேண்டும்'' என்று கூறும் ஒரு மனிதனைப் போன்று. இப்பொழுது அவன் நன்மையைக் காட்டிலும் இன்னும் அதிகமான கேட்டைத்தான் செய்திருக்கிறான். அந்த மனிதன் கிறிஸ்துவின் காரியத்தின் பேரில் நிந்தையைக் கொண்டு வந்ததைக் பார்க்கிலும் சென்று மரித்துப்போயிருந்தால் நலமாயிருந்திருக்கும். 328. இப்பொழுது, நீங்கள்... மேய்ப்பரோ அல்லது சுவிசேஷகரோ, அல்லது யாராயிருந்தாலும் அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தால் அமைதியாயிருங்கள். அவ்விதமாகச் செய்யும் படி பவுல் கூறியிருக்கிறான், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, ஆகவே அப்பொழுது அவன் ''நீங்கள் ஒவ்வொருவராய்ப் பேசுங்கள்,'' என்றான். அது முற்றிலும் உண்மையானது. ஆகவே அவன், "நீங்கள் எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன், அது நல்லது,'' என்றான். 329. ஆனால் நீங்கள் அந்நிய பாஷையின் வரத்தைக் கொண்டிருந் தாலொழிய உங்களால் அந்நிய பாஷையில் பேசமுடியாது. ஆகவே அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் இப்பொழுது இந்த சபையில் அநேக வரங்கள் இருக்கினறன. அதில் அநேக வரங்கள் இங்கே மெத்தோடிஸ்ட் சபையில் இருக்கின்றது, இங்கே பாப்டிஸ்ட் சபையில் அதின் அநேகம் இருக்கின்றது, அது பிரசங்கிக்கப்பட்டால்தான் அந்த வரமானது கிரியை செய்ய ஆரம்பிக்கும். 330. அது எவ்விதம்? நீ நிலத்தில் விதையைப் போட்டு அதைப் பண்படுத்தாவிட்டால், அதற்கு என்ன ஆகும்? பாருங்கள், அது அங்கே உலர்ந்து புழுதியில் கிடந்து அழுகிப்போகும்; அது எந்த நன்மையும் கொடுக்காது. இந்த சபையில் இது வரைக்கும் இந்த வரங்கள் இருந்துவருகிறது, ஆனால் பெந்தெகொஸ்தே மழை, இப்பொழுது தான் அதற்கு நீர் பாய்த்து கனியை கொண்டு வரத்தக்கதாக தண்ணீர் விழ ஆரம்பித்திருக்கிறது, இப்பொழுது, அதை சரியான இடத்தில் பயன்படுத்துங்கள். 331. இப்பொழுது, அது கூறுகிறது, நல்லது, அந்த நபர் கேட்ட கேள்வி அடுத்த கேள்வி அங்கேயிருந்தது என்று நான் நம்புகிறேன். அந்த ... அவர்கள் பீட அழைப்பு கொடுக்கும் போது? 332. இல்லை, அப்படியென்று நான் நினைக்கவில்லை. நீங்கள் கவனித்திருப்பீர்களானால் கொரிந்தியரை எடுத்து வாசித்துப் பாருங்கள், உங்களில் சிலர் இங்கேயிருக்கிறீர்கள், அந்நிய பாஷையில் பேசும் வரத்தை உடையவர்களாக நீங்கள் இருப்பீர் களானால், அப்படியானால் நீங்கள் கவனியுங்கள். வேதாகமத்தில், அவர்கள் ..... ஆராதனை முடிவுற்ற பிறகு, சபையார் மீது தேவனுடைய ஆசீர்வாதம் வரும், அப்பொழுது அவர்கள் பேச ஆரம்பிப்பார்கள், அப்பொழுது அவர்கள் தேவனை மகிமைப் படுத்த ஆரம்பிப்பார்கள். ஆகவே ஒவ்வொரு சமயமும், யாராவது ஒருவருக்கு ஒரு நேரடியான செய்தி இருக்கும். அல்லது... இப்பொழுது நீங்கள் அதை கவனிக்கவேண்டும். பாருங்கள்? அது மாம்சமான ஏதோ ஒன்றல்ல. அது யாராவது ஒருவர் எதோ ஒன்றை செய்யும்படியாக, அல்லது சபைக்கு பக்திவிருத்தி உண்டாக்கத் தக்கதாக எதோ ஒன்றுக்காக யாராவது ஒருவருக்கு ஒரு செய்தியாக இருக்கும். அது சபையை மகிமைப்படுத்தத்தக்கதாக எதோ ஒன்றாக இருக்கும். 333. அங்கே தான் பெந்தெகொஸ்தே ஜனங்கள் தங்கள் பெயரின் பேரில் நிந்தையை வரவழைத்துக் கொண்டனர். பெந்தெ கொஸ்தெ என்ற பெயரை நீங்கள் உச்சரித்தாலே ஜனங்கள் தள்ளி நடந்து "அபத்தம்'' என்று கூறுவார்கன், ஏனென்றால் அதிக கூக்குரல்களை அவர்கள் கொண்டிருக்கின்றனர், அந்த ஜனங்கள் உத்தமமாக உள்ளனர், ஆனால் போதிக்கப்படாமல் உள்ளனர். 334. பவுல், "அங்கே இருக்கின்ற பெந்தெகொஸ்தே சபைக்கு நான் வரும் போது, அதை ஒழுங்கில் அமைப்பேன்,'' என்றான். ஆவியானவர் கட்டளையிட்டபடியே அது ஒழுங்கில் தான் இருக்க வேண்டும், ஒவ்வொரு காரியமும் ஒழுங்கின் படி தான் செய்யப்படவேண்டும், ஆகவே அவன், ''இப்பொழுது, உள்ளே வந்து நீங்கள் எல்லாருமே அந்நிய பாஷையில் பேச ஆரம்பிக்கும் போது, கல்லாதவன் உள்ளே வருவானானால், அவன் 'உங்கள் எல்லாருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதா?' என்று கூறி வெளியே சென்று விடுவான்,'' என்றான். 335. அவ்விதமாகத்தான் பெந்தெகொஸ்தே சபையும் செய் கின்றது. அவன், "இப்பொழுது, உங்களில் ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து ஏதோ ஒன்றின் இரகசியங்களை வெளிப்படுத்து வானானால், உங்களில் ஒருவன் தீர்க்கதரிசியாக இருப்பான்,'' என்று கூறினான். வேறு விதமாகக் கூறினால், அவன் ''அப்படி யானால் ஜனங்கள் கீழே விழுந்து 'தேவன் உங்களோடு இருக்கின்றார்' என்ற கூறுவார்கள் அல்லவா?'' என்று கூறினான். 336. நல்லது, நான் தீர்க்கதரிசி வரத்தை மறுதலிக்கவேண்டு மென்றிருந்தால் அந்நிய பாஷையில் பேசும் வரத்தை எவ்வாறு நான் மறுதலிக்க முடியும், இந்த மற்ற வரங்களையும் நான் மறுதலிக்க வேண்டுமே? இப்பொழுது அநேக சபைகள், பெரிய சபைகள், நசரீன், பில்கிரிம் ஹோலினஸ், இன்னும் மற்றவைகள், ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசினால் அவன் ஒரு பிசாசு என்று அவர்கள் நினைக்கின்றனர். அது பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணமாகும், அதற்கு மன்னிப்பே கிடையாது. அதைத்தான் யூதர்களும் செய்தனர், பரிசுத்த ஆவியையுடைய மக்களை பரியாசம் செய்தனர், அதற்காக அவர்கள் ஆக்கினைக்குட் படுத்தப்பட்டு இழக்கப்பட்டுப் போயினர். சரியாக! ''நீங்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு மன்னிக்கப் படுவதில்லை'' என்று இயேசு கூறவில்லையா. ஆகவே ஜாக்கிரதையாக இருங்கள்; உங்களுக்கு புரியவில்லையெனில், அப்படியே தரித்திருங்கள். 337. பொறுப்புகளுக்குள் அழைக்கப்பட்டிருப்பவர்கள், போத கர்கள் ... பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள மக்களாகிய நீங்கள், இப்பொழுது கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா ... இங்கே நான் நின்று கொண்டு போதிக்க முயற்சித்துக் கொண்டிருக் கிறேன், இங்கே என் பக்கத்தில் ஒரு மனிதன் குதிக்க ஆரம்பித்து சரியாக இதே நேரத்தில் போதிக்க ஆரம்பித்தால், மற்றொரு மனிதன் இங்கே வெளியே நின்று கொண்டு ஒரு யூபிலி பாடலை பாடத்துவங்கினால்? எப்படிப்பட்ட ஒரு குழப்பமாக இருக்கும்! 338. நல்லது, அந்த விதமாகத்தான் அந்நிய பாஷையில் பேசுதலும் கூட. அது ஆவியானவர் அளிக்கின்ற விதமாகவே, ஒழுங்கில் அது வரட்டும், நீங்கள் அந்நிய பாஷையில் பேசலாம். 339. இப்பொழுது நீங்கள், ''நல்லது சகோதரன் பிரன்ஹாம், என்னால் இயலாது,'' என்று கூறலாம். 340. ஓ, ஆமாம், உன்னால் முடியும். உன்னால் முடியும் என்று பவுல் கூறியுள்ளான். அவன், ''உங்களில் ஒருவன், உங்களில் அந்நியபாஷையில் பேசுகிறவன் இருந்து, அர்த்தஞ் சொல்லு கிறவனில்லாவிட்டால், அவன் அமைதியாக இருக்கக்கடவன்" என்று கூறினான். அது எவ்வளவாக பேச வேண்டுமென்று விரும் பினாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள். சகோதரனே, அது ஒரு வரம். அந்த காரியங்களுக்குள் நாம் செல்ல இந்த நாட்கள் சிலவற்றில் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த தேவன் அனுமதிக்க நான்- நான் ஜெபிக்கிறேன், நீங்கள் பாருங்கள். அது ஒரு வரம் என்றும் அந்த வரம் எல்லா நேரத்திலும் கிரியை செய்ய விரும்புகிறது என்றும் உங்களால் காணமுடியும். பாருங்கள்? ஆனால் அந்த வரத்தை எங்கே, எப்படி உபயோகிக்க வேண்டு மென்று அறிந்து கொள்ள இங்கே பரிசுத்த ஆவியின் ஞானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே அந்த... 341. நீங்கள், "நல்லது, தேவனுக்கு மகிமை, பரிசுத்த ஆவி வரும்போது உங்கள் போதகன் தேவையில்லை என்று வேதாகமம் கூறுகிறது. அவர் தாமே போதகர் ஆவார்'' என்று கூறலாம். சகோதரனே, நீங்கள் எப்படி சாதாரணமாக வேத.... அப்படி யானால் ஏன் பரிசுத்த ஆவியானவர் சபையில் போதகர்களை வைத்தார்? 342. "எனக்கு போதிக்க யாரையும் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, பரிசுத்த ஆவியானவர் எனக்கு போதிக்கிறார்,'' எனலாம். அது ஒரு போதகனின் மூலமாக செய்கிறது. அவர் சபையில் போதகர்களை வைத்தார். 343. அவன், "எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அப்போஸ்த வர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களையுடையவர்களா?'', என்றான். பரிசுத்த ஆவியானவர் இவை எல்லாவற்றையும் சபையில் வைத்துள்ளார், அவர் அவை எல்லாவற்றையும் நடப்பிக்கிறார், அவைகள் ஒவ்வொன்றும் ஒழுங்கின்படியே நடப்பிக்கப்படுகின்றது. 344. இப்பொழுது அது என்னுடைய பாதத்தை போன்று; அவைகளில் ஒன்று "நான் இந்த வழியாக போகிறேன்,'' என்று கூறுகிறது, மற்றொன்று, ''நான் இந்த வழியாக திரும்பிச் செல்கிறேன்'' என்று கூறுகிறது. இப்பொழுது, நீ என்ன செய்யப் போகின்றாய்? கை கூறிற்று, ''நான் மேலே செல்லப் போகிறேன், '' என்று. மற்றொன்று சுற்றி இந்த வழியாக செல்கிறது. இந்த சரீரம் எந்த விதமான உருவை அடையப்போகின்றது? பாருங்கள்? 345. ஆனால், இப்பொழுது, சிந்தையானது இங்கே "பாதமே, நீங்கள் இருவரும் முன்னே செல்லுங்கள். கையே, நீ அவர்களுடன் செல். தலையே, நீ நேராக நில். புயங்களே, நீங்கள் அதே விதமாகச் செய்யுங்கள்'' என்று கூறுகின்றது. ஒவ்வொன்றும் இசைவாக நடக்கின்றது. இப்பொழுது, நான் அங்கே சென்றடையும்போது, நான் என்னுடைய புயங்களை உபயோகப்படுத்திவில்லை. இப்பொழுது, பாதம் அதனுடைய கடமையைச் செய்தது, மேய்ப்பர் பிரசங்கத்தை செய்கின்றார்; இப்பொழுது, புயங்களே, நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். பாருங்கள்? நான் என்ன கூற விழைகிறேன் என் ' பாருங்கள்? 346. நல்லது, புயங்கள் இந்த விதமாக நீட்டிக்கொண்டிருந்தால், ''ஓ, அது எங்கே? அது எங்கே?' பாதம் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறது?செல்லவில்லை, நீ இன்னுமாக அங்கே இல்லை. பார், புயமே அமைதியாயிரு; சற்று நேரம் கழித்து நீ உபயோகப் படுத்தப்பட வேண்டிய வேளையானது இருக்கும்; நீ அங்கே செல்லும் வரை பொறுத்திரு. நான் என்ன கூற விழைகிறேன் என்று காணமுடிகின்றதா? அது வரமாகும், அது செயலில் இருக்கின்ற ஆவியானவருடைய வரம் ஆகும். 347. நான் கர்த்தரை நேசிக்கிறேன். நீங்களும் தானே? ஆமென். கவனியுங்கள், உங்களுக்கு என்னால் கூற முடிகின்ற ஒரு காரியத்தை நான் அறிவேன். பத்து மணிக்குப் பிறகு இருபது நிமிடங்கள் ஆகின்றன. நிச்சயமாக உங்களுக்கு பொறுமை இருக்கிறது. இப்பொழுது, நண்பர்களே, இப்பொழுது இந்த விதமாக இங்கே பாருங்கள். நான்.....இது எனக்குத் தெரிந்தவரையில் இருக்கிறதானதாகும். அதைப் போன்ற ஒரு பெரிய குவியலான கேள்விகளை நான் முடிக்க வேண்டியதாக யிருக்கின்றது. என்னால்....நீங்கள் அதனுடன் ஒத்துப் போகவில்லை யெனில், என்னுடன் சர்ச்சைக்கு வராதீர்கள். நீங்கள் என் சகோதரனாக இருங்கள், பாருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன், அது என்னுடைய இருதயத்தில் உள்ளதால் இந்த காரியங்களை மாத்திரமே நான் கூறுகிறேன். அதைத் தான் நான் விசுவாசிக் கிறேன், மேலும் அந்த விதமாகத்தான் நான் அதை விவரிக்கிறேன், வேதத்தில் உள்ளபடியே அந்த விதமாகத் தான் நான் அதைக் கொண்டு வருகிறேன். 348. இப்பொழுது, நீங்கள், ''சகோதரன் பிரன்ஹாம், நான் அந்த விதமாக விசுவாசிப்பதில்லை'' என்று கூறுவீர்களானால், அது முற்றிலும் சரியானதாக இருக்கும், பாருங்கள். நாங்கள் எந்த வித வித்தியாசத்தையும் நினைக்கமாட்டோம், நாம் சரியாக சகோதர சகோதரிகளாக முன்னே செல்வோம். 349. ஆகவே - ஆகவே நீங்கள் ''நல்லது, நான் - நான் மெத்தோடிஸ்ட் சபை அல்லது பாப்டிஸ்ட் சபையை சேர்ந்திருந்தாலும், எப்படியாயினும் நான் இரட்சிக்கப் படுவேன்" என்று கூறுவீர்களானால், சரி, சகோதரனே, அது முற்றிலுமாக சரி. நான் இன்னுமாக உங்களை ''என் சகோதரனே'' என்கிறேன். ஏனென்றால் நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்கள். பாருங்கள்? அது சரியே. ஆதலால் நாம் அதே விதமாக சகோதரராக நண்பர்களாக இருக்கப்போகிறோம். 350. ஆனால் இந்த சபை நிற்க வேண்டிய அந்த போதகத்திற்காக, நான் இங்கே சில நாட்களாக, அவைகளை இந்த சபை முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். பாருங்கள்? அதற்குத்தான் சபை யானது நின்று கொண்டிருக்கிறது! ஆகவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானத்தையும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அல்லது ஆவியின் வரங்கள் வெளிப்படுதலையும் விசுவாசிக் காத ஒரு மூப்பர் இங்கே இருப்பாரென்றால், அந்த மூப்பர், சரியாக நான் இங்கே நிற்கின்ற வேளையில், அவர் அதை சரிப்படுத் தாதிருக்கும் பட்சத்தில் சபையில் இருக்க அருகதையற்றவராக இருப்பார். அது முற்றிலும் சரியே. ஆகவே குழுவினர் அதை கவனித்துக் கொள்ள கடமைப் பட்டவர்களாகவுள்ளனர். சரியாக! இந்த சபை மூப்பர்களால் கட்டுப்படுத்தப் படவில்லை; இந்த சபை வேதாகமம் மற்றும் பரிசுத்த ஆவியானவரால் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆம், ஐயா. இப்பொழுது, அந்த காரியங்கள், அது தான் இந்த சபையின் போதகம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 351. எங்களிடம் எந்த ஒரு அங்கத்தினர் பாகம் என்பது கிடையவே கிடையாது. இங்கே அங்கத்தினர் என்று யாருமே கிடையாதே, ஆனால் வருகின்ற ஒவ்வொருவரும் ஒரு அங்கத்தினர் ஆவர், ஏனெனில் நாங்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் ஒரே சரீரத்தின் அங்கத்தினர்கள் என்று விசுவாசிக்கிறோம். 352. ஆகவே என் அருமை கிறிஸ்தவ சகோதரனே அல்லது சகோதரியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற நாங்கள் உங்களை கட்டாயப்படுத்துகிறோம். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஏற்கெனவே ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றிருப் பீர்களானால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நீங்கள், ''சகோதரன் பிரன்ஹாம், அதைக் குறித்து நான் என்ன செய்ய வேண்டும்?' எனலாம். அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பவுல் கூறின விதமாகத்தான் நானும் கூற வேண்டியவனாகயிருக்கிறேன்! 353. இப்பொழுது, இங்கே பாருங்கள், அப்போஸ்தலர். இதை நாம் வாசிப்போம், கலாத்தியர் 1:9. குறித்துக்கொள்பவர்களே, இதை குறித்துக்கொள்ளுங்கள். பவுல், இதைக் கூறின இந்த அதே மனிதன், இந்த காரியத்தை அவன் போதித்தான். இப்பொழுது அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்ளா? அது சரியா? அவர்கள் மறுபடியமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினான். ஆகவே பவுல், ''வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது ...'' என்று கூறினான். கலாத்தியர் 1:8, "இதற்கு மேலும், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் கூட பிரசங்கித்தால் அவன் சபிக்கப் பட்டவனாயிருகக்கடவன்.'' அவன் ஒரு ஆர்ச் பிஷப்பாயிருந் தாலும் சரி, அவன் ஒரு போப்பாக இருந்தாலும் சரி, அவன் ஒரு ஊழியக்காரனாக இருந்தாலும் சரி, அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாலும் சரி, அவன் ஒரு கிறிஸ்தவ குருவாக இருந்தாலும் சரி, அவன் வானத்திலிருந்து வருகிற தூதனாயிருந்தாலும் சரி, அல்லது யாராயிருந்தாலும் சரி, அவன், ''இதற்கு மேலும் வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் கூட பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்!'' என்றான். அது சரியல்லவா? ஆகவே அவன் மறுபடியுமாக அதை திரும்பவும் கூறினான். ''முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன், இதைக் காட்டிலும் வேறு எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்! " அது சரியல்லவா! 354. ஆகவே கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. அதை வார்த்தையிலிருந்து நான் வாசித்தேன், பிறகு உங்கள் தீர்மானத்தை நீங்கள் செய்யுங்கள். 355. இப்பொழுது எத்தனை பேர் அந்த அருமையான பழைய பாடலை நேசிக்கிறீர்கள். என் விசுவாசம் மேல் நோக்கி உம்மை காண்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே, இப்பொழுது நான் ஜெபிக்கையில் கேட்டருளும், என் பாவங்கள் யாவும் அகற்றும், இந்நாளிலிருந்து நான் உமக்கே முழு சொந்தம்! 356. இந்த சபையிலுள்ள உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். மரித்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு பிரசங்கித்துக்கொண்டிருக்கும் மரித்துக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதனாக நான் பிரசங்கிக்கும் செய்திகளில் கடைசியானதாக இது ஒருக்கால் இருக்கலாம் என்று உணர்கின்றவனாக; மரித்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு மரித்து கொண்டிருக்கிற ஒரு மனிதனாக, என்னுடைய கடைசியானதாக இருக்கும் விதத்தில் நான் செய்யும் ஒவ்வொரு பிரசங்கமும் இருக்க முயற்சிக்கிறேன். இந்த சமூகத்தின், தேசத்தின் என் சக குடிமக்களும், என் சகோதரருமாகிய உங்களை நான் இப்பொழுது கேட்கிறேன், இந்த ஆராதனைகளுக்குப் பிறகு தேவனுடன் ஒரு நெருங்கின நடை உங்களுக்கு தேவையாயிருக்கிறது என்று உண்மையாக நீங்கள் உணர்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நான் ஒரு ... உங்களுடைய சகோதரனாக, உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், என்னுடைய உத்தமமான ஜெபம் என்னவென்றால், நீங்கள், இந்த தேவனோடான நெருங்கின நடையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. 357. ஆகவே, நியாயத்தீர்ப்பின் நாளிலே, நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் இந்த இரவுகள் தாமே, அங்கே ஒரு மகத்தான பதிவான ஒலிநாடா அந்த நாளிலே போடப்படும், என்னுடைய சத்தம் வெளி வரும், நான் அங்கே நின்று கணக்கொப்புவிக்க வேண்டியவனாக இருக்கிறேன், ஏனெனில் அந்த நாளில் என் வார்த்தைகள் ஒன்று என்னை ஆசீர்வதிக்கும் அல்லது என்னை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கும். அது கடந்த இருபது மற்றும் கூடுதல் வருடங்களாக என்னுடைய வார்த்தைகளாக அது இருந்து வருகிறது, சுமார் இருபது வயது நிரம்பிய ஒரு சிறு பையனாக, சுவிசேஷத்தை பிரசங்கித்தேன், இப்பொழுது எனக்கு நாற்பத் தைந்து வயதாகின்றது. அதை நான் சிறிது கூட மாற்றவில்லை, ஏனெனில் வேதாகமம் அவ்விதமாகவே இருக்கும் வரையில் அதை என்னால் மாற்றவும் முடியாது. 358. நான் அதை பிஷப்புகளுக்குள்ளும், மற்ற எல்லாவற்றுக்குள்ளும் வேர் பாய்ச்சியுள்ளேன், வார்த்தையின் படியே அதற்கு முரணாக பேசக் கூடிய யாரையும் இதுவரை நான் கண்டதில்லை. அவர்கள் கூறுவர். நல்லது, இப்பொழுது, நான் ... இந்த மதகுரு, இங்கே சில நாட்களுக்கு முன்னர், அவர், "சங்கை பிரன்ஹாம் நாங்கள் வேதாகமத்தை எடுப்பதில்லை; எங்களுக்கு சபை தான்" என்றார். அந்த மனிதனிடம் உங்களால் பேசமுடியாது. ஆனால் நீங்கள் அதை வேதாகமத்தின் மேல் அடித்தளமாக வைத்தால், அது வித்தியாசமாக இருக்கும். பாருங்கள்? 359. நான் ஜெபிக்கிறேன் தேவன்... இங்கே இருக்கின்ற என்னுடைய ஒவ்வொரு கத்தோலிக்க நண்பர்களும், மற்றும் என்னுடைய ஒவ்வொரு பிராடெஸ்டென்ட் நண்பர்களும், மேலும்... அவர்கள் இன்னுமா... எந்த... உங்கள் ஒவ்வொரு வரையும் நான் - நான் நேசிக்கிறேன். அது உண்மையா அல்லது இல்லையா என்று தேவன் அறிவார். ஜெப வரிசையில் கவனியுங்கள், குருடர்- குருடர் மற்றும் சப்பாணி, அது, "கத்தோலிக்கம்'' என்று கூறுவதில்லை . 360. இங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், மேடை... சரியாக இங்கே, ஒரு கத்தோலிக்கன், புற்றுநோயால் மரித்து கொண்டிருந்தார், அது அவரை தின்றுவிட்டிருந்தது; அவர் என்னுடைய வீட்டிற்கு வந்தார், பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார், புற்றுநோயிலிருந்து அவரை சுகப்படுத்தினார். அவர் ஒரு கத்தோலிக்கரா, இல்லையா என்று அவரிடம் அவர் கூறவில்லை; நான் அவரிடம் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அவர் வந்தார், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார். சரியாக அங்கே அந்த மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவர் லூயிவில்லில் ஒரு வர்த்தகர். ஆமாம். பாருங்கள்? 361. நீ ஒரு கத்தோலிக்கனா அல்லது இல்லையா என்று அது கேட்கவில்லை. அது உங்கள் இருதயம் தேவன் பேரில் பசி கொண்டிருக்கின்றதா என்பதேயாகும். "நீதியின் மேல் பசிதாக முள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிரப்பப்படுவார்கள்.'' அது சரியா? ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 362. ''நம்மை ஒன்ருகக் கட்டுகின்ற அந்த கட்டு ஸ்தோத்தரிக்கப் படுவதாக'' என்ற இந்த பழைமையான பாடலை எத்தனைபேர் அறிந்துள்ளீர்கள். ''நம்மைக் கட்டுகின்ற அந்த கட்டு' என்ற பாடலை நாற்பது வயதிற்கு மேலானவர்களில் எத்தனை பேர் அறிந்திருக் கிறீர்கள் நம் இருதயங்களை கிறிஸ்துவ அன்பினால் கட்டுகின்ற அந்த கட்டு ஸ்தோத்தரிக்கப்படுவதாக ஒன்றான சிந்தைகளின் ஐக்கியம் மேலுள்ளதைப் போன்றே உள்ளது. 363. உங்களுக்கு பழைய பாடல்கள் விருப்பமா? கவனியுங்கள், நான் இதைக் கூற விரும்புகிறேன், நாம் கொண்டிருக்கின்ற இந்த அதிகமான கூச்சல்களைக் காட்டிலும், இந்த பழைய பாடல்களை அதிகமாக நாம் கொண்டிருப்போமானால், சபை! மிக சரியாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். பழைய காலத்தவரால், பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்ட அந்த பழைய பாடல்களை நான் விரும்புகிறேன். 364. அங்கே கெண்டக்கி மலைகளில், வீட்டிற்கு பின்பாக உட்காரும் வழக்கத்தை கொண்டிருந்த ஒரு கறுப்பர் இன மனிதனை நான் நினைப்பதுண்டு. அவர் களைப்படையும் போது, அவர் அந்த பழைய - பழைய மரத்துண்டின் மீது உட்கார்ந்து கொண்டு, கட்டையின் மீது தன் கைகளால் தட்டுவார். அவரை சரியாக நான் நினைவில் கொண்டுள்ளேன், அவர் தலையைச் சுற்றிலும் ஒரு சிறிய வட்டமான வெள்ளை மயிர் இருந்தது. அவர் அந்த பழைய பாடலைப் பாடுவார், ஒரு பழைய பாடல்: நான் எழுந்து இயேசுவிடம் செல்லுவேன், அவர் தம்முடைய கரங்களில் என்னை அணைத்துக் கொள்வார்; என் அருமை இரட்சகரின் கரங்களில், ஓ, பத்தாயிரம் அழகுகள் அங்கே இருக்கின்றன. 365. அவ்வளவாக மெட்டு அதற்கு இல்லை. அந்த பழைய பாடலை எத்தனைப் பேர் கேட்டிருக்கிறீர்கள்? என்னே, அது அருமையானது. கவனியுங்கள் (ஒலிப்பதிவின் முடிவு - ஆசி) 2